ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான உயிர்களை புற்றுநோய் பலி வாங்கி வருவதாக உலக அளவிலான சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் என்பது உயிரணுக்கள் கட்டுபாடற்ற முறையில் பெருகி, இறுதியில் கட்டிகளாக ஒன்றிணைந்து அண்டை திசுக்களை ஆக்கிரமிக்கக்கூடும். இந்த கட்டிகள் தொடர்ந்து வளரக்கூடியவை என்பதால், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதும் மிகவும் கடினமானதாக உள்ளது. ஆனால் சில சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை முன்கூட்டியே கணித்து பரிசோதித்துக் கொள்வது, நோயிலிருந்து வெற்றிகரமாக மீள உதவுகிறது.
புற்றுநோய் வகைகளிலேயே மிகவும் ஆபத்தான நுரையீரல் புற்றுநோய், எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் பரவக்கூடியது. ஆனால் சிலருக்கு மட்டும் ஆரம்ப கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. முகத்தின் மூன்று இடங்களில் நிலையான வலி ஏற்படுவது முதன்மையான அறிகுறியாக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, புற்றுநோயாளிகளில் 20 முதல் 50 சதவிகிதம் பேர் வரை இந்த வலியால் அவதிப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
முகத்தில் எங்கெல்லாம் வலி ஏற்படும்:
புற்றுநோயாளிகள் பலரும் நிலையான, கூர்மையான மற்றும் கடினமான வலிக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் படி பார்த்தோமேயானால் காது, டெம்போரல் எனப்படும் காதுக்கு மேலே உள்ள மண்டை ஓட்டு பகுதிகளில் வலியை உணர்கின்றனர். சில சமயங்களில் தாடை பகுதிகளிலும் வலி ஏற்படுவது உண்டு. குறிப்பாக படுக்கும் போதும், கைகளை காதுகளுக்கு மேலாக உயர்த்தும் போதும் மோசமான வலி ஏற்படக்கூடும்.
ஆனால் நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை வலி என்பது மிகவும் அரிதான அறிகுறியாகவே உள்ளது. 2018 ஆம் ஆண்டின் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், கண்களைச் சுற்றி வீக்கம் மற்றும் முகம் மற்றும் தொண்டையில் வீக்கம் போன்ற உணர்வு பற்றி தோல் மருத்துவரை அணுகிய ஒருவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருக்கு நடத்தப்பட்ட நோயறிதல் சோதனைகள் மூலமாக ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய் (SCLC) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் தூக்க மாத்திரை போட்டால்தான் தூக்கமே வருதா..? அதன் ஆபத்தை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்..!
புற்றுநோயால் முகத்தில் வலி ஏற்படக் காரணம் என்ன?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகள் நரம்பு மண்டலத்தில் உள்ள சாதாரண செல்களைத் தவறாகத் தாக்கும் போது ஏற்படும் கோளாறுகளின் காரணமாகவே முகத்தில் வலி ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கட்டியானது வேனா காவா என்ற முகத்திற்கு செல்லும் ரத்த நாளங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதால் அது வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,குறிப்பிட்ட அளவு வீக்கத்தையும் உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முகத்தில் ஏற்படும் வலியானது நுரையீரல் புற்றுநோக்கு மட்டுமல்ல வேறு சில விதமான புற்றுநோய்களுக்கும் காரணமாக அமையலாம். தலை மற்றும் கழுத்து பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 80 சதவீத நோயாளிகளுக்கு முக வலி ஏற்படுகிறது.
மாதவிலக்கு பற்றிய உரையாடல் ஏன் அவசியம்..? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?
நுரையீரல் புற்றுநோயின் பிற அறிகுறிகள்:
நுரையீரல் புற்றுநோய் உருவாகும்போது, முக வலி மற்றும் வீக்கம் தவிர, பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நுரையீரலைச் சுற்றியுள்ள திரவம், நோய்த்தொற்றுகள், இரத்தக் கட்டிகள், அதிக கால்சியம் அளவுகள், முதுகெலும்பு சுருக்கம் போன்ற நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், காற்றுப்பாதைகள் அல்லது உணவுக் குழாயில் அடைப்புகள், உடலின் பிற பகுதிகளில் உள்ள கட்டிகள், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும் மனநலப் பிரச்சனைகள் போன்றவை இதில் அடங்கும். நீங்கள் முதலில் அறிகுறிகளைக் கவனிக்கும்போது உங்கள் மருத்துவரிடம் சென்றால், உங்கள் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு நல்ல பலனும் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lungs Cancer