ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்காலத்தில் கொசு வத்திகளை அளவாக பயன்படுத்துங்க.... இல்லையெனில் இந்த பாதிப்புகள் உண்டாகலாம்..!

மழைக்காலத்தில் கொசு வத்திகளை அளவாக பயன்படுத்துங்க.... இல்லையெனில் இந்த பாதிப்புகள் உண்டாகலாம்..!

கொசு வத்தி

கொசு வத்தி

கொசுவத்தி சுருள்கள் அல்லது தூபக் குச்சிகளில் சுவாச நோய்களை உண்டாக்கும் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அதிலிருந்து வெளிவரும் புகை சிகரெட் புகையை போலவே ஆபத்தானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பருவமழை துவங்கியுள்ள நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கொசுக்களை விரட்ட, பொதுவாக வீடுகளில் கொசுவத்தி சுருளை அல்லது கொசு விரட்டி தூபக் குச்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றை பயன்படுத்துவது கொசுக்களிலிருந்து நிவாரணம் கிடைத்தாலும்அதிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகை மற்ற நோய்களையும் ஏற்படுத்தும்.

  ஹெல்த்ஷாட்டின் கூற்றுப்படி, கொசுவத்தி சுருள்கள் அல்லது தூபக் குச்சிகளில் சுவாச நோய்களை உண்டாக்கும் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அதிலிருந்து வெளிவரும் புகை சிகரெட் புகையை போலவே ஆபத்தானது. சுருள்களில் பென்சோ ஃப்ளோரோஎத்தேன் மற்றும் பென்சோ பைரின்ஸ் எனப்படும் பொருட்கள் உள்ளன. அவை ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும். இப்படி கொசுவத்தி சுருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  ஆஸ்துமா : நீங்கள் ஒரு மூடிய அறையில் நீண்ட நேரம் கொசுவத்தி சுருளைப் பயன்படுத்தினால், அதன் காரணமாக ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புகை நுரையீரலில் குவிந்து, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பை உண்டாக்கலாம். இதன் காரணமாக கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். பலருக்கு எரிச்சல் மற்றும் நரம்புத் தளர்ச்சி பிரச்சனையும் ஏற்படலாம். அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

  Also Read : எச்சரிக்கை... ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படியொரு பிரச்சனை ஏற்படுமா.?

  தோல் வெடிப்பு : நீங்கள் நீண்ட நேரம் சுருளை பயன்படுத்துவதால் அது தோலில் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, சருமத்தின் பொலிவு மறைந்துவிடும்.

  கண் பாதிப்பு : கொசுவத்தி சுருள்கள் கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக கண்களில் எரிச்சல், பார்வை மங்கலாக தெரிதல், கண்புரை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

  மூச்சு திணறல் : சுருள்களில் உள்ள பென்சோ பைரின்ஸ் மற்றும் பென்சோ புளோரோஎத்தேன் எனப்படும் இரசாயனங்கள் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. இதனால், பலர் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே முடிந்தவரை மிக அருகில் வைக்க வேண்டாம்.

  Also Read :  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  குழந்தைகளுக்கும் பிரச்சனை : 6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அல்லது வளர்ந்த குழந்தைகள் உள்ள வீட்டில் தூபக் குச்சிகள் மற்றும் சுருள்கள் இரண்டையுமே பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்களே எச்சரிக்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் புகை அவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறும்.

  கொசுக்களை ஒழிக்க வீட்டு வைத்தியம்

  கடுகு எண்ணெயில் கொத்தமல்லியை அரைத்து ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து வீட்டைச் சுற்றி வைக்கவும்.

  வீட்டில் சாமந்தி, லாவெண்டர், துளசி போன்ற செடிகளை வளர்க்கலாம். அதன் வாசனை கொசுக்களை விரட்டும்.

  வேப்ப இலைகளை எரித்து கொசுக்களை விரட்டலாம்.

  இரவில் கொசு வலை கட்டி தூங்கலாம்.

  அதோடு குறிப்பாக வீட்டிற்குள்ளேயும், வீட்டை சுற்றிலும் தூய்மையை கடைபிடிக்கவும்,அடைப்புகள் இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Health tips, Mosquito