எட்டு மணிநேரம் தொடர்ந்து அமர்ந்திருந்தால் என்ன ஆகும்? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

பணி நேரத்தில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளுங்கள்.

news18
Updated: May 15, 2019, 7:21 PM IST
எட்டு மணிநேரம் தொடர்ந்து அமர்ந்திருந்தால் என்ன ஆகும்? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!
நீண்ட நேரம் அமர்ந்தால் என்ன ஆகும் ?
news18
Updated: May 15, 2019, 7:21 PM IST
எட்டு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால் உங்கள் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜர்னல் ஆஃப் எபிடெமியோலஜியில் வெளியிட்டுள்ள ஆய்வில், மனிதனின் உடல் உழைப்பு , உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் என்பதை எச்சரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு குறைந்த உழைப்பேனும் அவசியம் என்கிறது.

இந்த ஆய்வு மக்களின் உடல்நலம் கருதியே நடத்தப்பட்டது. அதேபோல் உடல் உழைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்த ஆய்வுக்கான காரணம் என இதன் ஆராய்ச்சியாளர் கெய்த் டியாஸ் கூறியுள்ளார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.


இந்த ஆராய்ச்சியில் நான்கில் ஒரு இளைஞர் எட்டு மணி நேரம் அல்லது எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அமர்ந்திருக்கும் பழக்கம் கொண்டிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக டியாஸ் கூறியுள்ளார்.
அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களோடு ஒப்பிடும்போது, அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யாதவர்களின் ஆயுட்காலம் அதிகமாக இருந்துள்ளது.Loading...

அதேபோல் 30 நிமிடங்களுக்குக் குறைவாக அமருவோருக்கு ஆரோக்கியமான உடல் நிலை இருந்தது தெரியவந்துள்ளது.
எனவே குறைந்தது 30 நிமிட ஆக்டிவிட்டீஸ் உங்கள் இறப்பை 17 சதவீதம் குறைக்கும், அதுவே 60 நிமிடமாக நீடித்தால் 35 சதவீதம் குறையும் என்கிறது ஆய்வு. அதேபோல் ஷார்ட் பஸ்டராக குறைந்த நேர ஆக்டிவிட்டி சற்று உடல் நலனைப் பாதுகாக்கும் என்கிறது.

பணி நேரத்தில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறார் டியாஸ்.

எனவே நீங்கள் நீண்ட நாள் வாழ நினைத்தால் நிச்சயம் அமரும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் குறைந்தது 30 நிமிடங்களாவது உடல் உழைப்பு செய்யுங்கள்.

இதையும் படிக்க :

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வோருக்குக் காத்திருக்கும் ஆபத்துக்கள்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...