சமூகத் தனிமை மற்றும் தனித்திருத்தலால் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

மாதிரி படம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட வயதான மற்றும் விதவை பெண்களை சுகாதாரப் பணியாளர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

  • Share this:
தனிமை மற்றும் சமூக தனிமை ஆகியவை பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக பதற்றம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆய்வின்படி, சமூகத்தில் இருந்து தனித்திருத்தல் என்பது வெவ்வேறு வழிகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு உயர் இரத்த அழுத்தம் எனும் இதழில் வெளியிடப்பட்டது.

அதில், குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நடுத்தர வயது மற்றும் வயதான பெண்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு வயதானவர்கள் குறித்த கனேடிய லாங்கிடியூடினல் ஆய்வின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அதில் 45 முதல் 85 வயதுக்குட்பட்ட சுமார் 28,238 பெண்களின் சமூக பிணைப்பை அவர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் சிங்கிள்ஸ்-ஆக அதாவது தனித்திருக்கும் பெண்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஒரு மாதத்தில் மூன்றுக்கும் குறைவான சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், தங்களது தொடர்பு பட்டியலில் 85-க்கும் குறைவான நபர்களைக் கொண்டிருந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. உண்மையிலேயே, விதவை, சிங்கிள்ஸ் மற்றும் சமூக ஈடுபாடற்ற பெண்களிடையே சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. திருமணமான பெண்களுடன் ஒப்பிடும் போது, விதவை பெண்களில் சராசரியான இரத்த அழுத்தம் அதிகமாக கண்டறியப்படுகிறது.எனவே விதவை பெண்கள் எல்லா வகைகளிலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வு கூறியுள்ளது. அதேசமயம் ஆண்களின் விஷயத்தில் இந்த அமைப்பு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. அதிகப்படியான சமூக பிணைப்பு கொண்ட சிங்கிள்ஸ் மற்றும் அதிக நண்பர்களுடன் வாழும் ஆண்களுக்கு அதிக இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சிறிய அளவில் சமூக பிணைப்பு கொண்ட ஆண்கள் மற்றும் தனியாக வாழ்ந்தவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தது.

மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி தடைபடுகிறதா..? 5 நாட்களுக்கும் திட்டங்கள் இதோ...

யுபிசியில் மருந்து அறிவியல் உதவி பேராசிரியராக இருக்கும் அன்னாலிஜ் காங்க்ளின் கூறியதாவது, வாழ்க்கையில் தனித்திருக்கும் பெண்கள் பொதுவாக அதிக சோடியம் உட்கொண்டு உடல் பருமனால் அவதிப்பட்டனர். அதே நேரத்தில் குறைந்த சமூக உறவு கொண்ட ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது என்று கூறினார். சமூக பழக்கங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களைக் காட்டிலும் ஒற்றை வாழ்க்கையில் இருக்கும் நபர்கள் தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்த ஒரு சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியைப் பராமரிப்பதோடு சமூக நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பதும் முக்கியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.மேலும், வாழ்க்கையில் தனித்திருத்தல் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு முடிவு செய்தது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட வயதான மற்றும் விதவை பெண்களை சுகாதாரப் பணியாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். அவர்களின் உணவு மற்றும் அவர்களின் சமூக தொடர்புகளை கவனித்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக பதற்றம் ஆகியவற்றின் மாற்றத்தை குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து அவர்களை மீட்கக்கூடும் என ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: