ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பதற்றம் என்பது மனநோய்... மருத்துவர் சொல்லும் இந்த விஷயங்களை கேளுங்கள்..!

பதற்றம் என்பது மனநோய்... மருத்துவர் சொல்லும் இந்த விஷயங்களை கேளுங்கள்..!

மனப்பதற்றம்

மனப்பதற்றம்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பதற்றம் என்பது ஒரு மனநல நோயாகும், இது "அதிகமான பயம் மற்றும் கவலை மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் நம்மை சீர்குலைக்கலாம்."

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். சிலருக்கு பயம் அதிகமாகி  எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பதற்றம் என்பது ஒரு மனநல நோயாகும், இது "அதிகமான பயம் மற்றும் கவலை மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் நம்மை சீர்குலைக்கலாம்." இது உடனடியாக கையாளப்படாவிட்டால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அறிகுறிகளை அடையாளம் கண்டு, விரைவில் நிபுணர் ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

மூளை ஆரோக்கியத்தை பாதுக்காக்க, மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் மன பதற்றம் மற்றும் கவலையை குறைக்கலாம். இதுகுறித்து விளக்கிய மருத்துவ நிபுணரான டாக்டர் தாரா ஸ்காட், பதற்ற நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வைட்டமின்களை பட்டியலிட்டுள்ளார். அவற்றில் ஏதேனும் குறைந்த அளவு இருந்தால் கூட நீங்கள் கவலையை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கிறார். அதுகுறித்து இங்கு காண்போம்.,

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் :

கடல் உணவுகள் மற்றும் மீன் வகைகளில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது. நீங்கள் மீன்களை அதிகம் உட்கொள்ளவில்லை என்றால், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சப்ளிமெண்ட் ஆக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பி காம்ப்ளக்ஸ் :

நரம்பியக்கடத்திகளான செரோடோனின், டோபமைன் மற்றும் பிறவற்றை உற்பத்தி செய்ய உங்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவை. அவற்றில் முக்கியமான ஒன்று பி காம்ப்ளக்ஸ் ஆகும். நரம்புகளுக்கு நன்மை தரக்கூடிய இது உடலை சுற்றி ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இது முழு தானியங்கள், காலே போன்ற அடர் பச்சை நிற காய்கறிகளுலும் பால் மற்றும் முட்டைகளிலும் உள்ளது. உங்கள் உணவில் அடிக்கடி இவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வைட்டமின்கள் D,K,K2,D3 :

வைட்டமின்கள் D மற்றும் K, குறிப்பாக K2 மற்றும் D3 ஆகியவை உங்கள் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த வைட்டமின் D, உடலைப் ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. ஏராளமான வைட்டமின் D கூறுகள் சூரிய கதிர்களிடமிருந்து பெறப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளிவரும் சூரிய கதிர்களில் அதிகமான வைட்டமின் டி கூறுகள் இருக்கின்றன. இந்த வைட்டமின் D-யை உடலில் எடுத்துக்கொள்வதன் மூலம் சருமம், எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. எந்த செலவும் இல்லாமல் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் சத்து வைட்டமின் டி. தினமும் கொஞ்ச நேரம் சூரிய ஒளி உடலில் படும் வகையில் நேரத்தை ஒதுக்கினால், உங்களுக்கு உடல் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உடலே உருவாக்கிக் கொள்ளும்.

துத்தநாகம் மற்றும் தாமிரம் :

காப்பர் சத்து உங்க உடலுக்கு தேவையான தாதுக்கள் ஆகும். அதனால் தான் அந்தக் காலத்தில் செம்பு பாத்திரத்தை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தார்கள். இது ஒரு அத்தியாவசிய தாதுப்பொருள் என்பதால் உங்க உடலின் அடிப்படை செயல்பாட்டிற்கு இது உதவி செய்கிறது. குறைந்த துத்தநாகம் மற்றும் தாமிரம் சத்து கூட ஒருவருக்கு மனக் கவலையை அதிகரிக்கலாம்.

மெக்னீசியம் : கவலை மற்றும் மனச்சோர்வு குறைந்த மெக்னீசியம் அளவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மெக்னீசியம் அளவுகள் சராசரியான அளவில் இல்லை என்றால், சப்ளிமெண்ட் எடுக்க மறக்காதீர்கள்.
 
View this post on Instagram

 

A post shared by Tara Scott MD (@drtarascott)பதற்றமான மனதை அமைதிப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் உணவுகளின் பட்டியலை மனநல நிபுணரான டாக்டர். ரச்சனா கன்னா சிங் வழங்கியுள்ளார்.

கருப்பு சாக்லேட் (டார்க் சாக்லெட்) :

டார்க் சாக்லேட்டை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அவற்றை சாப்பிடாதவர்களைக் காட்டிலும் குறைவான பதற்ற உணர்வுகளை அனுபவித்ததாக, 13,626 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வில், கண்டறியப்பட்டது. சாக்லேட் உட்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீரடைவதால் இது நமது மூளையின் செயல் திறனை அதிகப்படுகிறது. இதன் மற்றொரு பயனாய் நமது அறிவுத்திறனும் மேம்பட உதவுகிறது. தினசரி சாக்லேட் உண்பதன் மூலம் மன அழுத்தமும், பதட்டமும் குறைகிறது என உலக அளவில் கருதப்படுகிறது.

பச்சை தேயிலை தேநீர்(கிரீன் டீ ) :

கிரீன் டீயில் காப்ஃபைனுடன், L-தயனைன் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு குறைந்தது 6 கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை ஆரோக்கியமாக இயங்கும்.

Also Read : இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

தயிர்:

சில தயிர் வகைகளில் புரோபயாடிக்குகள் அல்லது நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை மனநலம் உட்பட ஒருவரின் ஆரோக்கியத்தின் பல அம்சங்களுக்கு நன்மை பயக்கும். புரோபயாடிக்குகள் இரைப்பை குடல் மற்றும் மூளைக்கு இடையிலான இந்த சிக்கலான இணைப்பை மேம்படுத்துகின்றன. மேம்படுத்தப்பட்ட குடல் பாக்டீரியா மற்றும் மேம்பட்ட மூளை செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை தயிர் எடுத்துக்கொள்வது மூலமாக ஏற்படுவதாக ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

மஞ்சள் :

குர்குமின் அடங்கியுள்ள மசாலா, கவலைக் கோளாறுகளைக் குறைப்பதற்கும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு இரசாயனமாக திகழ்கிறது. கணிசமான அளவு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்ட குர்குமின், மூளை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

எனவே, உங்களுக்கு கவலை, மனஅழுத்தப் பிரச்சினைகள் இருந்தால், சிகிச்சையைத் தேடுவதும், மேற்கண்ட உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

First published:

Tags: Anxiety, Stress