ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சளி, இருமல் , தொண்டை கரகரப்புக்கு எலுமிச்சை பலன் தருமா..? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

சளி, இருமல் , தொண்டை கரகரப்புக்கு எலுமிச்சை பலன் தருமா..? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கான பலன் இருப்பதால் அதை வாங்குவதிலும், சேமித்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சீனாவில் எலுமிச்சை தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் மீண்டும் அதிகரித்து கொரோனா தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முணைப்பில் சீன மக்கள் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர். அப்படி எலுமிச்சை பழத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கான பலன் இருப்பதால் அதை வாங்குவதிலும், சேமித்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சீனாவில் எலுமிச்சை தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இங்கு எலுமிச்சை பற்றிய சில கருத்து முரண்பாடுகளும் வாய் வழியாக பரவுவதுண்டு. அதாவது, சிலர் சளி பிடித்திருக்கும் சமயத்தில் எலுமிச்சை சாப்பிடக்கூடாது. அது சளியை அதிகரிக்கும் என்பார்கள். இப்படி இரு வேறு கருத்துக்கள் உள்ள நிலையில் ஆய்வுகள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சில ஆய்வுத் தரவுகளை ஆராய்ந்த போது எலுமிச்சையில் வைட்டமின் C இருப்பதால் சளிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என பரிந்துரைக்கின்றனர்.அதாவது எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

அதுமட்டுமன்றி பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதாலும் உடலுக்குத் தேவையான சில மினரல் சத்துக்களும் உள்ளதால் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல் உடலின் pH அளவை சீராக்கி சமநிலைப்படுத்துவதால் சளி மற்றும் இறுமலுக்கு நல்லது.

நெஞ்சு சளி இருந்தாலும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதோடு அரை பாதி வெங்காயமும் நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தாங்க முடியாத நெஞ்சு சளி இருக்கும்போது ஒரு கப் குடித்து வர குணமாகும் என பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜெத்ரோ க்லோஸ் ’பேக் டு எடன்’ புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த குறிப்பு சைனஸிற்குக் கூட குணமாகும்.

அதேபோல் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இருமல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்றவை அடங்கும். எந்த உணவாக இருந்தாலும் உங்கள் உடலுக்கு எந்த மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது என்பதைப் பொருத்தே உணவின் தேர்வு இருக்க வேண்டும்.

ஹைட்ரேஷன் : பொதுவாக காய்ச்சல் , சளி சமையத்தில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும். இதற்கு எலுமிச்சையில் பலன் உண்டு. குறிப்பாக லெமன் வாட்டர் உடலில் நீர்சத்தை மேம்படுத்துகிறது. வெறுமனே தண்ணீரை குடிப்பது ஒருகட்டத்தில் சலித்து விடும். நீங்கள் தண்ணீரை லெமன் வாட்டர் வடிவில் எடுத்து கொள்ளும் போது தண்ணீர் உட்கொள்ளல் எளிதாகிறது. தவிர லெமன் வாட்டர் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் கார்பனேட்டட் பானங்கள் அருந்துவதை குறைக்க லெமன் வாட்டர் உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது : லெமன் வாட்டரை சூடாக அல்லது வெதுவெதுப்பாக அருந்துவது நம் உடலில் மலமிளக்கியாக செயல்படுகிறது. உங்கள் நாளை நீங்கள் வெதுவெதுப்பான லெமன் வாட்டர் குடிப்பதன் மூலம் துவங்கினால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கவும் பெரிதும் உதவும். ஆயுர்வேத அடிப்படையில் பார்த்தால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.

எடை இழப்பு : லெமன் வாட்டர் குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளல் அளவை அதிகரிக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் முக்கிய உத்தியாக அதிக நீர் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. தவிர இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க விரும்புவோர் காலை வேளையில் லெமன் வாட்டர் குடிப்பது நல்லது. ஏனென்றால் காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் உச்சத்தில் இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்: ஏற்கனவே நாம் குறிப்பித்தது போல எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. லெமன் வாட்டர் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிப்பது, பளபளப்பான மற்றும் குறைபாடற்ற சருமத்திற்கு உதவுவது உட்பட எண்ணற்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

First published:

Tags: Cold, Covid-19, Immunity boost, Lemon, Sore throat, Vitamin C