முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் பருமன் Vs இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு - கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

உடல் பருமன் Vs இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு - கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

உடல் பருமன் - இனப்பெருக்க ஆரோக்கியம்

உடல் பருமன் - இனப்பெருக்க ஆரோக்கியம்

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பது முழுக்க முழுக்க பொய்யான கருத்து.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய பிரச்சனையாக உடல் பருமன் மாறி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பல நோய்களும் குறைபாடுகளும், உடல் பருமனால் அதிகரித்து வருகிறது. இதில் இனப்பெருக்க ஆரோக்கியமும் உடல் பருமனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமனாக இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. இதைப் பற்றிய உண்மைகள் மற்றும் தவறான கூற்றுகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

குழந்தையின்மை என்பது ஒரு தம்பதியின் வாழ்வை பலவிதங்களில் பாதிக்கக்கூடும். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் உடல் பருமன் ஏற்படுவதால், குழந்தை பிறக்காமல் அல்லது தாமதவதற்கு பலவிதமான காரணிகள் இருக்கின்றன. இதில் எவையெல்லாம் உண்மை என்பதைப் பற்றிய பட்டியல் இங்கே.

உடல் பருமனால் ஏற்படக்கூடிய குழந்தையின்மை பெண்களை மட்டுமே சார்ந்ததாகும் 

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்களில் காணப்படும் மலட்டுத்தன்மை மட்டுமே காரணம் என்பது மிகமிக தவறான கருத்து. ஆண் பெண் இருவரிடமும் இனப்பெருக்கம் சார்ந்த குறைபாடு ஏதேனும் இருக்கலாம். எனவே உடல் பருமனால் இருவருக்குமே குழந்தை தாமதமாகலாம் அல்லது குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் குறைபாடு அல்லது பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவை குழந்தையின்மைக்கு காரணமாக அமையும்.

உடல் பருமன் ஆரோக்கியத்தை பாதிக்காது

ஏற்கனவே கூறியது போல, நாட்பட்ட நோய்களுக்கு உடல்பருமன் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கார்டியோவாஸ்குலர் நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வாதம், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட உடல் ரீதியான நோய்களுக்கும், மன ரீதியான பல்வேறு நிலைகளுக்கும் உடல் பருமன் முக்கியமான காரணமாக இருக்கிறது. உடல் எடை 5 – 10 சதவீதத்திற்கும் அதிகரித்தால் கூட கொலஸ்டிரால், சர்க்கரை ஆகியவை கணிசமான அளவு அதிகரிக்கும்.

உங்கள் ஆரோக்கியத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பது முழுக்க முழுக்க பொய்யான கருத்து. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் இனப்பெருக்க ஆரோக்கியமும் நலமாக இருக்கும். குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படாது. உதாரணமாக அனிமியா குறைபாடு இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில் தாமதம் ஆகும் இதனால் கருத்தரித்தலில் பிரச்சனை ஏற்படும்.

ரிலாக்ஸாக இருந்தால் போதும், கருத்தரித்துவிட முடியும்

பொதுவாகவே மன அழுத்தத்தால் தான் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த கருத்து ஒரு பக்கம் பார்க்கும் போது உண்மைதான், மன அழுத்தத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகிறது. ஆனால் ஒரு சிலருக்கு உடல் ரீதியான குறைபாடுகளால் குழந்தையின்மை என்ற பிரச்னை உருவாகிறது அல்லது கருத்தரிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே எல்லோருக்குமே, நீங்கள் மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸாக ஓய்வாக இருந்தால் போதும் குழந்தை கருத்தரிக்க முடியும் என்பது பொருந்தாது.

Also Read : கர்ப்ப காலத்தில் அதிகமாக பசி எடுப்பது நார்மலா?

உடல் ரீதியான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அதற்குரிய சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும். இது எதுவுமே செய்யாமல் ரிலாக்ஸாக இருப்பது மட்டுமே கருத்தரிப்பில் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.

First published:

Tags: Infertility, Obesity, Pregnancy