சமீபத்தில் டெல்லி - மும்பை சென்ற விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கோலாப்பூரை சேர்ந்த சுஷாந்த் ஷெல்கே என்ற பயணிக்கு, நடுவானில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சு விட முடியாமல் மிகவும் போராடி உள்ளார். அப்போது சக பயணியாகே அவருடன் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் பரிசோதித்த போது ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளார். பின்னர் நிபுணரின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்ட பயணிக்கு சுகர் பவுடர் மற்றும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. தற்போது சுஷாந்த் நலமாக உள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறைந்த ரத்த அழுத்தம் (லோ பிளட் பிரஷர்) எதனால் ஏற்படுகிறது மற்றும் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
லோ பிளட் பிரஷர் என்றால் என்ன.?
இது ஹைபோடென்ஷன் (hypotension) என்றும் குறிப்பிடப்படுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் என்பது 90/60mmHg-க்கும் குறைவான அளவாகும். அதாவது ரத்த அழுத்தம் 90/60mmHg-க்கு கீழ் குறைந்தால் அது 'குறைந்த ரத்த அழுத்தம்' ஆகும். இந்த வரம்புக்கு கீழ் உள்ள எந்தவொரு அளவீடும் குறைந்த ரத்த அழுத்தமாக கருதப்படுகிறது.
லோ பிளட் பிரஷரின் பல வகைகள்:
போஸ்ட்டுரல் ஹைப்போடென்ஷன் (Postural hypotension):
ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் என்றும் இந்த நிலை குறிப்பிடப்படுகிறது. சிலருக்கு படுத்து விட்டு எழுந்திருக்கும் போது, உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது கண்கள் இருட்டி தலைசுற்றல் அல்லது மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவிப்பார்கள். இது திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படும் பிரச்சனையாகும். பெரும்பாலும் இது டிஹைட்ரேஷன், கர்ப்பம், மிக நீண்ட நேர பெட்ரெஸ்ட் மற்றும் சில மருத்துவ நிலைமைகளால் ஏற்படுகிறது.
போஸ்ட்ப்ராண்டியல் ஹைப்போடென்ஷன் (Postprandial hypotension):
இந்த வகை குறைந்த ரத்த அழுத்தம் பொதுவாக சாப்பிட பிறகு அல்லது சில மணி நேரங்களில் ஏற்படுகிறது. சிலருக்கு சாப்பிட்ட பின் ஏற்படும் இந்த ரத்த அழுத்தம் குறைவு பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். டிமென்ஷியா மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்ட வயதானவர்களிடையே இந்நிலை பொதுவானது. சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
நியூரலி மீடியேட்டட் ஹைப்போடென்ஷன் (Neurally mediated hypotension):
நீண்ட நேரம் நிற்பதால் சிலருக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே இந்த நிலை மிகவும் பொதுவானது.
மல்டிபிள் சிஸ்டம் அட்ராபி (Multiple system atrophy):
shy-drager syndrome என்றும் அறியப்படும் இந்த அரிய நிலை ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாசம் மற்றும் செரிமானம் போன்ற தன்னிச்சை செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
குறைந்த ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்:
குறைந்த ரத்த அழுத்தம் சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் கூட ஏற்படலாம். எனினும் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: பார்வை மங்கலாவது, மயக்கம் அலல்து தலைசுற்றல், அதீத சோர்வு, கவனம் செலுத்த முடியாமல் போவது, குமட்டும் உணர்வு, குழப்பம் மற்றும் அதிர்ச்சி குறிப்பாக வயதானவர்களுக்கு, மூச்சுத்திணறல், பலவீனமான பல்ஸ், லேசான தலைவலி.
குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட காரணங்கள்:
- கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் காரணமாக அவர்களது ரத்த நாளங்கள் வேகமாக விரிவடைகின்றன. இது ரத்த அழுத்தம் குறைய வழிவகுக்கும்.
- Addison's disease போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சிலர் குறைந்த ரத்த அழுத்த சிக்கலை எதிர்கொள்வார்கள்.
- ஹார்ட் ஃபெயிலியர் , விறைப்புத்தன்மை குறைபாடு, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் டிப்ரஷன் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்துகளாலும் கூட ஹைபோடென்ஷன் ஏற்படலாம்.
- மது மற்றும் போதை பொருள் பயன்பாடு காரணமாகவும் ரத்த அழுத்த குறைவு ஏற்படலாம்.
Also Read : Low Blood Pressure ஆகிடுச்சா... உடனே கிட்சனில் இருக்கும் இந்த பொருட்களை சாப்பிடுங்க..!
ஹைபோடென்ஷனால் ஏற்பட கூடிய சிக்கல்கள்:
- ஹைபோடென்ஷன் விளைவாக ஏற்படும் மயக்கம் மற்றும் தலைசுற்றல் காரணமாக கீழே விழுவது எலும்பு உடைவது, மூளையதிர்ச்சி அல்லது பிற தீவிர உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படலாம்.
- குறைந்த ரத்த அழுத்தத்தால் ரத்தத்தின் அளவு குறைவதன் மூலம் உறுப்புகளில் தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.
- ரத்த அழுத்த குறைவு காரணமாக இதயம் வேகமாக அல்லது கடினமாக பம்ப் செய்யும் நிலை ஏற்படுகிறது. காலப்போக்கில் இது நிரந்தர இதய பாதிப்பு மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Pressure, Healthy Food