Home /News /lifestyle /

உடல் சோர்வு முதல் கண் பார்வை குறைபாடு வரை... உடலில் தாமிரம் குறைந்தால் உண்டாகும் அறிகுறிகள்..!

உடல் சோர்வு முதல் கண் பார்வை குறைபாடு வரை... உடலில் தாமிரம் குறைந்தால் உண்டாகும் அறிகுறிகள்..!

தாமிரம் குறைபாடு

தாமிரம் குறைபாடு

தாமிரம் ஒரு கனிமமாகும். இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் தாமிரம் இல்லாதது ஹைபோகுப்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது. தாமிரம் மூளை, இரத்தம் போன்றவற்றில் அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்துகளில் ஒன்றுதான் தாமிரம். பெரும்பாலும் உணவில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களை கண்டுக்கொள்வதில்லை. உடலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் இல்லாததால் பல பிரச்சனைகள் ஏற்படுவது போல், தாமிரம் குறைந்தாலும் பல நோய்கள் வரலாம்.

தாமிரம் உடலுக்கு குறைந்த அளவே தேவைப்படும். எனவே தாமிரம் நிறைந்த சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதை ஈடுசெய்யலாம். ஆனால் பெரும்பாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அப்படி உடலில் தாமிரம் குறைந்தால் பல அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அப்படி என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்..? அதன் குறைபாட்டை போக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தாமிரம் என்றால் என்ன..?

தாமிரம் ஒரு கனிமமாகும். இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் தாமிரம் இல்லாதது ஹைபோகுப்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது. தாமிரம் மூளை, இரத்தம் போன்றவற்றில் அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது. தாமிரம் எலும்புகள் வலுவடையச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே, அனைவரும் தினமும்  வயதுக்கு ஏற்ப தாமிரத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



தாமிரம் குறைபாட்டின் அறிகுறிகள் : 

ஹெல்த்லைனின் கூற்றுப்படி, தாமிரக் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிவது எளிதானது அல்ல, ஏனெனில் அதன் அறிகுறிகள் வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். உடலில் தாமிரம் இல்லாததால், உடலின் ஆற்றல் நிலை, நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது.

பிற அறிகுறிகள்...

* உடல் குளிர்வதுபோல் உணர்தல்
* எளிதில் எலும்புகள் வலுவிழந்து உடையக்கூடும்
* களைப்பாக உணர்வீர்கள்
* வெளிறிய தோல்
*அடிக்கடி நோய்வாய்ப்படுதல்
*மோசமான உடல் வளர்ச்சி
*தோல் அழற்சி
*தசை வலி

போன்றவை தாமிர குறைபாட்டினால் ஏற்படும் உடல் பிரச்சனைகளாகும்

உடலில் தாமிரம் இல்லாததால், நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படலாம். இரத்த சோகையில், உடலில் இரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறை ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இது நிகழ்கிறது. எனவே இது உங்களை சோர்வடையச் செய்யும்.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்த தண்ணீரை தினமும் இப்படி குடித்து வந்தால் இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க..

தாமிரச் சத்து குறைவினால் தோல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். இருப்பினும், மஞ்சள் காமாலை இருந்தாலும், தோல் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மறவாதீர்கள். தாமிர குறைபாடு கண்பார்வை, முடி முன்கூட்டியே நரைத்தல், எலும்பு வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகள், முடி மற்றும் தோல் நிறமி குறைதல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

தாமிர குறைபாடு அட்டாக்ஸியாவை ஏற்படுத்தும். இதில், உடல் இயக்கங்களின் மீது கட்டுப்பாடு இருக்காது. உடலில் தாமிரச் சத்து குறைவதால், மனிதனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.



தாமிரச் சத்து குறைபாட்டை போக்குவதற்கான வழிகள் :

ஸிங்க் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிகமாக உட்கொண்டால் தாமிரம் குறையும். எனவே ஸிங்க் உணவு அல்லது சப்ளிமெண்டுகளை அதிகமாக எடுக்கிறீர்கள் எனில் மருத்துவர் ஆலோசனைப்படி அதை குறைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 2 மில்லிகிராம் தாமிரத்தை உட்கொள்வதன் மூலம் அதன் குறைபாட்டைப் போக்கலாம். எனவே தாமிரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் இந்த தாதுப் பற்றாக்குறையைப் போக்கலாம். முந்திரி, சூரியகாந்தி விதைகள், முழு தானியங்கள், கோதுமை, ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் தாமிரம் அதிகமாக உள்ளது.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Copper benefits, Copper Deficiency

அடுத்த செய்தி