ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

2.5 மாதங்களில் 15 கிலோ எடைக்குறைத்த இளம் பெண்… எப்படின்னு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க

2.5 மாதங்களில் 15 கிலோ எடைக்குறைத்த இளம் பெண்… எப்படின்னு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க

எடை குறைப்பு

எடை குறைப்பு

மித்தாலி சமந்த் என்ற பெண் நடனம், சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு 2.5 மாதங்களில் 15 கிலோ வரை குறைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு யாரிடம் கேட்டாலும் டயட்டில் இருக்கிறோம் என்ற வார்த்தையைத் தான்அதிகளவில் கேட்டிருப்போம். ஆம் அதிகரிக்கும் உடல் எடைத் தான் பல நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது. எனவே இவற்றை சரி செய்வதற்கு என்ன தான் பலர் முயற்சி செய்தாலும் கடினமாக ஒரு காரியமாக உள்ளது. ஆனாலும் சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் உடல் எடையைக் குறைக்க உதவியாக உள்ளது.

அதிலும் ஒரு சிலர் சில மாதங்களுக்குள்ளாகவே 10 கிலோவிற்கு தங்களது உடல் எடையைக் குறைத்து சாதனைப் படைக்கின்றனர். இதுப்போன்று தான் மித்தாலி சமந்த் என்ற பெண் நடனம், சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு 2.5 மாதங்களில் 15 கிலோ வரை குறைத்துள்ளார். இதோ எப்படி டயட் பிளானைத் தொடங்கினார்? என்ன உணவுகளைச் சாப்பிட்டார்? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்துக்கொள்வோம்.

2.5 மாதங்களில் 15 கிலோ எடைக்குறைத்த இளம் பெண்...

மித்தாலி சமந்த்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் எடை என்பது 73 கிலோவாக இருந்துள்ளது. அப்போது தான் இப்பெண்ணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விழாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய போது கீழே விழுந்து அடிபட்டதால் முழங்காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இனிமேல் நடனம் மற்றும் உடற்பயிற்சி, வாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பெரும் மனக்கவலையை மித்தாலிக்கு ஏற்படுத்தியுள்ளது. உடல் எடைத்தான் தனக்கு பெரும் பிரச்சனை என்பதை அறிந்ததும் உடல்எடையைக்குறைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இது தான் இவரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

உணவு முறையைக் கடைப்பிடித்தல்:

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக முதலில் உணவு முறையைத் தான் கடைப்பிடிக்கத் தொடங்கினேன் என்கிறார் மித்தாலி. குறிப்பாக புரதங்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை நான் சாப்பிட ஆரம்பித்தேன் என்கிறார். இதோடு மாலை நேர சிற்றுண்டியாக நட்ஸ்களை எடுத்துக்கொள்வேன் என்கிறார். இதோடு குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் எதையும் நான் சாப்பிட மாட்டேன் என்கிறார்.

இதோடு 2020 தொடக்கத்தில் உடல் வலிமைக்காக குத்துச்சண்டை பயிற்சியை எடுக்க ஆரம்பித்தேன். மேலும் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு செல்வதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் சரியான விகிதத்தில் பின்பற்றினேன் என்கிறார். மேலும் உடல் வலிமைக்காக தினமும் மாலை நடனப்பள்ளியில் சேர்ந்து தீவிர நடனம் பயின்றேன் என்கிறார் மித்தாலி சமந்த்.

இதுப்போன்று ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் தீவிர விளையாட்டு மற்றும் டான்ஸ் ஆடுவதோடு ஜங்க் புட்ஸ், இனிப்புகள், அரிசி மற்றும் கோதுமை நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட மாட்டேன் என தெரிவிக்கிறார். இவ்வாறு மேற்கொண்டதன் விளைவாக கடந்த பிப்ரவரி இறுதியில் சுமார் 8 கிலோ வரை உடல் எடையைக்குறைத்தேன் என பெருமையுடன் பகிர்கிறார்.

Also Read : உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் இருக்க போறீங்களா..? இந்த பழங்களை கண்டிப்பாக எடுத்துக்கோங்க...

இவ்வாறு தொடர்ச்சியாக நான் மேற்கொண்டதன் பலன் தான் தன்னுடைய உடல் எடையை 2.5 மாதங்களில் 15 கிலோ வரை குறைக்க முடிந்தது என்கிறார். எனது கல்லூரி காலத்தில் ஆசையாய் வாங்கிய ஆடைகளை தற்போது என்னால் அணிந்துக்கொள்ள முடிவதை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் உடல் எடைக்குறைப்பினால் எப்போதும் டான்ஸ் ஆட முடிவதோடு முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனையும் சரியாகிவிட்டதாக மகிழ்வுடன் பகிர்கிறார் மித்தாலி சமந்த்.

First published:

Tags: Weight loss, Workout