ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களே 30 வயதை கடந்துட்டீங்களா..? குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் இந்த பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க...

ஆண்களே 30 வயதை கடந்துட்டீங்களா..? குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் இந்த பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க...

ஆண்களின் பாலியல் ஆரோக்கியம்

ஆண்களின் பாலியல் ஆரோக்கியம்

ஆய்வில் 30% ஆண்களுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் அல்லது குழந்தை பிறப்பில் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலியல் ஆரோக்கியம், குழந்தை பெறும் தன்மை, மலட்டுத்தன்மை ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, எப்பொழுதுமே பெண்களை மட்டும் தான் பெரிதாக குறிப்பிடுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ஆண்களுக்கும் பாலியல் ரீதியான சில பிரச்சனைகள் இருக்கிறது. ஆண்களுடைய பாலியல் ஆரோக்கியமும் (Sexual and reproductive health) நன்றாக இருந்தால்தான் பாலியல் உறவில் ஈடுபட முடியும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆண்களுக்கும் பாலியல் ரீதியான குறைபாடுகள் இருந்தால், குழந்தை பெறும் தன்மையை பாதிக்கும். சமீப காலமாக ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாமதமான திருமணம், குழந்தை பிறப்பு தள்ளிப் போடுவது, ஸ்ட்ரெஸ், குடும்பச்சுமை, உள்ளிட்ட காரணத்தால் 30 ப்ளஸ் வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஆண்கள், தங்களுடைய பாலியல் ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பது மிக மிக அவசியம்.

30க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வரக்கூடிய பாலியல் நோய்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அதை எப்படி தடுப்பது ஆகியவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இருபதில் ஒரு ஆணுக்கு பாலியல் ரீதியான குறைபாடு அல்லது பிரச்சனை இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆனால் சமீபமாக நடத்தப்பட்ட ஆய்வில் 30% ஆண்களுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் அல்லது குழந்தை பிறப்பில் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

30களில் இருக்கும் ஆண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகள்

விறைப்புத்தன்மை குறைப்பாடு:

பல காரணங்களால் ஒரு ஆண் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். பாலியல் உறவில் ஈடுபடும் போது ஆணுறுப்பு தேவையான அளவுக்கு விறைப்புத் தன்மை அடையாது. அதிக அளவு மன அழுத்தம், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவு மற்றும் ப்ரோஸ்டேட் அளவு அதிகரிப்பது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Also Read : ஆண்கள் அந்தரங்க உறுப்பை பராமரிப்பது ஏன் அவசியம்..? சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

விந்து வெளியேற்றம்:

பல ஆண்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ப்ரீமெச்சூர் எஜாக்குலேஷன் என்று கூறப்படும் விந்து வெளியேறுதல். உடலுறவில் ஈடுபடும் பொழுது, ஒரு ஆண் அல்லது பெண் ஆர்காசம் அடையும் முன்பே, விந்து வெளியேறும். இது ஆண்களிடையே மிகவும் பரவலாக காணப்பட்டாலும், இந்த பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகுவது உகந்தது.

குறைவான விந்தணு எண்ணிக்கை:

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு என்ன பிரச்சனை என்று பார்க்கும் போது குறைவான விந்தணுக்கள் எண்ணிக்கை தான் முதல் காரணமாக கூறப்படுகிறது. எவ்வாறு பெண்களுக்கு கருமுட்டையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பெண்களால் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படுகிறதோ, அதே போல விந்தணுக்களில் பிரச்சனை அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு ஆகியவை இருக்கும் போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் குறைவு:

டெஸ்டோஸ்டீரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைபாடு ஆண்களின் ஃபெர்டிலிட்டியை பாதிக்கும். டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் ஆண்களுக்கு சுரக்கவில்லை அல்லது குறைவாக சுரக்கிறது என்றால், அது விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு வழிவகுக்கும். அது மட்டும் இல்லாம, ஆண்களுக்கு பாலியல் உணர்வே தோன்றாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மன அழுத்தத்தை உண்டாக்கி, தசைகளின் வலுவையும் குறைக்கிறது. இதனால் ஆண்களால் இயல்பாக, பாலியல் உறவில் ஈடுபட முடியாது.

பாலியல் நோய்த்தொற்று:

ஸிஃபிலிஸ், ஹெப்படிடிஸ், கொனோரியா உள்ளிட்ட பலவிதமான பாலியல் நோய்கள் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தி, மலட்டுத்தன்மை ஏற்படாமல் தடுக்க முடியும்?

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் மாதவிடாய் ஆரோக்கியமும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மிக மிக முக்கியம். டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்களின் உடலில் குறைந்து விட்டாலே அது இயற்கையாக பாலியல் ஆர்வத்தை குறைத்துவிடும். பாலியல் உறவில் ஈடுபாடு தோன்றாது. அது மட்டுமில்லாமல் முடி இழப்பு, ஞாபகமறதி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்.

Also Read :  ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவது இயல்பானதா..? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

மது அருந்துவது ஆண்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். மது அருந்துவதன் மூலம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், libido என்று கூறப்படும் பாலியல் ஆர்வமும் குறையும்.

ஆண் மற்றும் பெண் இருவருக்குமே நல்ல தூக்கம் பல விதமான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். ஆனால் சரியாக தூக்கம் இல்லாமல் போனால், அது மலட்டு தன்மையை அதிகரிக்கும். எனவே தினமும் குறைந்தது 6 – 7மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும்.

பாலியல் ரீதியாக எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகிவிடும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. மருத்துவரை அணுகுவதற்கு தயங்கவே கூடாது. பாலியல் ரீதியான விஷயங்களை, பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பலரும் இப்போது வரை தயங்குகிறார்கள். இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற கண்ணோட்டம் இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் காரணமாக வைத்துக் கொண்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் கூறாமல் தவிர்க்க கூடாது. சில நேரங்களில் பாலியல் பிரச்சனைகள் நோய் அறிகுறியாக இருந்து, மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெறுவது அவசியம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Male infertility, Sexual Health