Home /News /lifestyle /

மெனோபாஸ் பற்றி தெரியும்... ஆண்ட்ரோபாஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிகுறிகள், சிகிச்சை விவரங்கள்..!

மெனோபாஸ் பற்றி தெரியும்... ஆண்ட்ரோபாஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிகுறிகள், சிகிச்சை விவரங்கள்..!

ஆண்ட்ரோபாஸ்

ஆண்ட்ரோபாஸ்

பெண்களுக்கு உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் பிரச்சனைகள், உடலியல் மாற்றங்கள் ஆண்களுக்கும் உண்டாகும். பெண்களைப் பொறுத்தவரை இந்த ஒவ்வொரு மாதமும் ஓவலுஷன் காலத்தில் இந்த மாற்றம் வெளிப்படும். ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய நீண்ட காலம் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலம் தான் மெனோபாஸ் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவதற்கு முன்பே அதற்கான பல்வேறு அறிகுறிகள் தோன்றும். இதே போல, ஆண்களுக்கும் மெனோபாஸ் ஏற்படும் என்பது பற்றி தெரியுமா? இதன் பெயர் ஆண்ட்ரோபாஸ். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் வயதாக வயதாக குறையும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இது உண்டாகும். இதன் முழுவிவரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆண்களில் ஏற்படும் மெனோபாஸ் (andropause)

பெண்களுக்கு உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் பிரச்சனைகள், உடலியல் மாற்றங்கள் ஆண்களுக்கும் உண்டாகும். பெண்களைப் பொறுத்தவரை இந்த ஒவ்வொரு மாதமும் ஓவலுஷன் காலத்தில் இந்த மாற்றம் வெளிப்படும். ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய நீண்ட காலம் ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஆண்கள் ஹார்மோன் உற்பத்தி குறையத் துவங்கும். அதாவது, ஒரேடியாக இந்த உற்பத்தி குறைந்துவிடாது மற்றும் நின்று போகாது. வேறு சில உடல் நலக் குறைபாடுகள், நோய்கள், ஆகியவற்றால் கூட இது ஏற்படும்.



ஆண்ட்ரோபாஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?

ஆண்கள் மெனோபாஸ் பின்வரும் காரணங்களால் ஏற்படுகின்றன.

1. வயது
2. நீரிழிவு நோய்
3. விபத்து
4. தீவிரமான நோய்களுக்கு நாட்பட்ட சிகிச்சை
5. செக்ஸ் ஹார்மோன் பைண்டிங் குளோபுளின் என்ற ஹார்மோனின் அதிக உற்பத்தி

உங்கள் ஆணுறுப்பின் நீளத்தை கண்டறிவதில் குழப்பமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி அளவிடுங்க

ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவதற்கான அறிகுறிகள் :

ஆண்ட்ரோபாஸ் என்பது வயதாகும் ஆண்களில் அதிகம் காணப்படும் என்றாலும், வேறு சில அறிகுறிகள் மூலம், இளம் வயதிலேயே கூட ஏற்படலாம்.

1. உடலில் கொழுப்பு சத்து அதிகம் சேர்வது
2. விரைப்புத்தன்மை குறைபாடு
3. பாலியல் ஹார்மோன் என்பதால், இது குறையும் போது பாலியல் உறவின் மீது ஈடுபாடு இருக்காது அல்லது குறையும்
4. தூக்கமின்மை
5. மன உளைச்சல்
6. ஆற்றல் குறைவு
7. நாள் முழுவதும் சோர்வு, வறண்ட சருமம்,
8. அடிக்கடி வியர்த்து போவது
9. தசை பலவீனம்
10. கவனச்சிதறல்

ஒரு சில ஆண்களுக்கு, இதயம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும்.

அறிகுறிகள் மற்றும் ஹார்மோன் சோதனைகள் மூலம், இந்த பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.



ஆண்களின் மெனோபாஸ் சிகிச்சைகள் :

வயதாகும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவால் ஏற்படும் ஆண்ட்ரோபாஸுக்கு சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும், 30, 40 களில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். அவர்களுக்கான சிகிச்சை முறைகள் இங்கே.

டெஸ்டோஸ்டிரோன் பேட்ச்சுகள் சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தோலில் இதை ஒட்டிக்கொள்ளும் போது, அதன் வழியாக உடலுக்கு ஹார்மோன் கிடைக்கும். அதே போல, டெஸ்டோஸ்டிரோன் ஜெல் அப்ளை செய்வதன் மூலம் கூட பயன்பெறலாம். ஒவ்வொரு முறை ஜெல்லை அப்ளை செய்த பின்பும், கைகளை நன்றாக கழுவவும்.

புறக்கணிக்க கூடாத எலும்பு புற்றுநோயின் முக்கியமான 10 அறிகுறிகள்

ஹார்மோன் சப்ளிமென்ட்டுகளை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

இளம் மற்றும் நடுத்தர வயதினர், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறினாலே, மெனோபாஸ் அவ்வளவு சீக்கிரம் பாதிப்பை ஏற்படுத்தாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Men's health, Menopause

அடுத்த செய்தி