Home /News /lifestyle /

91% இந்தியர்கள் கொரோனா தடுப்பூசிகள் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என நம்பிக்கை : கணக்கெடுப்பில் தகவல்

91% இந்தியர்கள் கொரோனா தடுப்பூசிகள் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என நம்பிக்கை : கணக்கெடுப்பில் தகவல்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

2 ஆண்டுகளுக்கும் மேல் உலகில் நீடித்து வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதால்

2 ஆண்டுகளுக்கும் மேல் உலகில் நீடித்து வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க உலகநாடுகள் தங்களது குடிமக்களை கேட்டு கொண்டுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது.

எனினும் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பலர் இன்னும் ஒரு டோஸ் கூட போடாமலே இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கோவிட்-19 தடுப்பூசி மீது நம்பிக்கை குறித்து மக்களின் கருத்தை அறிய GOQii Fit India ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. "COVID-19 Trust In Vaccines and Vaccination" என்ற தலைப்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசியை நம்புவதாக கூறி இருக்கிறார்கள்.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 91% இந்தியர்கள் கோவிட்-19-லிருந்து தடுப்பூசிகள் தங்களைப் பாதுகாக்கும் என்று நினைப்பதாக மற்றும் நம்புவதாக கூறி இருக்கிறார்கள். பதிலளித்தவர்களில் 9% இந்தியர்கள் இன்னும் தடுப்பூசி செயல்முறைகள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தவிர அடுத்தடுத்த வேரியன்ட்கள் நிறைய வந்து கொண்டே இருப்பதால் அவற்றை தடுபதில் தற்போது இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்றும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



கோவிட் நேரத்தில் இந்தியர்களின் மன அழுத்தம் மற்றும் மனநிலை குறித்தும் அறிக்கை வெளியிட்டு உள்ள GOQii Fit India2022, கிட்டத்தட்ட 30% இந்தியர்கள் மோசமான கோவிட்-19 தொற்றுடன் போராடிய பிறகு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. வாழ்க்கை முறை நோய்கள், பிஎம்ஐ, நீர் அருந்துவது, மன அழுத்தம் போன்ற பல்வேறு சுகாதார அளவுருக்கள் குறித்து இந்த கணக்கெடுப்பில் கருத்து கேட்கப்பட்டது. இந்த அறிக்கையின்படி 2021-ல் சுமார் 29.31% இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 2020-ல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விகிதம் 43% இருந்துள்ளது.

அதிக உப்பு மற்றும் புரோட்டீன் சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்குமா..? அறிகுறிகளும்... தப்பிக்கும் முறைகளும்...

தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக லாக்டவுன்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டதால் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பை மக்கள் பெற்றதால் மன அழுத்தத்தால் பாதிப்பட்டுள்ள இந்தியர்கலிங் எண்ணிக்கையில் சரிவு காணப்படுவதாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது தவிர சுமார் 50.3% இந்தியர்கள் மனநலப் பிரச்சினைகளுக்குள் விழுவதற்கான விளிம்பில் இருப்பதாகவும், இந்த நிலை ஹை ரிஸ்க் அல்லது பார்டர் லைன் என்றும் அறிக்கை கூறுகிறது. நாட்டில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் உள்ள ஆண்களே ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.



நாட்டின் மற்ற நகரங்களை விட இந்தூர், கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் ஆரோக்கியமற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிகள் தங்களை ஆரோக்கியமாகவும், தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதையே கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Covid-19, Vaccination

அடுத்த செய்தி