தீவிர உடலுறவின்போது உயிரிழந்த நபர்.. போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் அதிர்ச்சி தகவல்..

மாதிரி படம்

ஆப்பிரிக்காவில் தீவிர உடலுறவின்போது ஆண் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
ஆப்பிரிக்காவில் தீவிர உடலுறவின்போது ஆண் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலாவியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Phalombe பகுதியைச் சேர்ந்த சார்ல்ஸ் மஜாவா என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென மயங்கிய அவர், உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சார்ல்ஸ் மஜாவா உயிரிழப்பு குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

செக்ஸின்போது சார்ல்ஸ் மஜாவா உயிரிழந்ததை உறுதி செய்த காவல்துறையினர், அந்த பெண்ணுக்கு இதில் தொடர்பில்லை என உறுதி செய்து, அவரை கைது செய்யவில்லை. சார்ல்ஸ் இறப்பு குறித்து ஆய்வு செய்த மிகோவி ஹெல்த் சென்டர், தீவிர புணர்ச்சியே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்டறிந்துள்ளனர். தீவிர புணர்ச்சியின்போது மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு இதுபோன்ற திடீர் மரணத்துக்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஆரோக்கியமான வாழ்வுக்கு உடலுறவு மிக மிக அவசியம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதய ஆரோக்கியத்துக்கும், உடலுறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், சரியான கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மிக மிக குறைவாகவே ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்களுக்கு மனதளவில் பயம் உருவாகி அதுவே மாரடைப்புக்கு காரணமாக அமைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலுறவு வைத்துகொள்பவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், வாழ்க்கை முறையும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளில் உடலுறவு முக்கிய பங்கு வகிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோல் நாக்பூரில் உடலுறவில் ஈடுபட்ட ஆண் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். நாக்பூர் லாட்ஜ் ஒன்றில் அவருக்கு தெரிந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

கை மற்றும் கால்களை நாற்காலியில் கட்டியவாறு வித்தியாசமான முறையில் பெண்ணுடன் அந்த நபர் உடலுறவை மேற்கொண்டுள்ளார். பாலியல் உணர்வை அதிகரிக்க கழுத்து பகுதியை சுற்றியவாறு நைலான் கயிற்றையும் பயன்படுத்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் கழிவறைக்கு செல்லும்போது, நாற்காலியில் கட்டியிருந்த கயிறு அந்த நபரின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Arun
First published: