சர்க்கரை நோய் என்பது ஒருவரது தவறுகளால் மட்டுமல்ல, தற்போது பல காரணங்கள் வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இவை அனைத்திற்கும் மறைமுகமாக நாமும் பொறுப்பாகிறோம். தினமும் நாம் கடந்துபோகும் சாலைகளில் நியான் லைட்டுகள் கொண்ட விளம்பரப் பலகைகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் லேசர் ஒளிக்கற்றைகள், கட்டிடங்களில் மின்னும் எல்இடி விளக்குகள் போன்றவை நீரிழிவு நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
ஆராய்ச்சியின் படி, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி (LAN) உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.
சர்க்காடியன் ரிதம் மாற்றமடைகிறது :
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடாங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் LAN மற்றும் நீரிழிவு அபாயத்திற்கு இடையேயான உறவை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
LAN விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்இடி ஒளியால், குளுக்கோஸின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : காற்று மாசுபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்குமா..? - நிபுணர்களின் கருத்து என்ன?
அதாவது சாதாரண மக்களை விட இரவில் LED விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் பிராசிக்கும் அழகுக்காக சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடலானது, எல்இடி விளக்குகளால் இரவு , பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.
ஆய்வில் கண்டறியப்பட்ட ஆச்சரியமான உண்மை என்னவென்றால், பிரகாசமான விளக்குகளின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதால், அந்த நபர்களின் பிஎம்ஐ அளவும் அதிகமாகும். இவர்கள் உடல் செயல்பாடுகளைச் செய்தாலும், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. இந்த ஆய்வு சமீபத்தில் நீரிழிவு பற்றிய ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் இதழான டயபெடோலாஜியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில், நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதன்படி, இருட்டாக இருக்கும்போது, மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இதன் காரணமாக நமக்கு தூக்கம் வரும். காலையில், ஒளியுடன், கார்டிசோல் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து நம்மை எழுப்புகிறது. காலையில் அதிக கார்டிசோல் ஹார்மோன் காரணமாக, சர்க்கரையின் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாம் காலையில் அதிக உடல் உழைப்புடன் இருக்கிறோம். ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, கார்டிசோல் ஆதிக்கம் செலுத்தும் போது மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes