இந்தியாவில் குடிப்பழக்கத்தால் புதிதாக 62,100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: லான்செட் ஆய்வில் தகவல்

மாதிரிப் படம்

இந்தியாவில் குடிப் பழகத்தின் காரணமாக புதிதாக 62,100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று லான்செட் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 62,100 பேர் அல்லது உலகளவில் பதிவுசெய்யப்பட்ட மொத்த பாதிப்பில் ஐந்து சதவீதத்தினரின் இப்படியொரு சுகாதார நிலைக்கு காரணம் மதுப்பழக்கம் தான் என்று தி லான்செட் ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நாட்டில் ஆல்கஹால் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது.

    2020 ஆம் ஆண்டில் உலகளவில் புதிதாக புற்றுநோயால் பாதித்த 7,40,000 பேரில் நான்கு சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் மதுப்பழக்கமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆல்கஹால் தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளில் மொத்தம் ஆண்கள் 77 சதவீதம் (அதாவது 5,68,700 நோயாளிகள்), பெண்கள் ​​23 சதவீதம் (1,72,600 நோயாளிகள்) என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுக்குழாய், கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய்கள் அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன.

    முந்தைய வருடங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டில், வாய், குரல்வளை, குரல் பெட்டி (குரல்வளை), ஓசோஃபேஜியல், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் 6.3 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது. இந்த புற்றுநோய்கள் ஆல்கஹால் நுகர்வுக்கு நன்கு நிறுவப்பட்ட காரணங்களைக் கொண்டுள்ளன. அதாவது ஆல்கஹால் இந்த பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.

    இதுகுறித்து பிரான்சில் புற்றுநோயைப் பற்றிய ஆராய்ச்சி (ஐ.ஏ.ஆர்.சி) என்ற சர்வதேச நிறுவனத்தின் ஹாரியட் ரம்கே கூறியதாவது, "பல ஐரோப்பிய நாடுகளில் ஒருவரின் மது அருந்தும் பழக்கம் குறைந்து வருகின்ற போதிலும், ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா, ஆப்பிரிக்காவின் துணை சஹாரா உள்ளிட்ட பகுதிகளில், ஆல்கஹால் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கூடுதலாக, கோவிட் -19 தொற்றுநோய் சில நாடுகளில் குடிப்பழக்கத்தை அதிகரித்துள்ளது என்பதற்கான சான்றுகளும் உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, ஆல்கஹால் மற்றும் புற்றுநோய்களுக்கு இடையிலான தொடர்பு குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், மோசமான பாதிப்புக்குள்ளான பிராந்தியங்களில் மது நுகர்வுகளை குறைக்க அரசாங்கத்தின் தலையீடுகள் அதிகரிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புற்றுநோயின் விகிதங்களை ஒப்பிடும் போது, குடிப்பழக்கத்தால் வரும் புற்றுநோய் பாதிப்புகள் குறைந்த விகித்தை கொண்டிருக்கிறது. எனவே பொது குடி நடத்தைக்கான சிறிய மாற்றங்களை இப்போதே செய்யாவிட்டால் எதிர்கால புற்றுநோய் விகிதங்கள் சாதகமாக அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆல்கஹால் சாப்பிடும்போது, உடலில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அதிகரிக்கிறது. அவை டி.என்.ஏ சேதத்தை ஏற்படுத்துவதாகவும், ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக புகையிலை போன்ற பிற பொருட்களின் நுகர்வு பழக்கம் இருந்தால், புற்றுநோயை ஏற்படுத்தும் விளைவுகளை ஆல்கஹால் மோசமாக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    புதிய ஆய்விற்காக, ஆராய்ச்சியாளர்கள் 2010 ஆம் ஆண்டில் ஒரு நாட்டில் ஒரு நபர் உட்கொள்ளும் ஆல்கஹால் அளவை நிறுவினர். இது புற்றுநோய் வளர்ச்சியை ஏற்படுத்த ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் காலத்தை கண்டறிய அனுமதித்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஆல்கஹால் தொடர்பான புற்றுநோய்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக 2020 ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் பாதிப்பிகளுடன் அவற்றை இணைத்தனர்.

    அதில் இரண்டு மதுபானங்களை உட்கொள்வது- மிதமான குடிப்பழக்கம், ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஆறு மதுபானங்கள் வரை குடிப்பது - ஆபத்தான குடிப்பழக்கம் மற்றும் ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்ட மது பானங்களை குடிப்பது- அதிகப்படியான குடிப்பழக்கம் என வகைப்படுத்தப்பட்டது. அதன் மூலம் உலகளவில், 2020 ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் (741,300) 4 சதவீதம் மது அருந்துவதோடு தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    மேலும், உலகளவில் ஆபத்தான குடிப்பழக்கம் மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம் முறையே 39 சதவீதம் (291,800 நோயாளிகள்) மற்றும் 47 சதவீதம் (346,400 நோயாளிகள்) என புற்றுநோய்களின் அதிக விகிதத்திற்கு வழிவகுத்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மிதமான குடிப்பழக்கமும் இன்னும் சிக்கலானது என்று கண்டறியப்பட்டது. இந்த வகை குடிப்பழக்கம் உள்ளவர்கள் மொத்த ஆல்கஹால் பாதிப்புகளில் 14 சதவீதம் (103,100 பேர்) இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல கிழக்கு ஆசியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா பிராந்தியங்களில் அதிக அளவு மதுப்பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புகள் 6 சதவீதமாக உள்ளன. அதுவே,வட ஆபிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் மிகக் குறைந்த விகிதத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றன. நாடுகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின்படி, மதுவுடன் தொடர்புடைய புற்றுநோய் பாதிப்பும் விகிதம் மங்கோலியாவில் மிக அதிகமாக (10 சதவீதம்) மற்றும் குவைத்தில் மிகக் குறைவாக (0 சதவீதம்) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதுவே இந்தியாவில் 5 சதவீதம் (62,100 நோயாளிகள்) புற்றுநோய் பாதிப்புகள் ஆல்கஹால் சம்பந்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனா 6 சதவீதம் (282,300 நோயாளிகள்), ஜெர்மனி 4 சதவீதம் (21,500 நோயாளிகள்), பிரான்சில் 5 சதவீதம் (20,000 நோயாளிகள்) இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 4 சதவீத புற்றுநோய் பாதிப்புகள் (16,800), அமெரிக்கா 3 சதவீதம் (52,700), பிரேசில் 4 சதவீதம் (20,500 நோயாளிகள்) மதுப்பழக்கத்துடன் தொடர்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரம்கே கூறியதாவது, "கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொது மக்களிடையே மது அருந்துதல் மற்றும் புற்றுநோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து நாம் அவசரமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார். ஆல்கஹால் கிடைப்பதை குறைதல், ஆல்கஹால் தயாரிப்புகளை சுகாதார எச்சரிக்கையுடன் பெயரிடுவது போன்ற பொது சுகாதார உத்திகளை அதிகரிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சந்தைப்படுத்தல் தடைகளை அறிவிப்பதன் மூலம் ஆல்கஹால் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு வீதங்களைக் குறைக்கலாம். அதிகரித்த கலால் வரி மற்றும் குறைந்தபட்ச யூனிட் விலை உள்ளிட்டவை ஐரோப்பாவில் ஆல்கஹால் உட்கொள்ளல் குறைவதற்கு வழிவகுத்தது. அதே வரி மற்றும் விலைக் கொள்கைகள் மற்ற உலக பிராந்தியங்களிலும் செயல்படுத்தலாம். இதனால் பாதிப்பு குறையும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
    Published by:Karthick S
    First published: