கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பணியாளர்கள் வொர்க் பிரம் ஹோம் முறையில் பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலமாக படிப்பதாலும் நாளொன்றுக்கு அவர்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் ஃபோன் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ப்ளூ லைட் முன்பு பல மணி நேரம் அமர்ந்திருப்பதால், அவர்களது கண்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கண்களின் நலனை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் அவ்வபோது கண் பரிசோதனை செய்து கொள்வது ஆகியவற்றின் மூலமாக கண் நலனை பராமரிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், உங்கள் அன்றாட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் கண்களுக்கான ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்த முடியும். நெல்லிக்காய், நெய், உலர் திராட்சை, இந்து உப்பு மற்றும் திரிபலா போன்றவை உங்கள் பார்வை திறனை மேம்படுத்தும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆயுர்வேத மருத்துவர் ஐஸ்வர்யா சந்தோஷ், இதுகுறித்த பல தகவல்களை இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளார். அவற்றை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கு விட்டமின் சி சத்தை காட்டிலும், நெல்லிக்காயில் 20 மடங்கு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்களில் கேபிளரீஸ் நலனை மேம்படுத்துவதோடு, ரெடினல் செல்ஸ் நலனை பாதுகாப்பதிலும் விட்டமின் சி சத்து மிக முக்கியமானது. குறிப்பாக, சர்க்கை நோய் பாதிப்பு காரணமாக ரெடினோபதி என்ற சிக்கலை எதிர் கொண்டிருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமைகிறது. இதேபோன்று, நெய் அல்லது தேனுடன் சேர்த்து இரவு நேரத்தில் திரிபலா பவுடர் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஐஸ்வர்யா சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
இருக்கும் உப்புகளிலேயே, பாறை உப்பு வகைகள் மட்டுமே கண் நலனுக்கு நல்லது என்று அவர் குறிப்பிடுவதால், உங்கள் வீட்டில் உள்ள வெள்ளை உப்பை தவிர்த்துவிட்டு, இதை பயன்படுத்த தொடங்குவது நல்ல. கண் தசைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் உலர் திராட்சை பழங்களில் இருக்கிறது. இதேபோன்று தேனிலும் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் நிரம்பியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இறுதியாக நாம் பார்க்க இருப்பது நெய். இருப்பதிலேயே மிக அதிகமான பலன்களை கண்களுக்கு கொடுக்க கூடியது இது.
கூடுதல் டிப்ஸ்…
அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதால் உங்கள் கண்களில் சூடு பிடித்துக் கொள்ளும். இதை தவிர்க்க வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலமாக கண்களை குளிர்விக்க முடியும். இது தவிர பச்சை நிற தாவரங்கள், மரங்கள் போன்றவற்றை சிறிது நேரம் ஒதுக்கி கூர்ந்து கவனிப்பதன் மூலமாக கண்களுக்கு குளுமையை ஏற்படுத்த முடியும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.