ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Hair Loss | கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? மருத்துவர்கள் சொல்லும் தீர்வுகள்..!

Hair Loss | கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? மருத்துவர்கள் சொல்லும் தீர்வுகள்..!

தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான்.

தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான்.

தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிறைய நபர்கள், கணிசமான அளவில் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள். பெங்களூரு, ஜே.பி. நகரில் உள்ள ஆஸ்டர் ஆர்.வி மருத்துவமனையின் சரும மருத்துவ நிபுணர், ஆலோசகரான மருத்துவர் சினேகா சூட், “கோவிட் தொற்றால் முழுமையாக பாதிப்படைந்து மீண்ட நோயாளிகளுக்கு கடுமையான அளவில் முடி உதிர்கிறது. தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான். உடல் நுண்கிருமியின் தாக்குதலை எதிர்கொண்டு, மீண்டு வந்திருக்கும். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் போது, உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இதனால் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட சில வாரங்களுக்கு மிதமானது முதல் கணிசமான அளவில் முடி உதிர்வு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உடலில் ஏற்பட்ட பாதிப்பையும், உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும், முடி உதிர்தலை அதிகப்படுத்தலாம். ஆனால், 1 முதல் 3 மாதங்களுக்கு பிறகு, நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் டெலோஜென் என்ற நிலையை அடைந்திருந்த முடி, தானாகவே உதிர்ந்து, புதிதாக வளர்வதற்கு வழிவகுக்கும். இந்த நிலையில், ஒரு நாளில் கிட்டத்தட்ட 100 முதல் 200 வரை முடிக்கற்றைகள் உதிரக்கூடும். இந்த விதமான கணிசமான முடி உதிர்வு குறுகிய காலம் மட்டுமே காணப்படும். சில வாரங்களிலேயே, 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த நிலை தானாகவே மாறி விடும். அது மட்டுமின்றி, உங்களுக்கு தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போலவே முடி வளர்ச்சி மற்றும் பேட்டர்ன் மீண்டும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், முதல் முறை கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மீளும் போது, அதன் காரணிகளை சரியாகக் கண்டறிய வேண்டும். மிதமான அளவில் உள்ள முடி உதிர்வை உணவு, யோகா, தியானம், சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம். முடி உதிர்ந்த இடத்தில் புதிய வளர்ச்சியைக் கண்டால், உங்கள் உடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

Must Read | மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge) தடுப்பது எப்படி? இதிலெல்லாம் கவனம் தேவை!

மணிபால் மருத்துவமனைகளின் ஒரு யூனிட்டான, கொலம்பியா ஏஷியா மருத்தவமனையில், சரும மருத்துவ நிபுணர், ஆலோசகராகப் பணியாற்றும் மருத்துவர் தீபா கிருஷ்ணமூர்த்தி ஒரு நாளில் 100 முடிக்கற்றைகள் வரை உதிர்வது இயல்பு என்று கூறினார். வளரும் நிலை, ஓய்வு நிலை மற்றும் உதிரும் நிலை என்ற மூன்று நிலைகளை முடி வளர்ச்சி எதிர்கொள்கிறது. முடி தானாகவே வளரும் தன்மை கொண்டிருந்தாலும், சில நேரங்களில் முடிக்கான சப்ளிமென்ட்ஸ்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுகள் கண்டறியப்பட்டு, அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

வாழ்க்கை முறையில் நீங்கள் செய்ய வேண்டிய கூடுதல் மாற்றங்கள்:

முடிக்கு அடிக்கடி எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்.

உடலில் இயற்கையாக அழற்சி எதிர்ப்பை உண்டாக்கும். உணவுகளான – கொட்டைகள் மற்றும் விதைகள் (பாதாம், முந்திரி, வால்நட், வேகவைத்த நிலகடலை, சியா விதைகள்), பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் சேர்க்க வேண்டும்.

போதிய அளவுக்கு தண்ணீர் அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முடி உதிர்வு மோசமாக இருந்தால், வழுக்கை தெரிவது போல காணப்பட்டால், உடனே உங்கள் சரும மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

ஸல்ஃபேட் இல்லாத ஷாம்ப்பூக்களை பயன்படுத்த வேண்டும்.

அதிகப்படியான வெப்பம் மற்றும் கெமிக்கல் சிகிச்சைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

Published by:Archana R
First published:

Tags: Covid-19, Hair loss, Healthy Life, Post Corona Symptoms