தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் உடலுறவில் ஈடுபடுவது குறித்து பல சரியான தகவல்கள் பற்றிய புரிதல் இல்லாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறர்கள். அதிலும் குறிப்பாக பீரியட் செக்ஸ் பாதுகாப்பானதா என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
பீரியட் செக்ஸ் என்பது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றியதாகும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் இருவரும் வசதியாக உணர்ந்தால் பெண்களின் மாதவிடாய் நேரத்தில் தம்பதியர் உடலுறவு வைத்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பதற்கு எவ்வித அறிவியல் சான்றுகளும் இல்லை.
மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது மாதவிடாய் அறிகுறிகளை குறைக்க உதவுவது போன்ற பலன்களை தருவதாக சிலர் உணர்கிறார்கள். அதே போல சிலருக்கு மாதத்தின் மற்ற நேரங்களில் உடலுறவு வைப்பதை விட மாதவிடாய் பீரியட் செக்ஸின் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். ஆனால் சிலர் மாதவிடாயின் போது கடும் வலியை உணர்கிறார்கள்.
எனவே ஒருவர் தன் துணையுடன் பீரியட் செக்ஸில் ஈடுபட தயாராகும் முன் மேற்கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் பீரியட்ஸின் போது ரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே அப்போதைய உடலுறவு தொற்றுக்கான ஆபத்தையும் கொண்டுள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்க உடலுறவின் போது ப்ரொட்டக்ஷனை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
பீரியட் செக்ஸின் நன்மைகள்:
பீரியட்ஸின் போது உடலுறவு கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் குறைவாக இருப்பதால் யோனி வலி குறைவாக இருக்க கூடும். அப்போது பீரியட்ஸ் செக்ஸ் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக வைக்கும். ஆர்கஸத்தை அடைய அதிக நேரம் தேவைப்படலாம் என்பதையும் இது குறிக்கிறது. சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் அதிகரித்த லிபிடோவை உணர்வதாக கூறியிருக்கிறார்கள். வயிற்று பிடிப்புகள், அதிக வலி, முகப்பரு உள்ளிட்ட PMS அறிகுறிகள் இருந்தால் பீரியட் செக்ஸ் இவற்றை குறைக்க உதவும்.
Also Read : செக்ஸ் உறவு போர் அடித்துவிட்டதா..? புதுப்பிக்க இந்த 6 விஷயங்களை டிரை பண்ணுங்க..!
வலி நிவாரணம்:
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று பகுதியில் ஏற்படும் வலி ஒரு சிலருக்கு மிக தீவிரமாக இருக்கும். கருப்பை சுருங்குவதால் வயிறு இழுத்துப்பிடிப்பது, அதீத வலி உள்ளிட்டவை ஏற்படும். மேலும் எண்டோமெட்ரியல் லைனிங் உள்ளிருந்து வெளியேறி ரத்த போக்காக வெளிவருகிறது. இந்த நேரத்தில் வைத்து கொள்ளும் செக்ஸால் ஏற்படும் ஆர்கஸம் சில பெண்களின் மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளை போக்க உதவுகிறது.
தலைவலி நிவாரணம்:
ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பொதுவான மாதவிடாய் அறிகுறியாக இருக்கிறது தலைவலி. பீரியட் செக்ஸ் மூலம் நல்ல என்டோர்பின்ஸ்கள் வெளியிடப்படுகின்றன. இது தலைவலி உள்ளிட்ட மாதவிடாய் கால அசௌகரியத்தில் இருந்து உங்களை திசைதிருப்ப உதவும்.
லூப்ரிகேஷன்:
யோனி வறண்டிருந்தால் மாதவிடாய் ஓட்டம் (Menstrual flow) இயற்கை லூப்ரிகன்ட்டாக செயல்படும். இது செக்ஸ் வைத்து கொள்ளும் போது கடையில் லூப்ரிகன்ட்ஸ் வாங்கி பயன்படுத்தவுதற்கான தேவையை குறைத்து, செக்ஸ் அனுபவத்தை மேம்படுத்தும்.
பீரியட் செக்ஸ் அபாயங்கள்:
மாதவிடாய் காரணமாக வெளியேறும் ரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே மாதவிடாய் காலத்தில் எளிதாக தொற்றால் பாதிக்கப்பட கூடும். பாதுகாப்பான உடலுறவு மற்றும் அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றால் தொற்று பாதிப்பை சந்திக்க நேரிடும். அதே போல மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கலாம். அதே போல விந்தணுக்கள் இனப்பெருக்க மண்டலத்தில் 5 நாட்கள் வரை ஆக்டிவாக இருக்க கூடும் என்பதால் குறுகிய கால் பீரியட்ஸ் சைக்கிள் கொண்டவர்கள் பீரியட் செக்ஸினால் கூட கருத்தரிக்கலாம்.
Also Read : குளிர்காலத்தில் ஆணுறுப்பு நீளம் குறைந்துவிடுமா..? என்ன காரணம்..? சரி செய்ய டிப்ஸ்..!
எனவே கர்ப்பமாக முயற்சிக்காதவர்கள் தகுந்த பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவு (ஆணுறை அல்லது பிற கருத்தடை இல்லாத உடலுறவு) பால்வினை நோய்கள் (STDs) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பீரியட் செக்ஸ் STDs-கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. HIV அல்லது ஹெபடைடிஸ் உள்ள ஒருவர் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், அவர்களின் துணையை இதன் மூலம் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர். மாதவிடாய் நேரத்தில் சிலர் Tampons பயன்படுத்துவார்கள். உடலுறவுக்கு முன் அதை அகற்ற மறந்துவிட்டால் யோனிக்குள் அவை ஆழமாக சென்று தொற்றுகளை ஏற்படுத்த கூடும்.
முன்னெச்சரிக்கைகள்:
- உங்கள் உடலில் ஏதேனும் திறந்த காயங்கள் அல்லது புண்கள் இருந்தால், அவை குணமாகும் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள இது உதவும்.
- பீரியட் செக்ஸால் படுக்கை பாழாகிவிடும் என்று நினைத்தால் நீளமான டார்க் கலர் டவலை கீழே வைத்து பின் உறவை தொடங்கலாம். கறைகளை பற்றி கவலை இருக்காது.
- தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க birth control-ஐ பயன்படுத்த மறக்காதீர்கள். பீரியட்ஸின் போது ஓவலேஷன் இருக்காது என்பதால் நீங்கள் கர்ப்பமாக முடியாது என்று அர்த்தமல்ல.
எனவே பீரியட் செக்ஸ் வைக்க முடிவு செய்தால் பால்வினை நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள ஆணுறை பயன்படுத்துவது, மாதவிடாயின் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொள்வது, மாதவிடாய் காலத்தில் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளுக்கு அதிக சென்சிட்டிவாக இருக்கலாம் என்பது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.