உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நேரத்தில், என்னவெல்லாம் செய்தால் எடையைக் குறைக்க முடியும் என தேட ஆரம்பிப்போம். இந்த நேரத்தில் பொதுவாக கிடைக்கும் அட்வைஸ் இனி பால் மற்றும் அரிசியை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்பது தான். அதற்கு மாற்றாக சிறுதானிய உணவுகள், ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவற்றை நீங்கள் உணவுமுறையில் கடைப்பிடிப்பதோடு முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள் என்பார்கள்.
இந்தக் கூற்று ஒருபுறம் சரியாக இருந்தாலும், முழுவதுமாக இதைப் பின்பற்றக்கூடாது. உடல் எடைக்குறைப்பிலும் அரிசி, வாழைப்பழம், பால் போன்ற பொருள்கள் உதவியாக உள்ளது என்றும் ஒருவர் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இந்த உணவுப்பொருள்களை ஒருவரின் உணவில் இருந்து விலக்கக்கூடாது என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கிரண் குக்ரேஜா. இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெயிளிட்டுள்ளார்.
உடல் எடை குறைப்பில் இருப்பவர்கள் அரிசி மற்றும் பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் இடத்தில், ஏன் இதை உணவில் சேர்க்கச் சொல்கிறார்கள்? அப்படி என்ன தான் பயன்கள் உள்ளது? என நாமும் இங்கே அறிந்துக் கொள்வோம்.
அரிசி:
உடல் எடை குறைப்பில் உள்ளவர்கள் அரிசியை முற்றிலும் புறக்கணிக்கக்கூடாது. பொதுவாக அரிசி என்பது கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலப்பொருளாக உள்ளது. அதே சமயம் குறைவான அளவு நார்ச்சத்து உள்ளது என்பதால் தான் அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் கார்போஹைட்ரேட்டும் நமது உடலுக்கு தேவை என்பதால் குறைவான அளவு சாதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை நீங்கள் சாப்பிடலாம். அதற்கென்று அரிசியை முற்றிலும் புறக்கணிப்பது தவறு.
வாழைப்பழம்:
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் டயட்டில் இருந்து உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பவர்களுக்கும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதில் அதிகளவு புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் செரிமான அமைப்பு சீராக இருக்க உதவியாக உள்ளது. இதோடு உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். எனவே ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழத்தையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
View this post on Instagram
பால்:
பொதுவாக பாலில் அதிக கொழுப்புகள் நிறைந்துள்ளதால், உடல் எடையை அதிகரிக்கும் என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். அதே சமயம் கால்சியம், புரதம், வைட்டமின் 12, ரைஃபோபோவின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. குறைந்த கலோரி டயட் முறையைப் பின்பற்றுபவர்கள் தினமும 3 முறை பால் அல்லது பால் சார்ந்த பொருள்களை எடுத்துக்கொண்டால் உடல் எடையைக்குறைக்க அதிகம் உதவுகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பசையம்:
கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றில் உள்ள புரதம் தான் பசையம். எடை இழப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் பசையம் இல்லாத உணவுகளைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் இது முற்றிலும் தவறு. இவை உடல் எடையை அதிகரிக்கிறதா? என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே எவ்வித தயக்கமும் இன்றி நீங்கள் பசையம் உள்ள உணவுப்பொருள்களைச் சாப்பிடலாம். ஒருவேளை சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள் மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
Also Read : உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
மாம்பழம்:
மாம்பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல் மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்பை உருவாக்கும் செல்களை அழிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் இதில் கலோரிகள் அதிகமாக இருப்பதோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
எனவே இனி டயட்டில் உள்ளவர்கள் இதுப்போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டாம். அதே சமயம் எவ்வித உணவாக இருந்தாலும் அதிகளவு உட்கொள்ள வேண்டாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diet Plan, Rice benefits, Weight loss