Mali 9 Babies: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

குழந்தை

ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு அரிய நிகழ்வாக கருதப்பட்ட நிலையில், அவர் ஒன்பது குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

  • Share this:
    மாலியில் 25 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

    மாலியன் அரசாங்க அறிக்கையின் படி, ஒன்பது குழந்தைகளும் தாயும் "நன்றாக இருக்கிறார்கள்". மொராக்கோ மற்றும் மாலியில் செய்யப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், ஹலிமா சிஸ் ஏழு குழந்தைகளை பிரசவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு அரிய நிகழ்வாக கருதப்பட்ட நிலையில், அவர் ஒன்பது குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

    ”தாய் மற்றும் குழந்தைகள் நன்றாக இருப்பதாக” மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி-யிடம் தெரிவித்துள்ளார். சிஸ்ஸே, ஐந்து பெண் குழந்தைகளையும், நான்கு சிறுவர்களையும் பெற்றெடுத்ததாகவும், ஒன்பது குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டதாகவும் மாலியன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்னும் சில வாரங்களில் தாயும் குழந்தைகளும் மாலிக்குத் திரும்புவார்கள் என்றும் சிபி கூறினார். உள்ளூர் ஊடக அறிக்கைகள் சிஸ்ஸே மற்றும் அவரது குழந்தைகளின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தன.

    முன்னதாக, மாலியன் அரசாங்கம் சிஸ்ஸை மொராக்கோவிற்கு மார்ச் 30 அன்று மாற்றியது. எவ்வாறாயினும், மொராக்கோ சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரச்சிட் கெளத்ரி, நாட்டின் மருத்துவமனை ஒன்றில் இதுபோன்ற பிரசவம் நடைபெறுவது குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: