Home /News /lifestyle /

டிரெட்மில்லில் ஓடும் போது இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே நிறுத்துவிடுங்கள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்

டிரெட்மில்லில் ஓடும் போது இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே நிறுத்துவிடுங்கள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரியான முறையில் இதய பரிசோதனை செய்து கொண்டு அதன்பின்னர் டிரெட்மில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல இதய நோய்கள் அறிகுறியற்றவை. இந்த சூழலில் ஒருவர் டிரெட்மில் பயன்படுத்துவது கடும் மாரடைப்பை தூண்டும் திடீர் கார்டியாக் அரெஸ்ட்டிற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீபத்தில் பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் டிரெட்மில் பயன்படுத்தி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் சரிந்து விழுந்தார். உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தற்போது கோமாவில் இருப்பதாகவும் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பொதுவாக டிரெட்மில் பயன்படுத்தும் போது வியர்வை மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வு. ஆனால் அது மாரடைப்புக்கான தூண்டுதலாக இருக்க முடியுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. பெரும்பாலான டிரெட்மில்கள் இதய துடிப்பைக் கண்காணிக்க இன்-பில்ட் சென்சார்களுடன் வந்தாலும், ஒருவருக்கு ஏற்கனவே இதயம் சார்ந்த பாதிப்புகள் இருந்தால் டிரெட்மில்லை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ட்ரெட்மில்லில் ஓடுவது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?

பிரபல மருத்துவரான ரிஷி குப்தா இதற்கு பதில் அளிக்கையில், ட்ரெட்மில்லில் ஓடுவது என்பது ஏற்கனவே இதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை தூண்டும், குறிப்பாக அவர்களுக்கு தெரியாத அறிகுறியற்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு என்றார். அதே போல 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் கொண்டிருந்தால் டிரெட்மில்லை பயன்படுத்தும் முன் முறையான இதய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவர்கள் டிரெட்மில்லில் இருக்கும் போது ஏற்படும் அசாதாரண மூச்சுத் திணறல் அல்லது மார்பு பகுதியில் கனமாக இருப்பது போல உணர்வது உள்ளிட்டவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் ரிஷி



டிரெட்மில் பயன்படுத்தும் போது ஒருவர் மேற்காணும் அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக ஓடுவதை நிறுத்தி விட்டு இதய நிபுணரிடம் செல்ல வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரியான முறையில் இதய பரிசோதனை செய்து கொண்டு அதன்பின்னர் டிரெட்மில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல இதய நோய்கள் அறிகுறியற்றவை. இந்த சூழலில் ஒருவர் டிரெட்மில் பயன்படுத்துவது கடும் மாரடைப்பை தூண்டும் திடீர் கார்டியாக் அரெஸ்ட்டிற்கு வழிவகுக்கும். டிரெட்மில்லை பயன்படுத்தும் போது இதயத் துடிப்பு அதிகரிப்பது இயல்பானது, ஆனால் இது பொதுவாக 140க்கும் குறைவாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்...

மற்றொரு பிரபல மருத்துவரான மணீஷ் பன்சால் கூறுகையில், அதிக உடற்பயிற்சி சில நேரங்களில் ஹார்ட் அட்டாக்கை தூண்டலாம். ஆனால் இது ஒரு அரிதானது. கடும் உடற்பயிற்சிகளை செய்ய திட்டமிடுபவர்கள் உரிய பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பிளாக்கேஜஸ் இருக்கலாம், cholesterol plague அதீத உடற்பயிற்சியின் போது வெடித்து ஹார்ட் அட்டாக்கிற்கு வழிவகுக்கும். பழக்கமில்லாதவர்களுக்கு, அதிக உடற்பயிற்சி சிக்கலை ஏற்படுத்தும். அதிகரித்த இதயத் துடிப்பு ஆபத்து காரணி அல்ல. plague வெடிப்பு ஏற்பட்டால் மட்டுமே ஏதாவது நடக்கும் என்றார்.

கடுமையான உடற்பயிற்சி செய்து பழக்கமில்லாத ஒருவருக்கு அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான தூண்டுதலாக இருக்கலாம் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வயது மற்றும் உங்கள் உடலின் லிமிட்ஸ்களை அறிந்து அதற்கேற்ப கடினமான மற்றும் பழக்கமில்லாத எதையும் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். எந்தவொரு பழக்கமில்லாத மிதமான மற்றும் கடுமையான உடற்பயிற்சியும் கூட ஹார்ட் அட்டாக்கிற்கு தூண்டுதலாக இருக்கலாம் என்பதே பல நிபுணர்களின் ஒருமித்த கருத்து.



கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்..

1. வயது (குறிப்பாக 40 வயதுக்கு மேல்)
2. குடும்ப உறுப்பினர்களின் இதய நோய் வரலாறு
3. புகைப்பழக்கம் மற்றும் நீரிழிவு
4. ஏற்கனவே இருக்கும் ரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சனைகள்
5. உடல் பருமன்

டிரெட்மில் பயன்படுத்தும் போது செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை :

டிரெட்மில் பயன்படுத்தும் போது படிப்படியாக தொடங்குங்கள், முதல் ஐந்து நிமிடங்களுக்கு நடக்கவும் அல்லது மெதுவாக ஓடவும். புதிதாக பயன்படுத்துபவர்கள் படிப்படியாக வேகம் மற்றும் கால அளவை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில் பயன்படுத்தும் போது இதயத் துடிப்புக்கு கவனம் செலுத்துவதும் மிகவும் அவசியம். இதய துடிப்பை உங்கள் அதிகபட்ச இதயத் துடிப்பில் 70% க்கும் குறைவாக வைத்திருப்பதை இலக்காக கொள்ள வேண்டும். ஒரு நடுத்தர வயது நபருக்கு, இது தோராயமாக 150/min கீழ் இருக்க வேண்டும். சிலருக்கு நிறைய வியர்க்கும், சிலருக்கு அதிகம் வியர்க்காது. ஆனால் நெஞ்சு கனப்பது, தலைசுற்றல் அல்லது தாடை வலி ஆகியவற்றுடன் வியர்வை வெளியேறுவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதிகம் வியர்ப்பவர்கள் போதுமான அளவு ஹைட்ரேட்டாக இருப்பது மிக முக்கியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Treadmill, Workout

அடுத்த செய்தி