Home /News /lifestyle /

கர்ப்பமாவதை தடுக்கும் லேப்டாப், மொபைல்... வேலைக்கு செல்லும் தம்பதிகள் அவசியம் அறிய வேண்டியவை...

கர்ப்பமாவதை தடுக்கும் லேப்டாப், மொபைல்... வேலைக்கு செல்லும் தம்பதிகள் அவசியம் அறிய வேண்டியவை...

பெண்குயின் கார்னர் 41

பெண்குயின் கார்னர் 41

பெண்குயின் கார்னர் 41 : பொதுவாகவே எல்லா மின்னணு சாதனங்களும் நமக்கு ஏராளமான பக்கவிளைவுகளை உண்டாக்குகின்றன. அதில் சில நேரடியாகவும் பல மறைமுகமாகவும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ரஞ்சித்தும், ராதாவும், ஐடி துறையில் பணிபுரிபவர்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு மடிக்கணினி காரணமா?என்பது குறித்த ஆலோசனைக்காக வந்திருந்தனர்.

சென்ற வார தொடர்ச்சி:

மடி கணினியும் அதற்குரிய சரியான மேஜைகளில் சரியான உயரத்தில் (எர்கொனோமிக்) உபயோகித்தால் தேவையில்லாத சிரமம் ஏற்படாது. அவ்வாறல்லாது பலரும் ரஞ்சித் ராதா போல படுக்கையிலும் மடியிலும் சமையலறை மேடையிலும் வைத்து உபயோகிக்கும் போது தோள்பட்டை வலி ,கழுத்து வலி மற்றும் தலைவலி, என்று பல வலிகளும் வரிசை கட்டி நிற்கும்.

இது போன்ற மின்னணு சாதனங்களில் உண்டாகும் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் , முடித்தபின் நம் மூளை ஓய்வெடுக்க ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் வரை ஆகலாம். அதில் பார்த்த விஷயங்கள் நம் தலையில் சுற்றிக் கொண்டே இருக்கும். இதனால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கணினி, மொபைல் உபயோகங்களை முடித்துக் கொள்வது நல்லது.இதற்கெல்லாம் மேலாக இப்போது ஸ்மார்ட் பெட் ( smart bed)என்று படுக்கையிலேயே மொபைல் கணினி உபயோகப்படுத்துவதற்கு அலுவலக வேலை செய்வதற்குரிய வசதிகளோடும் வந்து விட்டன.

பிரபல மனநல நிபுணர்கள் பலரும் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் உங்களுடைய படுக்கையறைக்குள் டிவியையும் கைபேசியையும் நுழைய விடாதீர்கள். உங்கள் அனியோன்யம் வெளியே சென்று விடும் என்பதுதான்.

கணவன்,மனைவி ஐடி துறையில் வேலை... லேப்டாப் பயன்படுத்துவது கர்ப்பமாகும் வாய்ப்பை தடுக்குமா?

முதலில் ராதா ரஞ்சித்திற்கு தேவையானது அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றம். அதில் முதலாவதாக அவர்களுடைய அலுவலக வேலை செய்வதற்கு என்று வீட்டில் தனியாக ஒரு இடம். அந்த இடத்தில் அவர்களுடைய அலுவலகம் போலவே மேஜை நாற்காலி வசதிகள் அலுவலக வேலையை அந்த இடத்தில் வைத்து மட்டுமே செய்ய வேண்டும் என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டனர் . அதுபோல இரவு 10 மணி க்கு மேல் எந்தவிதமான சாதனங்களையும் உபயோகிப்பது இல்லை என்று இருவரும் முடிவு செய்துவிட்டனர். அதுபோல வேலை நேரத்தையும் வரையறுத்துக் கொண்டனர். எட்டு மணி நேரத்திற்குள் அலுவலக வேலையை முடிக்க வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு ஒரு மாதம் ஓடியது. அடுத்த முறை வந்திருந்த போது இருவரும் உற்சாகமாக காணப்பட்டனர். நிறைய மாறுதல்கள் தெரிந்தன.

இருவருக்கும் அடிப்படை பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ஒன்றும் பெரிய பிரச்சனைகள் இல்லை. ராதாவுடைய கர்ப்பப்பையும் முட்டை பைகளும் இயல்பாகவே இருந்தன. ரஞ்சித்திற்கு செய்யப்பட்ட விந்தணு பரிசோதனைகளும் இயல்பான முடிவுகளை காண்பித்தன.

40 வயதை கடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள IVF சிகிச்சைதான் தீர்வா..?

"மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை இருவரும் முயற்சி செய்யலாம் அதில் கர்ப்பம் தரிக்க வில்லை எனில் அடுத்த கட்ட பரிசோதனைகளும் சிகிச்சையும் ஆரம்பிக்கலாம் " என்று திட்டமிட்டோம்

ராதா ரஞ்சித்தும் "நாங்கள் எப்படி எங்களுடைய வாழ்க்கையில் சிறு விஷயங்களில் கவனம் இல்லாமல் இருந்தது பெரிய பிரச்சினைகளில் கொண்டு விடலாம் என்பதை புரிந்து கொண்டோம்" என்று கூறினர்.பொதுவாகவே எல்லா மின்னணு சாதனங்களும் நமக்கு ஏராளமான பக்கவிளைவுகளை உண்டாக்குகின்றன. அதில் சில நேரடியாகவும் பல மறைமுகமாகவும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைக்காக திட்டமிடுபவர்கள் "கணினி மற்றும் மொபைல் உபயோகத்தை கட்டுக்குள் வைத்திருப்பது கட்டாயம்."

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Infertility, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி