Home /News /lifestyle /

லேப்டாப் பயன்படுத்தினால் ஆண்மைக் குறைபாடு பாதிப்பு உண்டாகுமா..?

லேப்டாப் பயன்படுத்தினால் ஆண்மைக் குறைபாடு பாதிப்பு உண்டாகுமா..?

மாதிரி படம்

மாதிரி படம்

Wifiயிலிருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் நேரடியாக ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆண்கள் லேப்டாப் பயன்படுத்துவதால் அவர்களின் ஆண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்த பாதிப்பு வெப்பநிலை சமநிலையின்மையால் ஏற்படுகிறது. அதாவது ஆண்களின் விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய விரைகளின் வெப்பநிலையானது 3-4 டிகிரி செல்சியத்திற்குக் குறைவாக இருக்கும். ஆனால் அதன் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்போது அது உருவாக்கும் விந்தணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விந்தணுக்கள் தன் செயல்திறனைக் குறைக்கிறது.

    இப்படியிருக்க நாம் பயன்படுத்தும் லேப்டாப் அதிக அளவிலான வெப்பத்தை உருவாக்குகிறது. குறிப்பாக அதை மடியில் வைத்து பயன்படுத்தினால் 10 - 15 நிமிடங்களிலேயே விரைகள் வெப்பமடைகின்றன. இதனால் தானாக விந்தணுக்களும் பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைவு பிரச்னை வருகிறது.

    சிலர் வெப்பம் அதிகமாகாமல் இருக்க கூலிங் பேட் பயன்படுத்துகின்றனர். அது பயன்படுத்துவதாலும் வெப்பநிலை அதிகரிக்கவே செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.



    தற்போது மடிமேல் வைத்தால்தான் விந்தணுக்கள் பாதிக்கும் என்றல்ல. அதிலிருந்து வெளியேறும் வெப்பம் அலுவலகமானாலும் , வீடானாலும் பாதிப்பை உண்டாக்கும். எனவே நல்ல காற்றோட்டமான பகுதியில், ஏசி குளுர்ச்சியில் பயன்படுத்தினால் வெப்பம் அதிகரிக்காது.

    லேப்டாப் மட்டுமல்லாது Wifi-யிலிருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் நேரடியாக ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமையலறை வெப்பம் கூட அவர்களின் விந்தணுக்களை பாதிக்கும் என கூறப்படுகிறது.

    எனவே லேப்டாப்பை அரை மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் கூட மடிமேல் வைக்காமல் மேசை மீது வைத்து பயன்படுத்துங்கள். அருகில் வைத்தோ, தலையணை, கட்டில்மேல் வைத்தோ லேப்டாப்பை பயன்படுத்தாதீர்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி