World No Tobacco Day : நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் உடலில் இந்த அதிசயம் நடக்கும்..!
World No Tobacco Day : நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் உடலில் இந்த அதிசயம் நடக்கும்..!
வயது செல்ல செல்ல அவருக்கு நெஞ்சு வலிம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்றதும் சிகிச்சை பார்த்ததில் நுரையீரல் கடுமையாக பாதித்திருப்பதாகக் கூறியுள்ளனர். அன்றிலிருந்து உயிர் மீது கொண்ட ஆசையால் புகைப்பழக்கத்தை 67 வயதில் நிறுத்தியுள்ளார். அன்றிலிருந்து அதாவது எட்டு வருடங்களாக தான் புகைப்பிடிக்க செலவழிக்கும் பணத்தை சேமித்து வைத்துள்ளார். அப்படி சேமித்ததில் 8 வருடத்தில் 5 லட்சம் சேமித்துள்ளார்.
நீங்கள் புகைப்பிடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிட்டால் நுரையீரல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகள் புகைப்பிடித்திருந்தாலும் உங்கள் நுரையீரலை எந்த செலவும் இல்லாமல் ஃபிரெஷாக மாற்ற முடியும் என ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தெரியுமா..?
அதாவது நீங்கள் வெகு நாட்களாக புகைப்பிடிக்கிறீர்கள் எனில் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிட்டால் நுரையீரல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் புகையிலையில் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள் உள்ளன. அவை நுரையீரல் செல்களின் டி.என்.ஏவில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாறுதல்களால்தான் புற்றுநோய் ஏற்படுத்துகிறது.
ஒருவேளை நீங்கள் அடியோடு புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் அந்த சேதமடைந்துள்ள செல்கள் அழிந்து அந்த இடத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அப்படி புகைப்படித்துக் கொண்டிருந்தவர்களில் 40 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை கைவிட்டதும் அவர்களின் நுரையீரல் செல்கள் புகைப்பிடிக்காதவர்களின் நுரையீரல் செல்களைப் போல் மாறியிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இது மருத்துவத்துறைக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக அந்த ஆய்வின் தலைவர் கூறியுள்ளார். இது புகைப்பழக்கம் கொண்டிருப்போருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியாகவும்..இந்த நொடியே புகைப்பிடிப்பதைக் கைவிட்டு மாற்றத்தை நோக்கி பயணிக்க இந்த ஆய்வு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.