Home /News /lifestyle /

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்...

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்...

மாதிரி படம்

மாதிரி படம்

உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் பாகங்களும் செயல்படுவதற்கும் ஆரோக்கியமான உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை.

உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்களும், மினரல்களும் அத்தியாவசியமானவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்லாமல். நோய்களை எதிர்த்து போராடவும், தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும்.

உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் பாகங்களும் செயல்படுவதற்கும் ஆரோக்கியமான உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை. வைட்டமின்கள் என்று வரும்பொழுது வைட்டமின் B12 என்பது மிகவும் முக்கியமான ஒரு சத்தாகும். இது உடலில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏ உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். அதுமட்டுமில்லாமல் மூளை மற்றும் நரம்பு செல்கள் உருவாக்கத்திற்கும் வைட்டமின் B12 தேவை.

வைட்டமின் B12 குறைபாடு என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது?

வைட்டமின் டி சத்து போல உடல் தானாகவே வைட்டமின் B12 வை இயற்கையாக உற்பத்தி செய்யாது. எனவே இவை பால் பொருட்கள் மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவு பொருட்களின் மூலம், உணவு வழியாகத்தான் நமக்கு B12 கிடைக்கும். உதாரணமாக கடல் உணவுகள், முட்டை, சிக்கன் ஆகிய உணவுகளிலும், பால் பொருட்களான பால், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் B12 அதிகமாக இருக்கும். எனவேதான் வைட்டமின் பி ஒன்று குறைபாடு பரவலாக காணப்படுகிறது



உடலுக்கு தேவைப்படும் அளவுக்கு விட்டமின் B12 சத்து இல்லை என்பது அல்லது விட்டமின் B12 குறைபாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக ஏற்படும் சத்துக் குறைபாடு ஆகும். விட்டமின் B12 குறைபாடு பற்றி பெரிதும், பலரும் கண்டுகொள்வதில்லை. அல்லது தவறாக புரிந்து கொள்கின்றனர். WebMD இன் கூற்று படி, விட்டமின் B12 ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் கல்லீரலில் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து போதிய சத்து கிடைக்கவில்லை என்றால், B12 குறைபாடு ஏற்படும்.

எச்சரிக்கை... தோலில் மருக்கள் ஏற்படுவது நீரிழ்வு நோய்க்கான அறிகுறியா..?

வைட்டமின் B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறி :

வைட்டமின் B12 குறைபாட்டை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கடினமானதுதான். ஏனென்றால் இது சார்ந்த பல அறிகுறிகள் பல்வேறு நோய்களுடன் தொடர்புடையது. ஆனால் சமீபத்தில் வைட்டமின் B12 குறைபாடு இருந்தால் இந்த அறிகுறி தோன்றும் என்று ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.

டார்சோ அல்லது ட்ரன்க் என்று கூறப்படும் உடலின் நடுப்பகுதியில் எரிச்சலான உணர்வு தோன்றுவது வைட்டமின் B12 குறைபாடு அறிகுறி என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அப்பர் டார்சோ தலை மற்றும் வயிற்றின் மேல் பகுதிக்கு இடையே உள்ள பாகம் ஆகும்.



இந்தப் பகுதியில் தீவிரமான பர்னிங் சென்சேஷன் அதாவது எரிச்சலான உணர்வு என்ற ஒரு புகாருடன் 28 வயதான நபர் ஒருவர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு இந்த தொந்தரவு இருந்து வந்துள்ளது. பல்வேறு பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் இவர் தீவிரமான B12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறிந்தார்.

Air Fryer : ஏர் ஃபிரையர் பயன்படுத்தி சமைப்பது நல்லதா..? கெட்டதா..?

வைட்டமின் B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள்:

* சருமம் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும்
* தடிமனான சிவந்த நாக்கு
* வாயில் புண்
* நீங்கள் நடப்பதிலும், இயங்குவதிலும் மாற்றங்கள்
* பார்வை குறைபாடு
* எரிச்சலான மனநிலை, மன அழுத்தம்
* நீங்கள் சிந்திப்பதில், செயல்படுவதில், மாற்றங்கள்

மேலே கூறிய போல, போல்டரி உணவுகள் என்று கூறப்படும் கோழி இறைச்சி, முட்டை, மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றிலும், பால் சார்ந்த உணவுகளிலும் வைட்டமின் B12 நிறைந்துள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin B12

அடுத்த செய்தி