உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கா..? இந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கா..? இந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும், சிறுநீரக பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

  • Share this:
தற்போது பெரும்பாலானோர் நீரழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்கள் முன்னுமின்றி இளம் வயத்தினர் கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை பார்க்க முடிகிறது. நீரிழிவு நோய் மிக மோசமான வாழ்க்கை முறை கோளாறுகளில் ஒன்றாகும்.

உண்மையில், இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும், சிறுநீரக பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். நீரிழிவு-டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரண்டு வகைகளாக உள்ளன. டைப் 1 அடிப்படையில் இயற்கையில் மரபணு வாரிசுகளின் அடிப்படையில் வருகிறது. ஆனால் டைப் 2 நீரிழிவு என்பது தவறான வாழ்க்கை முறையால் உருவாகிறது

நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் சில வாழ்க்கை முறைகள் :

1. துரித உணவை உண்ணுதல்

2. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

3. மருத்துவ பரிசோதனை செய்யாதது

4. எடை அதிகரிப்புநீங்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் :

1. தாகம்

நீங்கள் போதுமான தண்ணீர் அருந்தி வந்தாலும் தொடர்ந்து தாகமாக உணர்ந்தால் உங்கள் நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கிறதா? என நீங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது, ​​அதிகப்படியான குளுக்கோஸைக் கட்டுப்படுத்த உங்கள் சிறுநீரகங்கள் கூடுதலாக கடினமாக உழைக்க வேண்டும். இந்த குளுக்கோஸ் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. அதனுடன், சில அத்தியாவசிய தாதுக்களும் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நீரிழப்பு ஏற்படுவதால் தாகமாக உணர்வீர்கள்.

2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருந்தால் நீரழிவு இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. இது உண்மையில் நீரிழப்புக்கு ஒரு காரணம். மேலே கூறியது போல உங்கள் உடலில் இருந்து கூடுதல் குளுக்கோஸை வெளியேறுகிறது. எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்.

60 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதோ டிப்ஸ்!

3. பசி உணர்வு

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது, ​​ஆற்றலை வெளியிடத் தேவையான குளுக்கோஸை உடலால் ஜீரணிக்க முடியாது. இந்த அதிகப்படியான குளுக்கோஸ் ஜீரணிக்கப்படாதபோது, ​​உங்களிடம் போதுமான ஆற்றல் இருப்பதாக நீங்கள் உணர மாட்டீர்கள், இது பசிக்கு வழிவகுக்கும். எனவே அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வு இருக்கும், இதன் காரணமாக அதிக உணவு உட்கொள்வதால் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.4. வறண்ட சருமம்

உயர் இரத்த சர்க்கரை உங்கள் தோல் திசுக்களை வறட்சிக்கு ஆளாக்குகிறது. எனவே, நீங்கள் நமைச்சலை அனுபவிக்கலாம், மேலும் இதன் காரணமாக நீங்கள் தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். எனவே ஈரப்பதமாக வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

5. மூட்டுகளில் கூச்ச உணர்வு

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு மூளையில் இருந்து கைகால்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பும் நரம்புகள் சேதமடைகிறது. இதன் காரணமாக, நீங்கள் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வை அனுபவிப்பீர்கள்.

6. புண்கள் ஆற தாமதம்

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு உயிரணு மீளுருவாக்கம் செயல்முறையை குறைகிறது. எனவே, குணப்படுத்தும் செயல்முறையை குறைக்கிறது. இதனால் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டாலும் விரைவில் ஆறாது.

7. எடை இழத்தல்

இன்சுலின் போதுமான அளவு குளுக்கோஸை வெளியிடும் ஆற்றலை அனுமதிக்காது. எனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் எடை இழப்பை உணர்வார்கள். எனவே, உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published: