உலக சுகாதார நிறுவனமானது 127 நாடுகளில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் பற்றிய அறிக்கையை திரட்டியுள்ளது. குளோபல் ஆன்ட்டி மைக்ரோபைல் ரெசிஸ்டன்ஸ் அண்ட் யூஸ் சர்வையலன்ஸ் சிஸ்டம் (GLASS) என்று இந்த அறிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது சுருக்கமாக கிளாஸ் ரிப்போர்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் கிடைத்த தகவலின் படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 50% நோயாளிகளுக்கு கேல்ப்யேஎல்லா நிமோனியே மற்றும் அசினோடோ பாக்டர் எஸ் பி பி என்ற இரண்டு பாக்டீரியா தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்றானது ரத்தத்தில் அதிகம் பரவுவதாகவும் தெரியவந்துள்ளது. இவற்றில் கார்பாபெனம் குரூப் ஆஃப் ட்ரக்ஸ் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் 8% நோயாளிகளுக்கு சரியாக வேலை செய்யவில்லை. இதனால் தொற்றுகள் வேகமாக பரவி நோயாளி உயிரிழப்பது அதிகரிக்கிறது.
கார்பாபெனம் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் என்பவை அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் ட்ரக்ஸ் ஆகும். இன்றைய நவீன மருத்துவத்தில் இந்த ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தான் பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் சிகிச்சை அளிக்க நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த ஆன்டிபயோட்டிக் மருந்து மிகவும் சக்தி வாய்ந்ததும் புதியதுமான மருந்துகளை கொண்டுள்ளது. அதில் இமிபெனம், மேரோபெனம், ஏர்டாபெனம், டோரிபெனம் ஆகியவை அடங்கும். 60% நெய்சேரியா கொநோரோஹி தொற்றுக்கள் சரியான மருந்துகள் கொடுத்தும் சரி செய்ய இயலவில்லை. இவை STI எனப்படும் பாலுறவின் மூலமாக கடத்தப்பட்ட தொற்று நோய்கள் ஆகும்.
ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யவில்லை:
ஈ கோலி பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், 20% பேருக்கு ஆன்ட்டிபயாட்டிக்குகள் சரிவர வேலை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த ஈ-கோலி பாக்டீரியா என்பது மனிதரின் சிறுநீரகப் பாதையில் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களாகும். மேலும் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஆன்டிபயாட்டிக்குகளாலும் இந்த நோயை குணப்படுத்த முடிவது இல்லை.
Also Read : உடலில் நீர் கோர்த்துக்கொள்ள என்ன காரணம்..? குறைக்கும் வழிகள் என்ன..?
அந்த கிளாஸ் ரிப்போர்ட்டில் 2017 இருந்து 2022 வரை ஆன்டிபயாட்டிக்களில் எவ்வளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 சதவீதம் அளவு தொற்றுக்களின் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கிடைத்த தரவுகளை முழுமையாக ஆராய்ந்த பிறகு ஈ-கோலி மற்றும் எம் ஆர் எஸ் சி எனப்படும் இரண்டு பாக்டீரியாக்களும், வளர்ந்த நாடுகளில் பதினோரு சதவீதம் முதல் 6.8% வரை குணப்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளின் மருத்துவ சூழ்நிலை பற்றிய தகவல்கள் தற்போது வரை கிடைக்கவில்லை. எனினும் அந்த நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம் என்றே கருதப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆபத்துக்களில் இதுவும் ஒன்று:
ஆன்ட்டிபயாட்டிக்குகள் சரிவர வேலை செய்யாமல் போவது என்பது உலகின் முதல் 10 மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் ஆன்டி பயாட்டிக் மருந்துகள் சரியாக வேலை செய்யாததால் உயிரிழக்கின்றனர். நோயாளிகளிடம் தொற்று கண்டறியப்பட்ட உடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு அளிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் நோய் தொற்றை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இறப்பு விகிதம் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antibiotic, Viral infection, WHO