ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கால்நடைகளை அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்... மாட்டுப்பால் மூலம் மனிதர்களுக்கும் பரவுமா..?

கால்நடைகளை அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்... மாட்டுப்பால் மூலம் மனிதர்களுக்கும் பரவுமா..?

கால்நடைகளை அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்

கால்நடைகளை அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்

ழைக்காலங்களில் ஆரம்பித்துவிட்டாலே இந்த அச்ச உணர்வு மக்களுக்குத் தோன்றிவிடும். இந்நிலையில் தான் தற்போது கால்நடைகளுக்குக் கேப்ரிபாக்ஸ் என்ற வைரஸால் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு எல்.எஸ்.டி எனப்படும் தோல் கட்டி நோய் (lumpy skin disease – LSD) பாதிப்பு வேகமாக பரவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளுக்குப் பரவும் தொற்று நோய் மனிதர்களுக்கும் பரவிவிடுமோ? என்ற மனநிலை நம்மில் பலருக்கும் ஏற்படும். மாடுகளிலிருந்து பால் மற்றும் இறைச்சி, ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் என நாம் சாப்பிடும் போது அவைகளுக்கு ஏற்பட்ட தொற்றால் நாம் பாதித்துவிடுமோ என்ற எண்ணத்தில் அதைச்சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.

குறிப்பாக மழைக்காலங்களில் ஆரம்பித்துவிட்டாலே இந்த அச்ச உணர்வு மக்களுக்குத் தோன்றிவிடும். இந்நிலையில் தான் தற்போது கால்நடைகளுக்குக் கேப்ரிபாக்ஸ் என்ற வைரஸால் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு எல்.எஸ்.டி எனப்படும் தோல் கட்டி நோய் (lumpy skin disease – LSD) பாதிப்பு வேகமாக பரவுகிறது என்ற செய்தி மக்களைப் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.

தோல் கட்டி நோயின் பாதிப்பு என்னவாக இருக்கும்..?

வட மாநிலங்களில் அதிவேகமாக பரவிவந்த தோல் கட்டி நோய் என்பது, கொசுக்கள், ஈக்கள், பேன்கள் போன்ற ரத்தம் உண்ணும் பூச்சிகளால் விலங்குகளுக்கு அதிவேகமாக பரவுவதால் அவைகளுக்குக் காய்ச்சல் மற்றும் 2-5 செமீ அளவுள்ள தோலில் முடிச்சுக்களை உண்டாகிறது. ஒருவேளை மாடுகள் கர்ப்பமாக இருந்தால் கருக்கலைப்பு ஏற்படுகிறது. மாடுகள் சோர்வாக இருப்பதோடு பால் விளைச்சல் குறைப்பு போன்ற அறிகுறிகள் நமக்கு ஏற்படுகிறது. அதே சமயம் நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற 15 மாநிலங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் தோல் கட்டி நோய் பாதிப்பினால் சுமார் 67 ஆயிரம் விலங்குகள் இறந்துவிட்டதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. இப்படி கால்நடைகளைத் தாக்கும் கொடிய நோய்க்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை என்றாலும் இதனைப் பரவாமல் தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது மத்திய அரசு.

மனிதர்களுக்கு பரவுமா..?

கால்நடைகளுக்கு வேகமாக பரவிவரும் தோல் கட்டி நோய் மனிதர்களுக்குப் பரவும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. மாட்டிற்கு வந்தால் ஆடு, கோழி, போன்றவற்றிற்குத் தான் பரவியுள்ளது. இதுவரை மனிதர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகவில்லை.

Also Read : Egg Freezing கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றி தெரியுமா..? யாரெல்லாம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்..?

இருந்தப் போதும் தொற்று நோய் பிற மாடுகளுக்குப் பரவாமல் இருப்பதற்காக, உங்களது மாட்டுக் கொட்டங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க முயல வேண்டும். அதிலும் தற்போது மழைக்காலம் என்பதால் முடிந்தவரை மாடுகளை மதிய நேரங்களில் கொட்டத்திற்கு வெளியில் கட்டி விட்டு தினமும் தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது தேவையற்ற தொற்று நோய் பாதிப்புகள் பிற மாடுகளுக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

அதே சமயம் வழக்கத்திற்கு மாறாக மாடுகள் சோம்பலாக மற்றும் தீவனம் எதுவும் சாப்பிடாத நிலைத் தொடர்ந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மறந்துவிடாதீர்கள். இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றினாலே எவ்வித பாதிப்பும் உங்களது கால்நடைகளுக்கு ஏற்படாது.

இதோடு மாடுகளிலிருந்து கரக்கப்படும் பாலைச் சாப்பிட்டால் நமக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் தேவையில்லை. நோய் தாக்கிய கால்நடைகளின் பாலை உட்கொள்வது பாதுகாப்பானது. பாலில் தரத்தில் மாற்றம் ஏற்படாது என்பதால் எப்போதும் போல் பாலை நாம் பயன்படுத்தலாம். ஆனால் மாடுகள் எப்போதும் கரக்கும் பாலின் அளவை விட குறைவாக கரக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Viral infection, Virus