ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெதர் மாறுது.. மீண்டும் பரவும் மெட்ராஸ் ஐ.! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிங்க.!

வெதர் மாறுது.. மீண்டும் பரவும் மெட்ராஸ் ஐ.! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிங்க.!

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

பொதுவாக ஒரு கண்ணில்‌ 'மெட்ராஸ்‌ - ஐ' பிரச்னை ஏற்பட்‌டால்‌, மற்றொரு கண்ணிலும்‌ அந்த பாதிப்பு வருவதற்கு அதிகவாய்ப்புள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கால நிலை மாற்றத்தின்‌ காரணமாக ‘மெட்ராஸ்‌ - ஐ' எனப்படும்‌ கண்‌ தொற்று நோய்‌ பாதிப்பு தற்‌போது பரவி வருகிறது. 

  விழியையும்‌, இமையையும்‌ இணைக்கும்‌ ஐவ்வு படலத்தில்‌ ஏற்படும்‌ வைரஸ்‌ தொற்றுதான்‌ 'மெட்ராஸ்‌ - ஐ' எனக்‌ கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள்‌ காற்று மூலமாகவும்‌, மாசு வாயிலாகவும்‌ பரவக்கூடும்‌. அதுமட்டுமன்றி, மெட்ராஸ்‌ - ஐ' பிரச்னையால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ பயன்படுத்திய பொருள்களை உபயோகித்‌தாலும்‌ மற்றவர்களுக்கு நோய்த்‌ தொற்று பரவும்‌ என மருத்துவர்‌கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

  இந்த நிலையில்‌, 'மெட்ராஸ்‌ - ஐ' தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள்‌ தெரிவிக்கின்றன. மெட்ராஸ்‌ - ஐ' எளிதில்‌ குணப்படுத்தக்கூடிய மிகச்‌ சாதாரணமான நோய்த்‌ தொற்றுதான்‌. ஆனால்‌, அதனை முதலிலேயே கண்‌டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. காலந்தாழ்த்தி அலட்சியம்‌ செய்தால்‌ பார்வையில்‌ தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்‌.

  கண்‌ எரிச்சல்‌, விழிப்‌பகுதி சிவந்து காணப்படுதல்‌, நீர்‌ சுரந்து கொண்டே இருத்தல்‌, இமைப்பகுதி ஒட்டிக்‌ கொள்ளுதல்‌ உள்‌ளிட்டவை மெட்ராஸ்‌ - ஐ-யின்‌ முக்கிய அறிகுறிகளாகும்‌. பொதுவாக ஒரு கண்ணில்‌ 'மெட்ராஸ்‌ - ஐ' பிரச்சனை ஏற்பட்‌டால்‌, மற்றொரு கண்ணிலும்‌ அந்த பாதிப்பு வருவதற்கு அதிகவாய்ப்புள்ளது.

  இதற்கு ஒரே தீர்வு பாதுகாப்புடன் இருப்பதுதான். நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஓய்வெடுங்கள். அதிகமானால் உடனே மருத்துவரை அணுவது நல்லது. இந்த வைரல் தொற்று வேகமாக பரவும் என்பதால் பள்ளி, அலுவலகங்களில் கவனமாக இருப்பது இருப்பது அவசியம்.

  Also Read : குளிர்காலத்தில் வறண்டு போகும் கண்களால் எரிச்சல் , அரிப்பு... இதை சமாளிக்க டிப்ஸ்..!

  கீழ் காண்பவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்: 

  கண்களில் தொந்தரவு, எரிச்சல் எனில் கசக்குவது, தொடுவது என செய்யாதீர்கள்.
   கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுங்கள்.
  கண்களில் அழுக்கு இருந்தால் பஞ்சு கொண்டு எடுங்கள்.
  ஐ மேக்அப் , லென்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Eye Problems, Eye Twitching, Eyes