ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு சரியாக தூங்கவில்லை எனில் பக்கவாதம் , மாரடைப்பு வரும் அபாயம் - மருத்துவர் எச்சரிக்கை..!

இரவு சரியாக தூங்கவில்லை எனில் பக்கவாதம் , மாரடைப்பு வரும் அபாயம் - மருத்துவர் எச்சரிக்கை..!

தூக்கமின்மை

தூக்கமின்மை

மக்களின் தூக்கமின்மை பிரச்சனை கடந்த 2 இரண்டு ஆண்டுகளில்தான் அதிகரித்திருக்கிறது. இதற்கு கொரோனா தொற்று பரவல்தான் காரணம். மக்கள் இந்த நோயைக் கண்டு அதிக அச்சமும் , கவலையும் கொள்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தூக்கமின்மை பிரச்சனை எப்போதுமே பெரிய பிரச்சனையாக பார்ப்பதில்லை. ஆனால் அதுதான் உங்களின் பல வகையான தொந்தரவுகளுக்கு மூலக் காரணம் என்பது தெரியுமா..? சரியான தூக்கமின்மை உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான பல விஷயங்களை செய்துகொண்டிருக்கின்றன. அதேபோல் தூக்கமின்மையைப் போன்று அதிக தூக்கமும் ஆரோக்கியத்திற்கு ஆபத்துதான். எவர் ஒருவர் 7-8 மணி நேரத்திற்கு மேல் தூங்குகிறார்களோ அவர்களும் மருத்துவ தேவையை பெற வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தூக்கம் பற்றி மருத்துவர் கன்வாரின் குறிப்பு பலருக்கும் பயத்தை கிளப்பியுள்ளது.

மருத்துவர் கன்வார் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் போதுமான தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம் இரண்டுமே உடலுக்கு ஆபத்து என்கிறார். அதாவது இவை இரண்டுமே பதட்டம், நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

குறிப்பாக சரியான தூக்கமின்மையால் இரவு அவஸ்தைப்படுகிறீர்கள் எனில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்கிறார். எனவே இந்த பிரச்சனையை சரியான நேரத்தில் அணுகாவிட்டால் தீவிர பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்கிறார்.

மேலும் அவர் “ மக்களின் தூக்கமின்மை பிரச்சனை கடந்த 2 இரண்டு ஆண்டுகளில்தான் அதிகரித்திருக்கிறது. இதற்கு கொரோனா தொற்று பரவல்தான் காரணம். மக்கள் இந்த நோயைக் கண்டு அதிக அச்சமும் , கவலையும் கொள்கின்றனர். இதனால் அவர்களின் இரவு தூக்கம் நிம்மதியாக இல்லை. அவர்கள் மன அழுத்தத்தால் ஒவ்வொரு இரவையும் கழித்து வருகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசரத் தேவையும் இருக்கிறது “ என்கிறார்.

பொதுவாக, NREM (Non-Rapid Eye Movement) இன் நான்கு நிலைகளில் தூக்கம் இறுதி நிலையாகும். டாக்டர் கன்வாரின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு 7 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கம் தேவை. இந்த நேரத்தைத் தாண்டி சிலர் தூங்குகிறார்கள் எனில் இதற்கு "அதிக தூக்கம்" என்று பொருள். ஏனெனில் ஒரு நபர் நன்றாக தூங்கிய பிறகும் தூக்கத்தை உணர்கிறார் எனில் அது அளவுக்கு அதிகமான தூக்க அறிகுறி என்கிறார். இதுவும் உடலுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார் டாக்டர் கன்வார். உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பொதுவாக இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இரவில் நல்ல தூக்கத்தை பெற படுக்கைக்கு செல்லும் முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

பின்வரும் நோய்கள் அதிக தூக்கத்தைக் குறிக்கும்:

தூக்கத்தில் மூச்சுத்திணறல் : இந்த பிரச்சனையில் மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும். மூச்சு விடவே சிரமமாக இருக்கும். போதுமான தூக்கத்திற்குப் பிறகும் நீங்கள் சோர்வாக உணர்ந்தால் இந்தப் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம்.

நார்கோலெப்ஸி : இந்த நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டவர்கள் பகல்நேரத்தில் தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.

இடியோபாடிக் ஹைப்பர்சோம்னியா (Idiopathic Hypersomnia) : இந்த நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகல்நேர செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மிகவும் சோர்வாக உணர்கிறார்கள்.

டாக்டர் கன்வாரின் கூற்றுப்படி, தூக்கமின்மை அல்லது அதிக நேர தூக்கம் இவை இரண்டுமே அதிக ஆபத்தான செயல்பாடுகளாகும். எனவே உடனே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் உரிய சிகிச்சை பெறுவது பேராபத்திலிருந்து தப்பிக்க உதவும்.

First published:

Tags: Sleep deprivation