Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 18 : உடல் பருமனால் நல்ல வரன்கள் தள்ளிப்போகிறதா..? உங்களுக்கான தீர்வை சொல்லும் மருத்துவர்...

பெண்குயின் கார்னர் 18 : உடல் பருமனால் நல்ல வரன்கள் தள்ளிப்போகிறதா..? உங்களுக்கான தீர்வை சொல்லும் மருத்துவர்...

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

எடை குறையவில்லை என்று அழுது மனதை வருத்திக் கொண்டால் மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அப்போது இனிப்புகளை உண்ணத் தோன்றும். எடை குறைவது சாத்தியமில்லாமல் போகும்.

அழுது அழுது சிவந்த கண்கள்
வீங்கிய முகம்
என்ன ஆயிற்று ஸ்ரீவித்யாவுக்கு?

ஸ்ரீவித்யாவும் அவர் தாயும் அன்று மருத்துவமனைக்கு வந்து இருந்தார்கள். ஸ்ரீவித்யா 84 கிலோ எடை இருந்தார்.
அவருடைய தாயே தொடங்கினார்.

"டாக்டர்!!! கொரோனாவின் முதல்அலையில் ( 2020) லாக் டவுனில் இருந்து வேலைக்கு செல்லவில்லை. இந்த இரண்டு வருடத்தில் எடை மிகவும் கூடி விட்டது. இப்போது நிறைய வரன்கள் வருகின்றன. இரண்டு பேர் இவள் மிகவும் குண்டாக இருப்பதாக கூறி ஒதுக்கியதில் மிகவும் மனம் உடைந்து விட்டாள். இரண்டு மூன்று மாதங்களாக ஏதேதோ உணவு முறைகளை முயற்சி செய்தும் கொஞ்சம் கூட எடை குறைய வில்லை.

அதுவும் இரண்டு நாட்களாக மிகவும் வருத்தத்தில் இருக்கிறாள். எதுவுமே சாப்பிடவில்லை. இதில் அழுகை வேறு.
அதனால் தான் உங்கள் ஆலோசனையை கேட்டு செல்லலாம் என்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

தாய் கூறியதை ஆமோதித்த ஸ்ரீவித்யா," எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் கூட எடை குறையவில்லை டாக்டர்!!!!நான் இப்படித்தான் இருக்கப் போகிறேனா நான்? எனக்கு திருமணமே ஆகாது. எல்லோரும் என்னை ஒதுக்க போகிறார்கள்" என்று மீண்டும் அழத் துவங்கினார்.

ஸ்ரீவித்யா போன்று தான் பலரும் சாப்பிடாமல் இருந்தால் எடை குறையும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது மிகவும் தவறு மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்ஸ்) குறைவான, புரோட்டீன் சத்தும் நார்ச் சத்தும் அதிகம் உள்ள உணவுப்பொருளை எடுத்துக் கொண்டால் நம்முடைய எடை குறையத் துவங்கும் .

உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு , 1500 கலோரி கொண்ட உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு அதிகமாக எடுக்கும் பொழுது, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காலையில் ஏராளமான நார்ச் சத்து நிறைந்த உணவுகளான காய்கறிகள் கீரைகள் வாழைத்தண்டு போன்றவற்றை சாலடாக எடுத்துக்கொள்ளலாம். 

மதிய உணவில் ஒரு சிறிய கப் அரிசி சோறு , காய்கறிகள் சாம்பார் கூட்டு பொரியல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப் மோர் போதுமானது.

இரவு உணவுக்கு பதிலாக புரோட்டின் கஞ்சிகளை எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறாக உணவு நிபுணர். திருமதி அபிராமியோடு சேர்ந்து ஸ்ரீவித்யாவிற்கு ஒரு உணவு அட்டவணை தயாரித்து கொடுத்தேன். அத்துடன் முடிந்தவரை ஒரு நாளில் 5000 முதல் 10000 அடிகள்(steps)வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

பெண்குயின் கார்னர் 17 : மன நோய் உள்ளவர்கள் சிகிச்சையில் இருக்கும்போது திருமணம் செய்யலாமா..? மருத்துவரின் விளக்கம்

எம்டி கலோரீஸ் (empty calories) எனப்படும் வெற்று கலோரிகள் கொண்ட உணவுகளான சாக்லேட்டுகள் கேக் ஐஸ்கிரீம் போன்றவற்றை இரண்டு மூன்று மாதங்களுக்கு வீட்டிற்குள்ளேயே கொண்டு வராதீர்கள். வாங்காதீர்கள். என்று அதை பார்க்கும்போது சிலருக்கு அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் வரலாம். அதை தவிர்க்க ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளான நிலக்கடலை, பாதாம் ,பிஸ்தா, போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

எடை குறையவில்லை என்று அழுது மனதை வருத்திக் கொண்டால் மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அப்போது இனிப்புகளை உண்ணத் தோன்றும். எடை குறைவது சாத்தியமில்லாமல் போகும்.
அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, தொடர்ந்து நம்பிக்கையோடு, மேலே சொன்ன உணவு முறைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது கட்டாயம் எடை குறைவதை நான் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீவித்யாவும் அதிக புரோட்டீன் குறைந்த அளவு மாவுச்சத்து என்ற உணவு முறையை தொடங்கினார். இரவு உணவை தவிர்த்துவிட்டு( nutrimix high protein ) நியூட்ரிமிக்ஸ் ஹைபுரோடீன் கஞ்சியை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். முதல் மாதத்தில் 4 கிலோ எடை குறைந்தது. மூன்று மாதங்களில் 12 கிலோ முதல் 14 கிலோ வரை குறைந்தது. மூன்று மாதங்கள் கழித்து பார்த்தபோது 69-70 கிலோ இருந்தார். மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

" டாக்டர் !! இப்பொழுது எப்படி எடை குறைக்க வேண்டுமென்று ,எனக்கு நன்றாக புரிந்து விட்டது. மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" மிக மிக நன்றி!!!! மீண்டும் வேலைக்கும் செல்ல துவங்கி விட்டேன் "என்று நம்பிக்கையோடு கூறிய போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெண்குயின் கார்னர் 16 : திருமணத்திற்கு முன்பே சர்க்கரை நோயா ? இதனால் கர்ப்பத்தில் சிக்கல் உண்டாகுமா ? மருத்துவர் விளக்கம்

' மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பது எடைகுறைப்புக்கு மிகமிக முக்கியம். ஏனென்றால் மனக்கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சாத்தியமாகும்.

" நிறைய நடந்தால் நீங்கள் நினைப்பது நடக்கும் "என்று எடை குறைக்க விரும்புவர்களுக்கு எப்பொழுதும் நான் கூறும் வசனம்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Marriage Life, Obesity, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி