ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களுக்கு பாலியல் நோய்த்தொற்று இருந்தால் அப்பாவாகும் வாய்ப்பு குறைவு : ஷாக் கொடுக்கும் ஆய்வு..!

ஆண்களுக்கு பாலியல் நோய்த்தொற்று இருந்தால் அப்பாவாகும் வாய்ப்பு குறைவு : ஷாக் கொடுக்கும் ஆய்வு..!

ஆண் மலட்டுத்தன்மை

ஆண் மலட்டுத்தன்மை

Male Infertility : முறையற்ற பாலியல் உறவுகள், பாதுகாப்பில்லாத பாலியல் உறவில் ஈடுபடுவது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருப்பது மற்றும் பாலியல் நோய் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது ஆகிய பாலியல் ரீதியான நோய்த்தொற்றுகள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒரு தம்பதிக்கு திருமணமாகி சில ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்கு பெரும்பாலும் பெண்களைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். கர்ப்பப்பையில் கோளாறு, கருமுட்டை ஆரோக்கியமின்மை, நீர்க்கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பெண்களையே குறிக்கின்றன. ஆனால் ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் போவதற்கு ஆண்களும் காரணமாக இருக்கின்றனர்! பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பது போலவே ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை இருக்கிறது.

அதாவது மேல் இன்ஃபெர்டிலிட்டி என்று கூறப்படும் மலட்டுத்தன்மை பாதிப்பு. குறிப்பாக பாலியல் நோய்த்தொற்று ஆபத்து ஏற்பட்டால் ஆண்களுக்கு அப்பாவாகும் வாய்ப்பு குறைகிறது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

முறையற்ற பாலியல் உறவுகள், பாதுகாப்பில்லாத பாலியல் உறவில் ஈடுபடுவது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருப்பது மற்றும் பாலியல் நோய் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது ஆகிய பாலியல் ரீதியான நோய்த்தொற்றுகள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் ஒன்றுதான் ஆண்களுக்கான மலட்டுத்தன்மை. பாலியல் ரீதியாக ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் ஆண்களின் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கிறது.

கொனோரியா

கொனோரியா என்பது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பாலியல் தொற்றாகும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி கொனோரியா என்பது ஆணுறுப்பில் ஏற்படக்கூடிய வலி நிறைந்த தொற்றை குறிக்கிறது. இது ஆண்களின் விதைப்பையை பாதிப்பதால் மலட்டுத்தன்மை உண்டாக்கும் அபாயம் இருக்கின்றது. ஆனால் இந்த நோயை எளிதாக ஆன்டிபயாடிக் மருந்துகளை வைத்து குணப்படுத்த முடியும்.

Also Read : இரவில் தூங்காமல் இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

க்ளாமிடியா

கிளாமிடியா என்பது ஒரு பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய பாக்டீரியல் தொற்று ஆகும். ஆனால் ஆண்களுக்கு இது அரிதாகவே பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அரிதாக ஏற்படக்கூடிய இந்த தொற்று ஆண்களை பாதித்தால் ஆண்களுடைய விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கும். இதனால் ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கிளாமிடியா நோய் தாக்கினால் எச்ஐவி பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது.

சிபிஃலிஸ்

சிபிலிஸ் என்பது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதாக பரவக்கூடிய ஒரு தொற்று ஆகும். சிபிலிஸ் sores மீது நேரடியாக ஒருவர் வெளிப்படும் பொழுது அது எளிதாக மற்றவருக்கு தொற்றி விடும். இது பிறப்புறுப்பு, ஆணுறுப்பு, பின்பகுதி, ரெக்டம் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட ஆண் பெண் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்து, குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் குறைகிறது.

Also Read : பெண்களே உஷார்... பிறப்புறுப்பு சுகாதாரத்தில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

ஜெனிட்டல் ஹெர்பஸ்

ஹெர்பஸ் என்பது மிகவும் பரவலான ஒரு நோய்த்தொற்று ஆகும். இது உடலில் பல்வேறு இடங்களில் பரவக்கூடும். ஆனால் ஜெனிடல் ஹெர்பஸ் கொஞ்சம் ஆபத்தானது. ஆண்களை பாதிக்கக் கூடிய இந்த வைரஸ் தொற்று, ஆணின் பிறப்புறுப்புப் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் கட்டிகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக ஆண்குறி, ஸ்க்ரோட்டம் மற்றும் பிட்டம் ஆகிய பகுதிகளில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் போன்று காணப்படும்.

இது தீவிரமான வைரஸ் தொற்று என்பதால் இந்தத் தொற்றை சரி செய்வதற்கு மாத்திரைகள் கிடையாது. ஆனால் ஆன்டிவைரல் மருந்துகளை கொண்டு இது தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வைரஸ் தொற்று நேரடியாக ஆண்களின் மலட்டுத்தன்மை பாதிக்கிறது என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை என்றாலும், இது விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எச்ஐவி தொற்று

எச்ஐவி நோய் தொற்று ஒரு நபரின் உடலை, ஆரோக்கியத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். HIV நோய் தொற்று என்பது நேரடியாக உயிரை எடுக்காமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சீர்குலைத்து பல்வேறு நோய்களை வரவழைக்கும். உடலுடைய நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக அழிந்து போய் தீவிரமான பாதிப்புகளால் மலட்டுதன்மை ஏற்பட்டு விடும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Male infertility