உடல் எடையை குறைத்து, கட்டுக்கோப்பாக காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக மேற்கொள்வார்கள். அதாவது ஒருவர் உடற்பயிற்சி மேற்கொள்வார், இன்னொருவர் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார்.
ஆனால், எல்லோரும் பொதுவாக நினைவூட்டிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் வாழ்வியல் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதும், எடுத்துக் கொண்ட விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதும் தான்.
இதுகுறித்து, இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் முன்பாக முதலில் கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார் அவர்.
Read More : சப்பாத்தியில் இத்தனை வகைகளா..? உடல் எடையை குறைப்போருக்கு டிப்ஸ்
நிதி குப்தாவின் பதிவில், “உங்கள் உடலில் இடுப்பு, தொடைகள், கைகள் மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள கொழுப்புகளை முதலில் குறைக்க வேண்டும். உடல் முழுவதிலும் உள்ள செல்களில் கொழுப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். சிலருக்கு பிரச்சனைக்குரிய பகுதிகளில் அதிக கொழுப்பு செல்கள் இடம்பெற்றிருக்கும். நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைத்து கொண்டே வந்தால், உடல் சேமித்து வைத்திருக்கக் கூடிய கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
என்னென்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும்
முழு தானியங்கள், இயற்கையான உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இலகுவான புரதம், காய்கறிகள், பழங்கள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள். ஒவ்வொரு வாரமும் எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
உடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும், கலோரிகளை குறைக்க வேண்டும். நிறையூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் சோடியம் போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். முதலில் அரை பிளேட் சாலட், அடுத்த கால் பங்கு அளவு முழு தானியங்கள் மற்றும் கால் பங்கு அளவு புரதம் என்ற அளவில் சாப்பிடவும். காலை மற்றும் மாலை வேளைகளில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செல்லவும்.
கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் :
* வாரத்தில் 3 நாட்களுக்கு 50 நிமிடங்களுக்கு குறையாமல் கடினமான உடற்பயிற்சி மற்றும் 2 நாட்களுக்கு கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* 2 நாட்களுக்கு லேசான பயிற்சிகளை செய்யலாம். உதாரணத்திற்கு படி ஏறுவது, ஸ்கிப்பிங் செய்வது போன்ற பயிற்சிகள்.
* வீட்டில் சமைத்த உணவை சாப்பிட முக்கியத்துவம் கொடுக்கவும். வெளியிடங்களுக்கு சென்றால் சுத்தமான உணவுகளை சாப்பிடவும்.
எச்சரிக்கை :
உடல் எடையை குறைக்க துரிதமான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. மருந்து உட்கொள்தல், நடைமுறைக்கு ஒவ்வாத முயற்சிகளை செய்யக் கூடாது. இயல்பான வேகத்தில் உடல் எடையை குறைப்பதே நலன் தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Lifestyle, Weight loss