கல்லீரல் நமது உடலில் ஜீரணத்துக்கு உதவுவது, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பலவகையான வேலைகளை செய்கிறது. உடலில் இதயம், சிறுநீரகம் , நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாக அமைகின்றன.
அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில் அமைந்துள்ள கல்லீரலும் உடலின் வளர்சிதை மாற்ற மற்றும் செயற்கை செயல்பாடுகளில் செயலில் பங்கு கொள்கிறது. எனவே, கல்லீரல் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டாலும் அது, முழு உடலின் செயல்பட்டையும் பாதிக்கும். எனவே கல்லீரல் செயல்பாடு சரியில்லை என்பதை உணர்த்தக்கூடிய 5 முக்கியமான அறிகுறிகள் என்னென்ன என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து அறிந்துகொள்ளுங்கள்.
1. மஞ்சள் காமாலை:
மஞ்சள் காமாலை என்பது தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தைப் ஏற்படுத்தும் மருத்துவ நிலையாகும். சிறுநீர் கூட அடர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இவை கல்லீரல் பாதிப்பு மற்றும் பிற அடிப்படை நிலைமைகளின் நுட்பமான பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும். கல்லீரல் சிவப்பு இரத்த அணுக்களை திறம்பட செயலாக்கத் தவறினால் பிலிரூபின் உருவாகிறது, இது ஒரு வகையான நிறமி ஆகும். ஒரு ஆரோக்கியமான கல்லீரல் பிலிரூபினை உறிஞ்சி பித்தமாக மாற்றுகிறது, இது செரிமான செயல்பாட்டில் பங்கேற்கிறது மற்றும் மீதமுள்ளவை மலம் மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
2. தோல் அரிப்பு:
கல்லீரலின் இயல்பான செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டால், அது தோலுக்கு கீழ் பித்த உப்புக்கள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. இதன் வெளிப்பாடாகவே தோலில் அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது கல்லீரல் செயல்பாட்டில் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தக்கூடிய முதல் அறிகுறியாகும். இருப்பினும், தோல் அரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படும் அனைவருக்கும் பித்தத்தின் அளவு அதிகமாக இருக்காது. இது மற்ற நிபந்தனைகளின் காரணமாகவும் இருக்கலாம்.
பதப்படுத்தி வறுக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவரா..? உங்களுக்கான எச்சரிக்கை..!
3. பசியின்மை:
கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்த சாற்றின் செயல்பாடுகளில் ஒன்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இயற்கையாகவே, கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அது பசியின்மைக்கு வழிவகுக்கும். இது மேலும் எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றிற்கும் காரணமாக அமைகிறது.
4. ரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்புகள்:
உடலில் அடிக்கடி சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் காயங்கள் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாலோ, உடனடியாக உங்கள் கல்லீரல் நன்றாக வேலை செய்கிறதா என்பதை மருத்துவரிடம் சோதித்து பார்ப்பது நல்லது. காயத்திற்குப் பிறகு ரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு என்பது ரத்தம் உறைவதற்குத் தேவையான குறிப்பிட்ட புரதங்கள் இல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு தேவையான புரதம் கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது, எனவே இதுபோன்ற அறிகுறிகளும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதை உணர்த்துபவை ஆகும்.
5. கவனச்சிதறல்:
கல்லீரல் இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டத் தவறினால், அது உடலின் மற்ற செயல்பாடுகளைத் தடுக்கத் தொடங்குகிறது. இதனால் ஏற்படும் நச்சுத்தன்மையின் அறிகுறியாக உங்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கவனமின்மை, குழப்பம், நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள், முடிவெடுக்க முடியாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் அடிப்படை கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகளாகும்.
கல்லீரல் செயலிழப்பின் பிற அறிகுறிகள்:
கல்லீரல் செயலிழப்பை கண்டறிய உதவும் பிற அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* மேல் வலது வயிற்றில் வலி
* வயிறு வீக்கம்
* குமட்டல்
* வாந்தி
* குழப்பம்
* தூக்கம்
கசப்பான அல்லது இனிமையான வாசனை ஆகியவையும் கல்லீரல் செயலிழப்பை கண்டறிய உதவும் முக்கியமான சில அறிகுறிகள் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Liver Disease, Liver Health