புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக சமீபத்தில் மரபணு பகுப்பாய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் கட்டிகளில் பெரும்பாலானவை அவர்களது உடலில் இயற்கையான செயல்முறைகளால் ஏற்படும் பிறழ்வுகள் குவிவதால் (accumulation of mutations) உருவாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக தொடர்ச்சியான பிறழ்வுகளால் கட்டுப்படுத்தப்படும் அசாதாரண உயிரணு பெருக்கத்தின் நோயாகவே புற்றுநோய் பார்க்கப்படுகிறது. இதனிடையே முற்றிலும் புகைப்பழக்கம் இல்லாத மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்ற மர்மத்தை உடைக்க தற்போதைய பகுப்பாய்வு உதவும். தவிர நுரையீரல் புற்றுநோய்க்கான துல்லியமான மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் சுமார் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகள் புகையிலை பழக்கம் அல்லது சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். எனினும் உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10% - 20% பேர் புகைப்பழக்கமே இல்லாதவர்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறியும் முயற்சியிலான இந்த புதிய ஆய்வை தேசிய சுகாதார நிறுவனங்களின் (National Institutes of Health - NIH) ஒரு பகுதியாக உள்ள தேசிய புற்றுநோய் நிறுவன ( National Cancer Institute - NCI) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு சர்வதேச குழு நடத்தி உள்ளது.
மேலும் புகைபழக்கமில்லா நபர்களில் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயின் 3 மூலக்கூறு துணை வகைகளை (3 molecular subtypes) பற்றி இந்த ஆய்வு முதன்முறையாக விவரிக்கிறது. புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளுக்கு துல்லிய மருத்துவ சிகிச்சை முறையை வளர செய்ய வழிகாட்டும் வகையிலான இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் நேச்சர் ஜெனடிக்ஸ் (Nature Genetics) என்ற இயற்கை மரபியல் சார்ந்த அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய, NCI-யின் புற்றுநோய் தொற்றுநோய் மற்றும் மரபியல் பிரிவில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் மரியா தெரேசா லாண்டி கூறுகையில், "புகைப்பழக்கம் இலத்தவர்களிடம் காணப்படும் நுரையீரல் புற்றுநோயில் பல்வேறு துணை வகைகள் இருப்பதாய் எங்களால் காண முடிகிறது. மேலும் இவை தனித்துவ மூலக்கூறு பண்புகள் மற்றும் பரிணாம செயல்முறைகளை கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த துணை வகைகளின் அடிப்படையில் பல்வேறு சிகிச்சைகளை கண்டறிந்து அவற்றை பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்க முடியும்" என்றார்.
புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோயை விட, புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் பெண்களிலும், சில இளவயதினருக்கும் ஏற்படுகிறது. புகைப்பவரின் அருகில் இருப்பதால் அந்த நச்சு புகையை சுவாசிப்பது, ரேடான், காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகள் அல்லது அவர்களுக்கு நுரையீரல் நோய்கள் முந்தைய கட்டத்தில் இருப்பது உள்ளிட்டவை, புகைபிடிக்காதவர்களிடையே சில நுரையீரல் புற்றுநோய்களை ஏற்படுத்த கூடும். ஆனால் இந்த புற்றுநோய்களில் பெரும்பான்மைக்கு காரணம் என்ன என்று விஞ்ஞானிகளுக்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை.
இதற்கு விடை கண்டறியும் முயற்சியாக சமீபத்திய ஆய்வில், சுமார் 232 புகைபிடிக்காதவர்களிடமிருந்து கட்டி திசு மற்றும் சாதாரண திசுக்களில் மரபணு மாற்றங்களை வகைப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முழு மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்தினர், முக்கியமாக ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால் கண்டறியப்பட்டனர். இந்த கட்டிகளில் 189 அடினோகார்சினோமாக்கள் (adenocarcinomas என்பது நுரையீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை), 36 கார்சினாய்டுகள் (carcinoides) மற்றும் பல்வேறு வகையான ஏழு கட்டிகள் அடங்கும்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து, உடலில் இயற்கையான செயல்பாடுகளால் ஏற்படும் சேதம் (உதாரணமாக, குறைபாடுள்ள டிஎன்ஏ பழுது அல்லது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்) அல்லது புற்றுநோய்க்கான வெளிப்பாடு உள்ளிட்டவற்றுக்காக ஆராய்ச்சியாளர்கள் கட்டி மரபணுக்களை (tumor genomes) தேடி பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களின் கட்டி மரபணுக்களில் பெரும்பாலானவை எண்டோஜெனஸ் செயல்முறைகளின் சேதத்துடன் தொடர்புடைய mutational signatures-களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, உடலுக்குள் நிகழும் இயற்கை செயல்முறைகள்.
