நாப்கின் விளம்பரங்களில் அந்த நிறுவனத்தின் நாப்கினை பயன்படுத்தினால் ஓடலாம், குதிக்கலாம் விரும்பியதை செய்யலாம் என காட்சிகளை வைத்திருப்பார்கள். ஆனால் எதார்தத்தில் அது சாத்தியமா..?
உண்மையைச் சொல்லப்போனால் மாதவிடாயின் மூன்று நாட்கள் எதுவும் செய்யாமல் ஓய்வு எடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் அந்த சமயத்தில் பெண்களின் உடலிலிருந்து 35 மிலி - 40 மிலி அளவுக்கு ரத்தம் வெளியேறுகிறது. இந்நிலையில் கடுமையான உடல் உழைப்பு இரத்தப்போக்கை அதிகரித்து உடல் பாதிப்பை உண்டாக்கும்.
அதோடு பெண்களுக்கும் அந்த சமயத்தில் எந்த வேலைகளிலும் ஈடுபாடு இருக்காது. சோர்வுடனே காணப்படுவார்கள். அதில் ஓடுதல், குதித்தல் என்பதெல்லாம் சாத்தியமா என்பதே சந்தேகம்தான். அப்படி ஒருவேளை உங்களால் சாதாரண நாட்களைப் போல் இயங்க முடியும் என்றாலும் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. இது உதிரப்போக்கை அதிகரிக்கலாம். வலியை உண்டாக்கலாம்.
கடுமையான வேலை : வீட்டு வேலை, அலுவலக வேலை எதுவாக இருந்தாலும் அந்த 3 நாட்கள் மட்டும் உடலை அலுத்துக்கொள்ளாமல் வேலை செய்யுங்கள். முடிந்தவரை ஓய்வில் இருப்பது நல்லது.
உடலுறவு : இந்த 3 நாட்கள் கட்டாயம் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கு கடுமையான வலி மற்றும் உதிரப்போக்கை உண்டாக்கும்.
சோப்பு பயன்படுத்தாதீர்கள் : மாதவிடாய் நாட்கள் துர்நாற்றத்தை போக்க சோப்பு பயன்படுத்துவது தவறு. இது வெஜினாவை வறட்சியாக்கும். எனவே சாதாரண தண்ணீர் கொண்டு கழுவுவதே போதுமானது.
மாத்திரைகளை தவிருங்கள் : மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்று வலி, தலை வலி என்று இருந்தால் அதை போக்க மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிருங்கள். இந்த பழக்கம் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.