ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

புதுமணத் தம்பதிகளே... ஹனிமூன் தொற்று பற்றி தெரியுமா..?

புதுமணத் தம்பதிகளே... ஹனிமூன் தொற்று பற்றி தெரியுமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 26 : திருமணமான புதிதில் பல பெண்களுக்கும் இந்த சிறுநீரக கிருமித் தொற்று பிரச்சனை வரலாம். இது சிறுநீரில் ஏற்படும் ஒரு பாக்டீரியா கிருமித் தொற்று ஆகும்.

கடந்த இருபத்தைந்து வாரங்களாக நாம் திருமணத்திற்கு முன்பு எழும் 25 சந்தேகங்களை அலசினோம். இந்த வாரத்திலிருந்து திருமணமான பின் வரக்கூடிய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக அலசலாம் .

ஹனிமூன் சிறுநீர் தொற்று :

நவீனாவும் அவர் கணவரும் அன்று காலையிலேயே மருத்துவமனையில் காத்திருந்தனர். மஞ்சள் மின்னிய தாலிச்சரடு புதிதாய் திருமணமானவர்கள் என்பதை உணர்த்தியது. வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு நவீனா தன்னுடைய பிரச்சனையை கூறினார்.

"டாக்டர்! எனக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. நேற்றிலிருந்து லேசான காய்ச்சலும், வயிற்றில் வலியும், யூரின் பாஸ் பண்ணும் போது எரிச்சலும் உள்ளது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த ஒரு மாதத்திலேயே இதுபோல் இரண்டு தடவை வந்துவிட்டது.

ரொம்ப பயமா இருக்கு டாக்டர்!." என்றார்.

இப்போது நவீனாவின் கணவர் கேள்விகளை அடுக்க தொடங்கினார். "ஏன் இந்த பிரச்சினை இப்படி அடிக்கடி வருகிறது??? ஏதாவது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமோ???? எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏதாவது சாப்பிடலாமா? இதுக்கு ஏதாவது டெஸ்ட் எடுக்கலாமா? டாக்டர்!!, ஒருவேளை, கர்ப்பமா இருந்தா ஏதாவது சிக்கல் வருமா? "

நாங்க நிறைய ட்ராவல் பண்ணிணோம். அப்ப பப்ளிக் டாய்லெட் உபயோகப்படுத்தினதுனால தான் இந்த பிரச்சனை வந்திருக்குமோ?"என்றார்.

என் ஆலோசனை:

திருமணமான புதிதில் பல பெண்களுக்கும் இந்த சிறுநீரக கிருமித் தொற்று பிரச்சனை வரலாம். இது சிறுநீரில் ஏற்படும் ஒரு பாக்டீரியா கிருமித் தொற்று ஆகும். இதற்கு பெயரே தேனிலவு தொற்று(honeymoon cystitis) என்று கூறுவர் . தாம்பத்திய வாழ்க்கையை (உடலுறவு) முதன்முதலில் துவங்கும் போது ஏற்படும் மாறுதல்களால் இவ்வாறு தொற்று ஏற்படுகிறது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பூரணமாக குணமாகும். பொதுவாக திருமணமான ஒரு வருடம் வரை இதுபோன்று கிருமித் தொற்றுகள் வரலாம்.

பெண்குயின் கார்னர் 25 : அடிக்கடி வரும் தலைவலிக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது திருமண வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குமா..?

இதற்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்

சிறுநீர்ப் பரிசோதனை- முக்கியமாக கல்ச்சர் பரிசோதனை அவசியம் தேவைப்பட்டால் சிறுநீரக ஸ்கேன் கேவிபி சிறுநீரகத்தில் ஏதேனும் பிறவிக் குறைபாடுகள் அல்லது கற்கள் இருக்கிறதா? என்பதை பார்க்கலாம்.

இது தவிர , ரத்தத்தின் அளவு Hb ,%, மற்றும் சர்க்கரை இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க சர்க்கரை அளவு, சிறுநீரகத்தின் வேலையை சோதிக்கும் யூரியா, கிரியாடினின் போன்றவை.

மருந்துகள் :

* முதலில் சிரப்புகள் இவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கும் பொழுது நல்ல குணம் கிடைக்கும். அவை பல பெயரில் (சிட்ரால்கா, யூரிலைசர் )உள்ளன.

* மேலும் காய்ச்சல் வலி முதலியவை இருந்தால் அதற்குரிய மருந்துகளையும் எடுக்கலாம் .

* இதற்கு அடுத்தபடியாக கிருமிக் கொல்லி மருந்துகள்.

கர்ப்பமாக இருந்தாலும் கருவை பாதிக்காத கொல்லி மருந்துகள் உள்ளன.

* ஒரு சிலருக்கு கல்ச்சர் டெஸ்ட் பார்த்த பிறகு அதில் வரும் முடிவை வைத்து கிருமி கொல்லி மருந்து கொடுப்பது முடிவு செய்யலாம்.

* எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் பி விட்டமின் சி வைட்டமின் டி உள்ள மாத்திரைகளை எடுக்கலாம்.வராமல் தடுப்பது மிகவும் முக்கியமாகும். புதிதாக திருமணம் ஆனவர்கள், இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள்,

* தாம்பத்திய உறவுக்கு முன்பாக முழுமையாக சிறுநீர் கழித்துவிட்டு நீர் கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* அவ்வாறு சுத்தம் செய்யும் பொழுது முன் பக்கத்தில் இருந்து நீரை ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

* பகல் நேரத்தில் முடிந்தளவு நிறைய தண்ணீர் ஆகாரங்களை திரவங்களை நீர் சத்து உள்ள பழம் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் சிரப்புகளையும் மருந்துகளையும் பத்திலிருந்து இருபது நாட்கள் ஒரு மாதம் வரை கூட தொடர வேண்டி இருக்கலாம்

99% அனைவருக்கும் இதிலேயே முழுமையாக குணம் கிடைத்து விடும்.

பரிசோதனைகள் எல்லாம் செய்த பிறகு மாத்திரைகளை தொடர்ந்து பத்து நாட்கள் வரை எடுத்துக்கொண்டார். இப்பொழுது முழுமையாக பிரச்சனைகளில் இருந்.து விடுபட்டு சந்தோஷமாக இருக்கிறார். திருமணமான புதிதில் வரும் சிறுநீர் தொற்று( யூரின் இன்பெக்சன் urine infection) மிக மிக பொதுவான ஒரு பிரச்சனை. தேவையான சிகிச்சை எடுக்கும் பொழுது முழுமையாக குணமாகும்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Kidney Disease, Sex doubts, Sex infection, Sexual Wellness, பெண்குயின் கார்னர்