Home /News /lifestyle /

குழந்தையின்மைக்கு வயதும், வாழ்க்கை முறையும்தான் காரணமா..? இதை தடுக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை

குழந்தையின்மைக்கு வயதும், வாழ்க்கை முறையும்தான் காரணமா..? இதை தடுக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை

குழந்தையின்மை

குழந்தையின்மை

நேரமும் கருவுறுதலும் யாருக்கும் காத்திருக்காது என்பதை நினைவில் கொள்வது சிறந்தது.

இந்தியாவில் குழந்தையின்மை என்னும் பிரச்சனையானது சமீப காலமாக அதிகமாக தலைதுக்கியுள்ளது. அதற்கு புதிது புதிதாக உதயமெடுக்கும் கருத்தரித்தல் மையங்களே சாட்சி. இது ஒரு நகர்ப்புறத்தில் நடக்கும் விஷயம் மட்டுமல்ல. புனேவில் உள்ள லுல்லாநகர், மதர்ஹுட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவா டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “இப்போது இளம் தம்பதிகளிடையே குழந்தையின்மை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

குழந்தையின்மை தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இனப்பெருக்க தொழில்நுட்பத்தின் (ART) பயன்பாடும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு தெளிவான காரணம் இல்லை. ஆனால் பல காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம் “ என்கிறார்.

மும்பை NOVA IVF கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குநர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ரிச்சா ஜக்தாப் சில விஷயங்களை மேற்கோள் காட்டுகிறார் “தம்பதிகள் தங்கள் கல்வி, தொழில் தேர்வுகள் மற்றும் சமூக கடமைகள் காரணமாக கர்ப்பத்தை தாமதப்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் கருவுறுதல் என்பது வயதுடன் தொடர்புடையது. அதேபோல் ஆண்களைப் பொறுத்த வரையில், வயது ஏற ஏற விந்தணுக்களின் தரம் குறையும். எனவே இருபாலருக்கும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் 35 வயதுக்குட்பட்டதாக இருக்கிறது “ என்கிறார்.

இது தவிர, வயது முதிர்ச்சியுடன் சேர்ந்து, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய நோய்களின் வாய்ப்புகள் அதிகரித்து குழந்தையின்மைக்கு வழிவகுக்கின்றன. எண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), கருப்பை குழாய் அடைப்பு, பாலியல் செயலிழப்பு, ஹார்மோன் கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், pelvic தொற்று மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிற காரணிகளும் பெண்களில் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கின்றன.இவை மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் பெண்களின் தீவிர மன அழுத்தமும் அவர்களின் கருவுறுதலை பாதிக்கும். இந்த மன அழுத்தமானது பெண்களில் அண்டவிடுப்பை பாதிக்கிறது மற்றும் ஆண்களில் விந்தணு உற்பத்தி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கிறது. இந்த மன அழுத்தத்தால் உருவாகும் புகைபிடித்தல், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் ஆண் மற்றும் பெண் இருவரின் கருவுறுதலை பாதிக்கிறது.

இதனால் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தும். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கும் மற்றும் பெண்களின் முட்டையின் தரத்தை பாதிக்கலாம். அதிக மது அருந்துதல் பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது. தொடர்ந்து உட்கார்ந்திருப்பது, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் ஜங்க் ஃபுட் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து இறுதியில் கருவுறாமைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கான ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்

தினசரி உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளை பேணுகிறது. எனவே, தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

பம்பரமாய் சுழன்றுவரும் பெண்கள்… குடும்ப வாழ்க்கையையும் பணியையும் பேலன்ஸ் செய்வது எப்படி?

மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஓய்வெடுக்கவும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி ஒருவரின் கருவுறுதலில் எதிர் விளைவை ஏற்படுத்தும். அதிகமாக உடற்பயிற்சி செய்வது இனப்பெருக்க அமைப்பை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே, வொர்க் அவுட் செய்யும் போது அதிகமாக செல்ல வேண்டாம். ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் செய்யலாம்.

உகந்த எடையை பராமரிக்கவும்: பிரச்சனையின்றி கருத்தரிக்க உங்கள் எடையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அதிக எடை மற்றும் குறைந்த எடை கூட ஒருவரின் கருவுறுதலை பாதிக்கும்.சரிவிகித உணவை உண்ணுங்கள் : நீங்கள் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ, ஃபோலேட், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை விந்து மற்றும் முட்டை செல்கள் இரண்டையும் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. சிட்ரஸ் உணவுகள், விதைகள், பீன்ஸ் மற்றும் பருப்புகளை உட்கொள்வது கருவுறுதலை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட, ஜங்க் உணவைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

கார்போஹைட்ரேட், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ்-ஃபேட் உணவுப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள். உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மற்றும் மலட்டுத்தன்மையை வரவழைக்கும் கோலாக்கள், சோடாக்கள் மற்றும் இனிப்புகளுக்கு முடிவு கட்டுங்கள். மருத்துவர் பரிந்துரைத்தபடி வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் பேசுங்கள். இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

உங்கள் மருத்துவ நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்: பெண்களே, உங்களுக்கு நீரிழிவு, தைராய்டு பிரச்சனை, PCOS, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். ஆண்களும் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.உங்கள் கருவுறுதல் திறனை அறிந்து கொள்ளுங்கள்
டாக்டர் ஜக்தாப் , "ஏஎம்ஹெச் மற்றும் விந்து பகுப்பாய்வு போன்ற எளிய சோதனைகளைச் செய்வதன் மூலம் உங்கள் கருவுறுதல் திறனைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். வாழ்வில் உங்களின் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை கருவுறுதல் காத்திருக்காது. அப்படி தள்ளிப்போட நினைத்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை , நோய் இல்லா வாழ்க்கையை வாழ வேண்டும். நாம் பல பரிமாண வாழ்க்கையை நடத்துகிறோம். அதில் ஒரு பரிமாணம் கருவுறுதல் திட்டமிடலாக இருக்க வேண்டும்.

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன..?

25 வயதைக் கடந்த இன்னும் திருமணம் ஆகாத பெண்களுக்கு, கருவுறுதல் சாத்தியக் கூறுகளை பாதுகாப்பாக மேம்படுத்துவது அவசியம். அதை உங்கள் வாழ்க்கை முறை மூலமே கையாள முடியும்.

யசோதா மருத்துவமனையின் சகோதரி நிறுவனமான சீட்ஸ் ஆஃப் இன்னசென்ஸ் அண்ட் ஜெனெஸ்ட்ரிங்ஸின் இயக்குநரும் நிறுவனருமான கருவுறுதல் நிபுணர் டாக்டர். கௌரி அகர்வால், “இந்தியாவில் நகர்ப்புற பெண்களின் கருவுறுதல் விகிதம் தேசிய சராசரியை விட 1.6 குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மலட்டுத்தன்மையைப் பற்றி பேசுவதைத் தடைசெய்து, குழந்தையின்மை மற்றும் அதன் காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். "நேரமும் கருவுறுதலும் யாருக்கும் காத்திருக்காது" என்பதை நினைவில் கொள்வது சிறந்தது” என்று நிறைவு செய்கிறார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility, Infertility, Pregnancy

அடுத்த செய்தி