ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

264 மணி நேரம் தூங்காமல் இருந்து சாதனை படைத்த நபர் : பல ஆண்டுகள் கழித்து இப்போது அவதி..!

264 மணி நேரம் தூங்காமல் இருந்து சாதனை படைத்த நபர் : பல ஆண்டுகள் கழித்து இப்போது அவதி..!

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஒருபக்கம் ஆய்வு, இன்னோரு பக்கம் உலக சாதனைக்கான போட்டி என்ற வகையில் இந்த முயற்சி நடைபெற்றது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் சின்ன, சின்ன பந்தயங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு எல்லோரிடத்திலும் இருக்கும். குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டிக் காண்பிப்பது, எண்ணிக்கையில் கூடுதலாக பரோட்டா சாப்பிடுவது போன்ற பந்தயங்களில் பங்கேற்பார்கள்.

பெரும்பாலும் இந்த அர்த்தமற்ற பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெறுவதால் எந்தவித பலனும் ஏற்படாது. ஆனால், மற்றவர்கள் முன்னிலையில் வெற்றியாளராக உணரும்போது கிடைக்கின்ற மன மகிழ்ச்சிக்காக இத்தகைய உத்திகளை கையாளுவார்கள். இது ஒரு வகை நெகடிவ் பப்ளிசிட்டி ஆகும்.

நெகடிவ் பப்ளிசிட்டியை முன்வைத்து உலக அளவில் சாதனை படைத்தவர்களும் உண்டு. அப்படித்தான் 1963ஆம் ஆண்டில் ஒரு கூட்டம் கிளம்பியது. அப்போது 17 வயது மட்டுமே நிரம்பிய பள்ளி மாணவர்கள் அவர்கள். தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படும் நபர்களுக்கு பின்னாளில் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆராயத் தொடங்கினர்.

இந்த ஆய்வில் ரேண்டி கார்டனர் மற்றும் ப்ரூஸ் மெக்லிஸ்டர் ஆகிய இளைஞர்களும் கலந்து கொண்டனர். இளம் வயதில் சவால் மிகுந்த போட்டியில் இவர்கள் பங்கேற்றனர். அதாவது நீண்ட நேரத்திற்கு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்பதே அந்த போட்டி.

அதற்கு முன்பு 260 மணி நேரம் வரையிலும் தூங்காமல் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. ஏடிஜே ஹோனோலூலு என்பவர் அந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே அந்த இளைஞர்களின் குறிக்கோளாக இருந்தது.

Also Read : விராட் முதல் ஷாருக்கான் வரை... மன அழுத்தம் குறித்து பிரபலங்களின் ஓப்பன் டாக்..!

ஒருபக்கம் ஆய்வு, இன்னோரு பக்கம் உலக சாதனைக்கான போட்டி என்ற வகையில் இந்த முயற்சி நடைபெற்றது. போட்டியில் மெக்லிஸ்டர் பின் வாங்கிய போதிலும், ரேண்டி கார்டனர் தனது முயற்சியை கைவிடவில்லை. குறிப்பாக, தூங்காமல் இருந்த 3வது நாளிலேயே அவருக்கு பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.

பிரம்மை பிடித்ததைப் போன்ற எண்ணம், கவனத்திறன் குறைபாடு, ஞாபகசக்தி குறைவு போன்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார். இருப்பினும் முயற்சியில் இருந்து பின் வாங்கவிலை. சரியாக 11 நாட்கள் அல்லது 264 மணி நேரம் தூங்காமல் இருந்து சாதனை படைத்தார். அவரது மூளையை ஸ்கேன் செய்தபோது, அதன் சில பகுதிகள் தொடர்ந்து விழித்துக் கொண்டே இருந்ததாம்.

இதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்டனர் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அந்த சாதனை முடிந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது கார்டனர் மிகுந்த மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சாதனை முயற்சியின்போது எதிர்கொண்ட அதே பிரச்சனைகள் இப்போதும் வந்து போவதாக கவலையுடன் குறிப்பிடுகிறார் அவர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sleep