ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் குறைந்தால் ஆபத்து... இந்த அறிகுறிகளில் கவனம்..!

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் குறைந்தால் ஆபத்து... இந்த அறிகுறிகளில் கவனம்..!

டெஸ்டோஸ்டிரோன் குறைந்தால் ஆண்களுக்கு மட்டுமல்ல..பெண்களுக்கும் பாதிப்பு

டெஸ்டோஸ்டிரோன் குறைந்தால் ஆண்களுக்கு மட்டுமல்ல..பெண்களுக்கும் பாதிப்பு

எந்த ஹார்மோன் ஆக இருந்தாலுமே, அது அதிகரித்தாலும் குறைந்தாலும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனையை உண்டாக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில், உடல்நலத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. அதிக டெஸ்டோஸ்டிரோன் இருந்தால் முகப்பரு, எக்கச்சக்கமான முடி வளர்ச்சி, சருமத்தில் ரோமம், மற்றும் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்களின் ஹார்மோன் என்று கூறப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் என்பது ஆண்களுக்கு குறைவான அளவில் இருந்தால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். ஆண்மை குறைப்பாடு, மலட்டுத் தன்மை, பாலியல் ரீதியான பிரச்சனைகள் முதல் பல விதமான உடல்நல பாதிப்புகள் வரை, டெஸ்டோஸ்டிரான் குறைபாட்டால் ஆண்கள் அவதிப்படுவார்கள். இது ஆண்களுக்கான பிரத்தியேகமான பாலியல் சம்பந்தப்பட்ட ஹார்மோனாக இருந்தாலும், பெண்களுக்கும் இந்த ஹார்மோன் தேவை. பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைந்தால் கூட பல பிரச்சனைகள் ஏற்படுமாம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண்கள் உடலில் டெஸ்டோஸ்டிரான் இருக்கிறதா?

பெண்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் இருக்கிறது. பொதுவாகவே, பெண்களின் ஹார்மோன் என்றால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களின் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் என்பது குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு ஹார்மோன்களுமே ஆண் மற்றும் பெண்ணின் உடல் வளர்ச்சி மற்றும் பலவிதமான செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களை தவிர்த்து, கருமுட்டைகள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனையும் உற்பத்தி செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அட்ரினல் கிளாண்டிலும், மூளையின் ஒரு பகுதியாக இருக்கும் பிட்யூட்டரி கிளாண்டிலும் சுரக்கிறது.

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஏன் அவசியம்?

இனப்பெருக்கம் சார்ந்த திசுக்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கும், அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானாகவே சரிசெய்து கொள்வதற்கும், பெண்கள் உடலில் போதுமான அளவு டெஸ்டோஸ்டிரோன் தேவை. பெண்கள் பூப்பெய்தும்போது அவர்களுடைய உடலின் தேவைக்கு ஏற்றவாறு டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரக்கும். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது, ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்குத்தான் டெஸ்டோஸ்டிரோன் பெண்களின் உடலில் சுரக்கிறது. இருப்பினும் இது பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் : 

எந்த ஹார்மோன் ஆக இருந்தாலுமே, அது அதிகரித்தாலும் குறைந்தாலும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனையை உண்டாக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில், உடல்நலத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. அதிக டெஸ்டோஸ்டிரோன் இருந்தால் முகப்பரு, எக்கச்சக்கமான முடி வளர்ச்சி, சருமத்தில் ரோமம், மற்றும் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும், பின்வரும் பிரச்சனைகள் உண்டாகும்.

* பாலியல் உறவில் திருப்தியின்மை, ஆர்வமின்மை

* தசைகள் பலவீனம், தசைகள் இழப்பு

* மூட் ஸ்விங்க்ஸ் என்று கூறப்படும் மன நிலையில் அதீத மாற்றங்கள்

* தீவிரமான உடல் சோர்வு

* முடி இழப்பு, உதிர்வு, சொட்டை விழுதல்

Also  Read : மாதவிடாய் சுழற்சி தாமதம் ஆவதற்கு 6 முக்கிய காரணங்கள்..!

மேற்கூறிய அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனே மருத்துவரை அணுகி, ஹார்மோன் குறைபாடு இருக்கிறதா பரிசோதித்து கொள்ளவும். உணவு மற்றும் சப்ளிமென்ட்ஸ் வழியாக, இதற்கு எளிய தீர்வுகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Hormonal Imbalance, PCOD, PCOS