ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் ஸ்மூத்தி... ஒரு கிளாஸில் இவ்வளவு நன்மைகளா..? 

உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் ஸ்மூத்தி... ஒரு கிளாஸில் இவ்வளவு நன்மைகளா..? 

மேஜிக் ஸ்மூத்தி

மேஜிக் ஸ்மூத்தி

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 'மேஜிக் ப்ரேக்ஃபாஸ்ட்' என்ற பெயரில் அவர் பகிர்ந்துள்ள ஸ்மூத்தி ரெசிபியை செய்வது எப்படி என பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அலுவலகம், பள்ளி, கல்லூரி, வீட்டு வேலை என பரபரப்பாக இருப்பதால் இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காலை சிற்றுண்டியை தவிர்ப்பது உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காலை உணவு உடலுக்கு ஊட்டமளிக்கவும், நாளை சுறுசுறுப்பாக கிக்ஸ்டார்ட் செய்யவும் உதவுகிறது.

உடல்நலப் பயிற்சியாளரான மஞ்சுநாத் சுகுமாரனின் டூ-வே ஸ்மூத்தி ரெசிபியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இந்த ஸ்மூத்தி ஜார், உங்களை மதிய உணவு வரை திருப்தியாக வைத்திருக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கவும் உதவுகிறது.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்மூத்தி ரெசிபியைச் ஷேர் செய்துள்ள அவர், “இலவங்கப்பட்டை மற்றும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் சுவை மற்றும் வாசனை சேர்ந்த சமச்சீர் உணவு, நாளை தொடங்க சிறப்பானதாக இருக்கும். நட்ஸ், விதைகள், தாவர புரதம் என பலவகையான புரதச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குறைந்தது 5 மணி நேரத்திற்கு உங்களை பசியில்லாமல் திருப்பதியாக வைத்திருக்க உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 'மேஜிக் ப்ரேக்ஃபாஸ்ட்' என்ற பெயரில் அவர் பகிர்ந்துள்ள ஸ்மூத்தி ரெசிபியை செய்வது எப்படி என பார்க்கலாம்...

ஃப்ரூட் ஸ்மூத்தி:

புரதங்கள், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியன்கள், நார்ச்சத்து உடல் பருமன் ஆகியவை அடங்கிய இந்த ஸ்மூத்தியானது நீரிழிவு நோயாளிகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான தேர்வாகும்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 10 துண்டுகள்

பப்பாளி - பப்பாளி 10 துண்டுகள்

மாதுளை - 1/2 கப்

பேரீச்சம்பழம் - 4 முதல் 5

புரோட்டீன் பவுடர் - 1 ஸ்கூப்

கோதுமை புல் பவுடர் - 1 டீஸ்பூன்

நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1 டீஸ்பூன்

வர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தேன் - சுவைக்கு ஏற்ப

தேங்காய் பால் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

Also Read : மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

செய்முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து குறைவான அளவு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை ஸ்மூத்தி பதத்திற்கு வந்ததும், மேசன் ஜார் அல்லது கண்ணாடி குவளையில் ஊற்றி பரிமாறவும்.

2. கிரீன் ஸ்மூத்தி:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 10 துண்டுகள்

அவகேடோ - தேவையான அளவு

மாதுளை - 1/2 கப்

வாழைப்பழம் - சில துண்டுகள்

பசலைக்கீரை - 5 இலைகள்

சோற்றுக்கற்றாழை - தேவையான அளவு

பேரீச்சம்பழம் - 4 முதல் 5

நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

கோதுமை புல் பவுடர் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1 டீஸ்பூன்

புரோட்டீன் பவுடர் - 1 ஸ்கூப்

வர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தேன் - சுவைக்கு ஏற்ப

தேங்காய் பால் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து குறைவான அளவு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். இந்த ஸ்மூத்தில் காலை உணவுக்கு சரியான சரிவிகித சத்துக்கள் கலந்த உணவாகும்.

குறிப்புகள் :

* இனிப்பு மற்றும் புளிப்பு பழங்களை கலக்க வேண்டாம்.
* ஸ்மூத்தியை தயாரித்த 10 நிமிடங்களில் சாப்பிட வேண்டும்.
* நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஸ்மூத்திகளில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் நீரேற்றமாக இருப்பது முக்கியம்.
* தினமும் 3 முதல் 4 பழ வகைகள் வரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கும் மருத்துவர் சுகுமாரன், பப்பாளி, ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, சப்போட்டா, அவகேடோ, சோற்றுக்கற்றாழை, கீரை, பேரீச்சம்பழம், சப்போட்டா ஆகியவற்றை ஸ்மூத்தியில் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
*நட்ஸ் மற்றும் விதைகளை ஒன்றாக கலந்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை உபயோகிக்க எளிதாக இருக்கும்.
* வேர்க்கடலை, முந்திரி, பாதாம், அக்ரூட், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றில் புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. புரதச்சத்தில் பசியை அடங்கும் திறன் உள்ளதால் இவற்றை கட்டாயம் ஸ்மூத்தியில் சேர்க்க வேண்டும்.
*கொழுப்பின் நல்ல ஆதாரத்திற்காக, தேங்காய் பால் மற்றும் வர்ஜின் தேங்காய் எண்ணெய்யை சேர்க்க வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Smoothie, Weight loss