ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

kushboo Sundar: ஆரோக்கியமாக வாழ நடிகை குஷ்பு பகிர்ந்த கொண்ட ரகசியம்..

kushboo Sundar: ஆரோக்கியமாக வாழ நடிகை குஷ்பு பகிர்ந்த கொண்ட ரகசியம்..

குஷ்பு

குஷ்பு

kushboo Sundar Weight Loss Tips : உடல் எடையை குறைக்க நான் என்ன செய்தேன் ? ரகசியத்தை பகிர்ந்த குஷ்பு..

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை குஷ்பு சுந்தர். இவர், விதவிதமாக புடவைகள் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதோடு விடுவதில்லை. அன்றாட வாழ்க்கைகான சில டிப்ஸ் மற்றும் தனது அன்புக்குரியவர்களுடன் செலவழித்த பொன்னான தருணங்களையும் இவர் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் குஷ்பு தனது அற்புதமான உடல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.

  கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் குஷ்பு தனது உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டார். அதன்மூலம் தனது உடல் எடையில் 15 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார். குஷ்புவின் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படங்கள் தான் பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. தனது உடற்பயிற்சி இலக்குகளை அடைய தினமும் யோகா, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றை செய்வதாக நடிகை குஷ்பு வெளிப்படுத்தியிருந்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Kushboo Sundar (@khushsundar)  இந்த நிலையில், ​​நடிகை குஷ்பு வெளியிட்ட சமீபத்திய பதிவு மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சிக்கான தனது வாழ்க்கை மந்திரத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ மழை, ஆலங்கட்டி மழை என எதுவாக இருந்தாலும்..உங்கள் வொர்க்அவுட்டைத் தவிர்க்க அல்லது ஒத்திவைப்பதற்கான காரணங்களைக் தேடாதீர்கள்..ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.. நன்றாகச் சாப்பிடுங்கள் (ஆரோக்கியமான உணவுகள்), உங்கள் வேகத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள் (உங்கள் வரம்புக்கு அதிகமாகச் செய்யாதீர்கள் அல்லது மீறாதீர்கள்), வாழ்க்கையை அனுபவிக்கவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

  also read : அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..
   
   

   

   


  View this post on Instagram


   

   

   

   

  A post shared by Kushboo Sundar (@khushsundar)  இதனை தொடர்ந்து Sohfit இன் நிறுவனர் சொஹ்ராப் குஷ்ருஷாஹி என்பவர் தெரிவித்தாவது, "ஒருமுறை செய்யும் ஒர்க்அவுட் செஷன் உங்கள் உடலை வலுப்படுத்தவோ அல்லது எடையை குறைக்கவோ செய்யாது. நீண்ட காலத்திற்கு நிலையான ஒர்க்அவுட், நீங்கள் விரும்பும் முடிவுகளை உங்களுக்கு பெற்றுத்தரும். மேலும், நீங்கள் செய்யும் ஒர்க்அவுட் உங்கள் உடலுக்கு நன்றாக இருந்தால் மட்டுமே நீங்கள் சீராக இருக்க முடியும். சில சமயங்களில், வெறும் அசைவு மற்றும் இயக்கத்தை செய்வது கூட போதுமானதாக இருக்கும்.

  also read : காஃபி வித் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
   
   

   

   


  View this post on Instagram


   

   

   

   

  A post shared by Kushboo Sundar (@khushsundar)  நிச்சயமாக, நீங்கள் ஒரு வாரத்தில் ஒரு அமர்வு அல்லது இரண்டு அமர்வுகள் கடுமையான ஒர்க்அவுட் செய்யலாம். ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் வாரத்தில் ஏழு நாட்கள், வருடத்தில் 365 நாட்கள் அதை செய்ய முடியாது. ஏனெனில் உங்கள் உடலுக்கும் ஓய்வெடுக்கும் நேரம் என்பது தேவை” என்று கூறினார். அதேபோல, தினமும் நிறைய புரோட்டீன் ஷேக்குகளை உட்கொள்வதும் ஃபிட்னஸின் தீர்வாகாது; இயற்கை உணவுகளிலிருந்து உங்கள் புரதத்தைப் பெற முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  “உங்கள் வாழ்க்கை முறையை எவ்வளவு எளிமையாக வைத்துக் கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு நீங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அதேபோல இறுதி முடிவு நம் கைகளில் இல்லை, நாம் கடைபிடிக்கும் செயல்முறையில் தான் உள்ளது. மேலும், நமது முழு ஆற்றலையும் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால், நாம் எப்படி இருக்க விரும்புகிறோமோ அதை அடையாளம்” என்று குஷ்ருஷாஹி தெரிவித்துள்ளார்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Health tips, Kushbu