தூக்கத்தை சமரசம் செய்தால் இதய நோய் வருமா..?

குறைந்த நேரம் தூங்குவது அல்லது தூங்குவதற்கே சிரமப்படுவது என இருப்போருக்கு பக்கவாத, மரடைப்பு, இன்னும் இதர இதய நோய்களை சந்திக்க நேரிடும் .

தூக்கத்தை சமரசம் செய்தால் இதய நோய் வருமா..?
தூக்கமின்மை
  • News18
  • Last Updated: November 8, 2019, 11:06 PM IST
  • Share this:
குறைந்த நேரம் தூங்குவது அல்லது தூங்குவதற்கே சிரமப்படுவது என இருப்போருக்கு பக்கவாத, மாரடைப்பு, இன்னும் இதர இதய நோய்களை சந்திக்க நேரிடும் என நியூராலஜி இதழில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 4,87,200 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் தூங்குவதில் சிரமம், வாரத்தில் மூன்று நாட்கள் தூங்க அவதிப்படுவது இப்படி ஏதாவது உணர்ததுண்டா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில்11 சதவீதம் தூங்க சிரமப்படுவதாகவும், 10 சதவீதம் பேர் லேட்டாக தூங்கினாலும் சீக்கிரம் எழுந்துவிடுவதாகவும், 2 சதவீதம் சரியான தூக்கம் இல்லாததால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இப்படி அவர்கள் தூக்கமின்மை பிரச்னையால் 10 வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டதில் 1,30032 பேருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரியாது என்றும் அதன் தீவிரம் அதிகரிக்கும்போதே வெளிப்படும் என்று தெரிவித்துள்ளது.


எனவே தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் அதற்குரிய சிகிச்சைகள், தெரப்பிகளை எடுத்துக்கொள்வதும், மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவதும் அவசியம் என்று அறிவுறுத்துகிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்