Home /News /lifestyle /

பல வருடங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட நபர்.! அதிர்ச்சி தரும் காரணத்தை கண்டறிந்த மருத்துவர்கள்

பல வருடங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட நபர்.! அதிர்ச்சி தரும் காரணத்தை கண்டறிந்த மருத்துவர்கள்

Breathing Issues

Breathing Issues

Breathing Problem | ரைனோஸ்கோபி-யில் குறிப்பிட்ட நபரின் வலது நாசித் துவாரத்தில் கடினமான, வெண்மை நிற பொருள் ஒன்று காணப்பட்டது. பின்னர் பாராநேசல் சைனஸின் கம்ப்யூட்டட் டோமோகிராஃபி, நாசி குழியில் இன்வெர்ட்டட் எக்டோபிக் பல் வளர்ந்திருப்பதை காட்டியது.

மேலும் படிக்கவும் ...
நீண்ட நாட்களாக மூச்சுத்திணறல் பிரச்சனையில் இருந்து வந்த ஒரு நபர் அதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்து சொன்ன போது திகைத்து போனார் மற்றும் அதிர்ச்சியும் அடைந்தார். அந்த நபருக்கு மூச்சு திணறல் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் அவரது மூக்கில் பல் வளர்ந்தது தான். இந்த அசாதாரண மருத்துவ நிலையில், குறிப்பிட்ட அந்த நபரின் வலது நாசியில் வளரும் பல் காரணமாகவே அவர் நீடித்த சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் 38 வயதான குறிப்பிட்ட நபரின் மருத்துவர்களான சாகர் கன்னா மற்றும் மைக்கேல் டர்னர் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஆய்வில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அரிய நிலை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட தகவலின் படி, மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த 38 வயதான ஆண் ஒருவர் நியூயார்க்கின் மவுண்ட் சினாய் நகரில் உள்ள ஒரு காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவமனைக்கு சென்றார். வலது நாசி வழியே சுவாசிப்பதில் தனக்கு சிரமம் இருப்பதாக மருத்துவர்களிடம் கூறினார். கடந்த சில மாதங்களாகவே இந்த மூச்சுத்திணறல் பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாகவும் மருத்துவரிடம் கூறினார்.

முதற்கட்ட பரிசோதனையில் அவரது செப்டமில் (septum) ஒரு டீவியேஷன் (deviation) இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது மூக்கின் நாசி குழியை பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை இடம் பெயர்ந்திருந்தது. மேலும் பரிசோதனையில் செப்டமின் பின்புறத்தில் கால்சிஃபைட் அப்ஸ்ட்ரக்ஷன் (calcified obstruction) இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மூக்கின் உட்புறத்தை ஆய்வு செய்யும் கருவியான rhinoscope மூலம் பரிசோதித்ததில் அந்த நபரின் மூக்கினுள் கடினமான ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. பின் இறுதியாக செய்யப்பட்ட ஒரு CT ஸ்கேன் ஆச்சரியமான நோயறிதலை வெளிப்படுத்தியது. ஆம் அந்த நபரின் நாசி குழிக்குள் (nasal cavity) ஒரு பல் வளர்ந்திருப்பதை CT ஸ்கேன் வெளிப்படுத்தியது. மருத்துவ மொழியில் அந்த நபரின் மூக்கின் உள்ளே "இன்வெர்ட்டட் எக்டோபிக் பல்" வளர்ந்து கொண்டிருந்தது.

Also Read : மருந்துகளால் அழிக்க முடியாமல் பலம்பெறும் பாக்டீரியாக்கள்..

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் இது பற்றி கூறி இருக்கும் மருத்துவர்கள் சாகர் கன்னா மற்றும் மைக்கேல் டர்னர் ஆகியோர், ரைனோஸ்கோபி-யில் குறிப்பிட்ட நபரின் வலது நாசித் துவாரத்தில் கடினமான, வெண்மை நிற பொருள் ஒன்று காணப்பட்டது. பின்னர் பாராநேசல் சைனஸின் கம்ப்யூட்டட் டோமோகிராஃபி, நாசி குழியில் இன்வெர்ட்டட் எக்டோபிக் பல் வளர்ந்திருப்பதை காட்டியது. பின்னர் ஓரல் மற்றும் ஓட்டோலரிங்கோலாஜிக் அறுவை சிகிச்சை (oral and otolaryngologic surgery) மூலம் மருத்துவர்கள் அந்த பல்லை அகற்றினர். அறுவைசிகிச்சை செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, நோயாளியின் நாசி அடைப்பு பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்பட்டன என்று ஆய்வு வெளிப்படுத்தியது, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் எதுவும் இல்லை. நோயாளி இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Breathing problem, Health

அடுத்த செய்தி