Home /News /lifestyle /

ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது எது..? இந்த வயதை தாண்டிவிட்டால்...

ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது எது..? இந்த வயதை தாண்டிவிட்டால்...

கருவுறுதல்

கருவுறுதல்

உயிரியல் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஒரு ஆண் தனது 20-களின் பிற்பகுதியிலிருந்து 30-களின் துவக்கம் வரை தந்தையாவதற்கு மிகவும் பொருத்தமான காலகட்டம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருவுறுதலில் வயது காரணமாக ஏற்படும் சிக்கல்கள் மற்றும் விளைவுகளை குறைக்க பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் குறிப்பிட்ட வயதிற்கு முன்பே குழந்தைகளை பெற்று கொண்டு விட வேண்டும். அது தான் விவேகமானது.

குழந்தை பேறு என்று வரும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் (biological clock) முக்கியம் என்பது நிறைய ஆண்களின் நினைப்பு. ஆனால் ஆண்களின் வயதுக்கு ஏற்ப அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைகிறது. உயிரியல் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஒரு ஆண் தனது 20-களின் பிற்பகுதியிலிருந்து 30-களின் துவக்கம் வரை தந்தையாவதற்கு மிகவும் பொருத்தமான காலகட்டம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் கூட ஒரு குழந்தைக்கு ஆண்களால் தந்தையாக முடியும். கின்னஸ் உலக சாதனையின் படி 92 வயதில் ஒரு நபர் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். இருப்பினும் ஒரு ஆணின் வயது தம்பதியரின் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு கருவுறுதல் விஷயத்தில் வெற்றி வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவது நிற்காது என்றாலும் பெண்களை போல ஆண்களுக்கு 'உயிரியல் கடிகாரம்' இல்லை என்று அர்த்தம் இல்லை. ஒரு ஆணுக்கு வயதாகும் போது அவனது விந்தணு மரபணு மாற்றங்களுக்கு உட்படுகிறது. இந்த நிலை ஆணுடைய விந்தணுவின் டிஎன்ஏ சேதமடைவதற்கான சாத்திய கூறுகளை அதிகரிக்கிறது. இது கருவுறுதலை பாதிப்பதை தவிர குறிப்பிட்ட ஆணிற்கு எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாக்கங்களை உருவாக்கலாம்.வயதான தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் கொண்டவையாக பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள். சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்று கொள்ளும் ஆண்களின் சந்ததியினர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் நோயை உருவாக்கும் அபாயத்தை ஐந்து மடங்காக கொண்டுள்ளது தெரிய வந்தது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு : ஆய்வு தகவல்

கருவுறுதலை தடுக்கும் வாழ்க்கை முறை காரணிகள்..

மோசமான உணவு பழக்கங்கள், புகை மற்றும் மது பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவை ஆண்களின் விந்தணு தரத்தை பாதிக்கும் முக்கிய வாழ்க்கை முறை காரணிகளாக உள்ளன. ஸ்பெர்ம் மொபிலிட்டி (Sperm motility ) என்பது பெண்ணின் இனப்பெருக்க பாதை வழியே சென்று கருமுட்டையை அடைவதற்கும் கருவுறுவதற்குமான விந்தணுவின் திறனை குறிக்கிறது. புகைப்பழக்கம் என்பது விந்தணுக்களின் தரம் குறைவது மற்றும் அவற்றின் அளவு மற்றும் ஊர்ந்து செல்லும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது.சிறந்த விந்தணுவை உற்பத்தி செய்ய...

கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான சிறந்த விந்தணுவை உற்பத்தி செய்ய ஆண்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதிக எடை கொண்டிருந்தால் எடையை குறைப்பது கருத்தரிப்பதை எளிதாக்கும். விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அதை படிப்படியாக கைவிடுவதே சிறந்த வழி.

தவிர ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுவுகளும் விந்தின் தரம் அதிகரிக்க உதவும். கீழ் இடுப்பு மற்றும் மடி பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கும் போது சிறந்த விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே ஆண்கள் இந்த பகுதிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்காக மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும், லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதயும், வெப்பமான சூழலில் அதிக நேரம் செலவிடுவது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility, Male infertility

அடுத்த செய்தி