ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களே உஷார்.. நீங்கள் சாப்பிடும் இந்த உணவால் குழந்தைகளுக்கு ஆபத்து! 

பெண்களே உஷார்.. நீங்கள் சாப்பிடும் இந்த உணவால் குழந்தைகளுக்கு ஆபத்து! 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கருவுற்ற தாய்மார்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உருவம், முகச்சாயல், குணம், பழக்க வழக்கம் ஆகியவை பெரும்பாலும் தாய் மற்றும் மகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், “தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை” என்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், கருவுற்ற தாய்மார்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நடந்த ஆய்வு:

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்கப்படும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ் வகைகள், பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர் பான வகைகள், சர்க்கரை நிறைந்த காலை உணவு வகைகள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.

2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) 39 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய்கள் மற்றும் ஆரம்பகால மரணம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தால் ஒழுக்கம் குறைந்துவிடுமா..? தெரிந்துகொள்ளுங்கள்

இதனிடையே, உடல் பருமனுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு குறித்த முடிவுகள் தி பிஎம்ஜே இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த செவிலியர்கள் சுகாதார ஆய்வு II (NHS II) மற்றும் குரோவிங் அப் டுடே ஸ்டேட் (GUTS I மற்றும் II) ஆகியவை 14,553 தாய்மார்களுக்குப் பிறந்த 7 முதல் 17 வயதுள்ள 19,958 குழந்தைகளின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் உட்கொள்ளும் உணவு மற்றும் பிற காரணிகள் இரண்டு வருட கால அளவில் ஆய்வு செய்யப்பட்டன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது குழந்தைக்கு உடல் பருமனை ஏற்படுத்தக்கூடும் எனக்கூறப்படுகிறது.

ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்:

ஒட்டுமொத்த ஆராய்ச்சியின் ஒருபகுதியாக, 2,925 குழந்தைகளின், 2,790 தாய்மார்களிடம் இருந்து மட்டும் அவர்கள் கருத்தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிருந்து குழந்தை பிறக்கும் வரை என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வது குழந்தையின் உடல் பருமன் அபாயம் அதிகரிக்க கணிசமான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் தாய்மார்களுக்கும், குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்ட தாய்மார்களுக்கும் இடையே குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடிப்படையிலான ஆய்வில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலமும், இயற்கையான உணவுகளை உட்கொள்வதும் தாய்மார்களையும் உடல் பருமனில் இருந்து காக்க உதவும் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

கர்ப்ப காலத்தில் பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் வரை உள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் குழந்தைகள் வளரும் போது தாய்மார்கள் சாப்பிடுவதைப் பார்த்து தானும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைகளை எடுத்துக்கொள்ளும் ஆளாவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜாவின் இதுகுறித்து கூறுகையில், “பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உள்ளதோடு, அதில் எந்தவிதமான ஊட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் கிடையாது. இப்படிப்பட்ட உணவை கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் அதிக அளவில் உட்கொள்வது அவர்களது உடல் எடையை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் குழந்தைக்கும் உடல் பருமன் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Baby Care, Health tips, Healthy Food