இந்த ஆய்வு ஒருபோதும் புகைபிடிக்காதவர்களுக்கான ஆய்வாக இது மட்டுப்படுத்தப்பட்டதால், ஆச்சரியப்படத்தக்க வகையில், புகைபிடிக்கும் நேரடி வெளிப்பாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு mutational signature-யும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. அதே போல புகைபிடிப்பவர்களிடம் நெருங்கி பழகிய 62 நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்தும் குறிப்பிட்ட signature-களை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. சேம்பிள் அளவு சிறியது மற்றும் வெளிப்பாட்டின் அளவு மிகவும் மாறுபடும் என்று மருத்துவ நிபுணர் மரியா தெரேசா லாண்டி எச்சரித்தார்.
புகைபிடிக்காதவர்களுக்கு காணப்படும் நுரையீரல் புற்று நோயின் வளர்ச்சியில், வெளியில் இருந்து வரும் சுற்றுப்புற காரணிகளின் தாக்கத்தை (உதாரணமாக புகைப்பவர்களின் அருகில் அதிகம் இருப்பது) உண்மையில் ஆய்வு செய்ய வெளிப்பாடு பற்றிய விரிவான தகவல்களுடன் ஒரு பெரிய மாதிரி அளவு தேவை என்றும் மரியா தெரேசா குறிப்பிட்டார்.
தவிர இந்த மரபணு பகுப்பாய்வு புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோயின் மூன்று புதிய வகைகளையும் வெளிப்படுத்தியது. மூன்று புதிய வகைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் கட்டிகளில் "சத்தம்" அளவை அடிப்படையாகக் கொண்டு இசைப் பெயர்களை வழங்கி உள்ளனர். piano, mezzo-forte, forte என்று அவற்றை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் முதன்மையானதான piano, குறைவான பிறழ்வுகளைக் கொண்டிருந்தது. இது புதிய உயிரணுக்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள முன்னோடி உயிரணுக்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக தோன்றியது. கட்டியின் இந்த துணை வகை மிக மெதுவாக, பல ஆண்டுகளாக வளர்கிறது, மேலும் சிகிச்சையளிப்பது கடினம், ஏனெனில் இது பல்வேறு driver mutations-களை கொண்டிருக்கலாம்.
Kidney Failure Symptoms : சிறுநீரக செயலிழப்பை காட்டும் ஆரம்பகால அறிகுறிகள் : உஷாராக இருங்கள்...
mezzo-forte குறிப்பிட்ட குரோமோசோமால் மாற்றங்களையும், வளர்ச்சி காரணி ஏற்பி மரபணு EGFR-ல் பிறழ்வுகளையும் கொண்டுள்ளது, இது பொதுவாக நுரையீரல் புற்றுநோயால் மாற்றப்பட்டு, வேகமான கட்டி வளர்ச்சியை வெளிப்படுத்தியது. மூன்றாவதான forte முழு-மரபணு இரட்டிப்பை வெளிப்படுத்தியது, இது புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் புற்றுநோய்களில் அடிக்கடி காணப்படும் ஒரு மரபணு மாற்றமாகும். கட்டியின் இந்த துணை வகையும் விரைவாக வளர்கிறது.
தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்ட துணை வகைகளை நாங்கள் வேறுபடுத்தத் தொடங்குகிறோம் என்று கூறியுள்ள நிபுணர் லாண்டி, உதாரணமாக, மெதுவாக வளரும் பியானோ துணை வகை கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கண்டறிவதற்கான வாய்ப்பை மருத்துவர்களுக்கு வழங்கலாம். மெஸ்ஸோ-ஃபோர்டே மற்றும் ஃபோர்டே துணை வகைகளில் ஒரு சில பெரிய டிரைவர் பிறழ்வுகள் உள்ளதால் இந்த கட்டிகளை பயாப்ஸி மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் மற்றும் இலக்கு சிகிச்சைகள் மூலம் இவ்வகை கட்டிகளுக்கு சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Lungs health, Smoking