எபோலா போன்ற 10 வகையான வைரஸ் தொற்றுகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து - எச்சரிக்கும் இந்திய ஆய்வாளர்கள்

உகண்டாவில் வாழும் 30,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

news18
Updated: July 23, 2019, 12:20 PM IST
எபோலா போன்ற 10 வகையான வைரஸ் தொற்றுகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து - எச்சரிக்கும் இந்திய ஆய்வாளர்கள்
வைரஸ் தொற்று
news18
Updated: July 23, 2019, 12:20 PM IST
இந்தியாவிற்குள் வைரஸ் தொற்றுகள் பரவுவதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்றும் இந்தியா இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுவரை இந்தியாவிற்குள் நுழையவில்லை என்றாலும் மற்ற நாடுகளை கடுமையாக தாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (NCDC) ஆகிய இரண்டும்தான் இந்தியாவின் மிக முக்கிய ஆராய்ச்சி மையங்களாகும்.

இவை இரண்டும் நடத்திய ஆராய்ச்சியில்தான் இந்த வைரஸ்தொற்று பரவும் அபாயத்தைக் கண்டறிந்துள்ளன. ஆய்வில் கிட்டத்தட்ட 10 வகையான வைரஸ் தொற்றுகள் இந்தியாவைத் தாக்கும் என்று கூறியுள்ளனர். அவை எபோலா, மஞ்சள் காய்ச்சல், MERS-CoV , பறவைக் காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றுகளாகும். இந்த வைரஸுகள் இறப்பை ஏற்படுத்த 70 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தொற்றுகள் அதிகரித்துள்ள வெளிநாட்டுப் பயணங்களால் எளிதில் இந்தியாவை அடையும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர் பல்ராம் பார்கவா கூறுகிறார். இவர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொது இயக்குநராக இருக்கிறார். ”உகண்டாவில் வாழும் 30,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குழுக்களும் அங்கு இருக்கின்றனர். அவர்கள் அளித்த தகவல்படி அவை தற்போது மற்ற நாடுகளையும் தாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவையும் தாக்கும். “ என்கிறார் பார்கவா.இந்த எபோலா நோயானது உடல் திரவங்கள் மூலம் பரவக் கூடியது. அவை இரத்தக் கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும். இதனால் உள் மற்றும் வெளிப்புற உடல் உறுப்புகளில் தனாகவே இரத்தம் கசியும். இதோடு மற்ற கடுமையான அறிகுறிகளும் தோன்றும். இதனால் இறப்பு ஏற்பட 70 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Loading...

மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ்கள் என்று சொல்லப்படும் MERS-CoV என்னும் வைரஸ் சவுதி அரேபியாவில்தான் 2012 ஆம் ஆண்டு உருவானது. தற்போது அது 26 நாடுகளில் பரவியுள்ளது. நல்வாய்ப்பாக இந்தியாவில் அந்த வைரஸ் தொற்று இல்லை. ஆனால் அவை தற்போது வரக் கூடிய ஆபத்தை  எட்டியிருக்கிறோம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த வைரஸானது வௌவால்கள் மூலம் பரவக் கூடியது என்பதுதான் கண்டறியப்பட்ட ஆய்வு. ஆனால் தற்போது அவை ஒட்டகம் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.எதுவாயினும் அதிகமான வௌவால்களும் , கணிசமான அளவில் ஒட்டகங்களும் இந்தியவில் இருக்கின்றன. அதேசமயம் வெளி நாட்டு வாசிகளின் வரத்தும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளிகளிருந்து வேலைக்காகவும், சுற்றுலாவிற்கும் வந்து செல்கின்றனர்.

எனவே இந்த வைரஸ் தாக்க சாதமான சூழல் எளிமையாக இருப்பதால் இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவற்றை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தொற்றும் ஏற்படும் ஆபத்து இருப்பதையும் எச்சரிக்கிறது.

மஞ்சள் காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மஞ்சள் காய்ச்சலின் வீரியம் அதிகமாகும்போது மஞ்சள் காமாலை ஏற்படும்.  தொடர்ந்து டெங்கு, சிக்குன்குன்யா போன்ற வீரியம் அதிகமான காய்ச்சல்களும் ஏற்படும். இவை கொசுக்கள் மூலம் பரவும் என்பதால் சுற்றியுள்ள பரப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இந்தக் வைரஸ் கொசுக்கள் ஆப்பிரிகா மற்றும் மத்திய, தெற்கு அமெரிக்காவிலிருந்துதான் அதிகம் பரவுகின்றன. இங்கும் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதும், சென்று வருவதும் அதிகரித்துள்ளது.

”எது நடந்தாலும், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் அளவிற்கு நம் நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக” பார்கவா கூறியுள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...