Home /News /lifestyle /

பெண்களை அதிகமாக தாக்கும் சிறுநீரக நோய் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்..!

பெண்களை அதிகமாக தாக்கும் சிறுநீரக நோய் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்..!

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய் வந்தால், அது பல ஆண்டுகளாகத் தெரியாது. எனவே அதை 'silent killer' என்றும் அழைக்கின்றனர். ஏனெனில் சிறுநீரகத் தொற்று இருந்தாலும் அதன் அறிகுறிகள் விரைவாகத் தெரியாது.

உலகம் முழுவதும் சிறுநீரக நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றன. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் இறக்கின்றனர். WHO இன் கூற்றுப்படி, சிறுநீரக நோய் 30-35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பொதுவானது.

பெண்கள் அல்லது ஆண்கள், சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகள் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை முக்கியமான காரணிகளாகும். சிறுநீரக நோய் வந்தால், அது பல ஆண்டுகளாகத் தெரியாது. எனவே அதை 'silent killer' என்றும் அழைக்கின்றனர். ஏனெனில் சிறுநீரகத் தொற்று இருந்தாலும் அதன் அறிகுறிகள் விரைவாகத் தெரியாது. ஒருவேளை சிறுநீரக நோய் அறிகுறிஅக்ள் கண்டறியப்பட்டால், அது மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று அர்த்தம்.

சிறுநீரக நோய் காரணங்கள் :

சிறுநீரக நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது குறைந்த தண்ணீர் குடிப்பது, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காதது, அதிக வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது, உடல் பருமன், நீரிழிவு நோய், நீண்ட நேரம் சிறுநீரை வைத்திருப்பது, அதிக உப்பு உட்கொள்வது, உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான மது அருந்துதல் போன்றவையாகும்.



பெண்களில் காணப்படும் சிறுநீரக நோயின் அறிகுறிகள் :

சைமன்ஸ் ஹெல்த் இன்னர்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சிறுநீரக செயல்பாடு மெல்ல மெல்ல குறையத் தொடங்கினால் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதன் ஆரம்பகால அறிகுறிகளை உடலால் பொறுத்துக்கொள்ள முடியும் என்பதால், சி.கே.டி (Chronic kidney disease) உள்ள பெரும்பாலானவர்களுக்கு அதன் தீவிரத் தன்மையை உணர முடியாது. நோய் முற்றிய நிலையை அடையும் வரை CKDயின் பாதிப்பை கண்டறிய இயலாது.

பெண்களில் சிறுநீரக நோயின் சில அறிகுறிகள் பின்வருமாறு:

  • பசியிழப்பு

  • நிலையான சோர்வு, பலவீனமான உணர்வு,

  • குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வு,

  • தசை வலிகள், பிடிப்புகள், கூச்ச உணர்வு,

  • இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

  • எடை இழப்பு,

  • வீங்கிய கணுக்கால் அல்லது பாதங்கள்,

  • சுவாசிப்பதில் சிரமம் போன்ற உணர்வு,

  • சிறுநீரில் இரத்தம்,

  • தூக்கமின்மை,

  • தோல் அரிப்பு, வறட்சி,

  • கவனம் இல்லாமை,

  • கண்களைச் சுற்றி வீக்கம்.




சிறுநீரக நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் :

* புகைபிடித்தல், மது அருந்துவதைக் குறைக்கவும்.

* ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

* உடல் பருமனை குறைக்கவும்.

இரவு தூங்கும் முன் இப்படி கால் மசாஜ் செய்தால் நல்ல தூக்கம் வருமாம் - நிபுணரின் பரிந்துரை..!

* உணவில் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

* சிறுநீர் பாதை நோய்த்தொற்றைத் தவிர்க்கவும்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

* சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டாம்.



சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள் :

* சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* எந்தவொரு உடல் பிரச்சனையையும், வலியையும் போக்க வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

உடல் எடை குறைப்போர் கவனத்திற்கு... தினசரி சமையலில் எண்ணெய் பயன்பாடு இவ்வளவுதான் இருக்க வேண்டும்..!

* ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உங்கள் வாழ்க்கை முறையில் இணைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள், சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிட வேண்டாம்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டாம்.

* தினமும் 7-8 மணி நேரம் தூங்குங்கள்.

* சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kidney, Kidney Disease, Kidney Failure

அடுத்த செய்தி