எலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையுமா..?

எலுமிச்சை வாசனை இருக்கிறதெனில் அதை நுகரும்போது அதிக எடையைக் கொண்டிருந்தாலும் மனம் மற்றும் மூளையின் புத்துணர்ச்சியால் பூரிப்படைந்து உடல் மெலிந்த , எடைக் குறைந்த உணர்வைப் பெறுவதாகக் கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பிரியான்ஸா.

news18
Updated: September 20, 2019, 11:36 AM IST
எலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையுமா..?
எலுமிச்சை
news18
Updated: September 20, 2019, 11:36 AM IST
எலுமிச்சை மருத்துவ குணங்களை உள்ளடக்கியது மட்டுமன்றி அழகு பராமரிப்பிற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் உள்ள வைட்டமின் c சத்து சருமத்திற்கு ஏற்றது என்பதாலேயே பல காஸ்மெடிக்ஸ் நிறுவனங்களும் எலுமிச்சையை மூலப் பொருளாகக் கொண்டு அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

முக அழகு, உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி எலுமிச்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எலுமிச்சை நீரை தண்ணீரில் பிழிந்து குடிப்பதால் உடல் எடைக் குறையும் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதன் விளைவுதான் இன்றைக்கு லெமன் டீக்கு கிடைத்திருக்கும் டிமாண்ட். இவை எல்லாவற்றையும் முறியடிக்கும் விதமாக தற்போது எலுமிச்சையினால் மற்றொரு பலன் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது எலுமிச்சையை ஜூஸாக குடிப்பது, முகத்தில் தேய்ப்பது என எல்லாவற்றையும் விட எலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையும் , அழகு கூடும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


எலுமிச்சை குறித்த 17வது உலக மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் ஆராய்ச்சியின் தலைவர் ஜியாடா பிரியான்ஸா இந்த ஆய்வை வெளியிட்டுப் பேசியுள்ளார்.

இதற்கு முன்னரே நுகர்தல் உணர்வு நமக்கு லேசான உணர்வை அளிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.Loading...

அதில் “ வெண்ணிலா மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டையும் வைத்து இந்த சோதனை முயற்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் முதல் கட்ட ஆய்வில் அவர்களுக்கு எலுமிச்சை வாசனை அளிக்கப்பட்ட அறையில் இருந்தவர்கள் ஃபீல் குட் உணர்வை பெற்றுள்ளனர். மனம் லேசாவதையும் உணர்ந்துள்னர். இரண்டாம் கட்ட ஆய்வில் வெண்ணிலா மணம் தெளிக்கப்பட்டதில் இறுக்கமாகவும், திடமாகவும் உணர்ந்துள்ளனர்.

எனவே உணவு அல்லது பாணங்களில் எலுமிச்சை வாசனை இருக்கிறதெனில் அதை நுகரும்போது அதிக எடையைக் கொண்டிருந்தாலும் மனம் மற்றும் மூளையின் புத்துணர்ச்சியால் பூரிப்படைந்து உடல் மெலிந்த , எடைக் குறைந்த உணர்வைப் பெறுவதாகக் கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பிரியான்ஸா.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...